கைகூப்பி வணங்கிடுவோம்

கைகூப்பி வணங்கிடுவோம்

1 mins read
Google News Preferred Icon

அன்பான கொரோ னாவே

நின்று நிலையாக நிலமெல்லாம்

குடும்ப விருத்தி யுடன்

குழந்தை குட்டி பெற்றெடுத்து

நலமாக நீ வாழ

நலமிழந்த மக்க ளெல்லாம்

உலகெலாம் உயிர் கொடுத்து

உனை வளர்த்த நாடுகளை

அரசின் அறிவுரையை

செவிமடுக்கா

அறிவுசார் பெரு மக்கள்

எனக்குத் தெரியு மென்று

எள்ளி நடமாடி டுவார்

பாகு பாடு இல்லாமல்

பதம் பார்த்த பெருநோயே

எத்தகைய மருந் துக்கும்

எதிர் மறையாய் வாழுமுனை

மருந்தொன்றை நாம் கண்டால்

நோயொன்றை புதுப் பெயரில்

புலம்பெயர்ந்து போகு முனை

போகுமிடம் நாம் அறியோம்

வரம் வாங்கி வந்ததுபோல்

வந்தமர்ந்து விருந்தின ராய்

தரம் தாழ்ந்து மக்கள்தனை

தலைமுறையை மறக்க வைத்து

கொடை கொடுக்கும் வள்ளல்போல்

கொடுமை செய்த

கொரோனாவே

தடை விதிக்கும் அரசுகளை

தாரை ஊதி வாழ்த்தவேண்டும்

தொற்றுவதும் பற்று வதும்

முற்றுவதும் முடக்கு வதும்

கற்ற றிந்த பெரியவரை

கல்லறைக்குள் அடக்கு வதும்

களப்பணி செய்த வரை

காலனுக்கு கொடுத்து விட்டு

கலங்கி நிற்கும் பெற்றவரை

கைகூப்பி வணங் கிடுவோம்!