மணல் நதி

தலைப்பு: மணல் நதி

நூலா­சி­ரி­யர்: பால­கு­மா­ரன்

பதிப்­பா­ளர்: சென்னை : விசா பப்­ளி­கே­ஷன்ஸ், 2013.

குறி­யீட்டு எண்: Y Tamil BAL

அனைத்து உரி­மை­களும் காப்­பு­ரி­மைக்கு உட்­பட்­டவை.

மணல் நதி புகழ்­பெற்ற நாவ­லா­சி­ரி­யர் பால­

கு­மா­ரன் எழு­திய இரு சிறு­க­தை­களை உள்­ள­டக்­கிய நூல்.

வாழ்க்கை என்ற மணல் நதி­யில் நீரால் மகிழ்ச்­சி­யும் வெப்­பத்­தால் துக்­க­மும் கலந்து இருப்­பதை ஒப்­பிட்­டுச் சொல்­கிறது முதல் கதை. பேருந்­தில் காசி, கயா, அல­கா­பாத் ஊர்­க­ளுக்கு ஆன்­மீ­கச் சுற்­றுலா செல்­லும் ஐந்து கதா­பாத்­தி­ரங்­க­ளின் ஊடே உரை­யா­ட­லாய் விரி­கிறது கதை. பித்­ருக்­க­ளுக்­குச் செய்­யும் சிரார்த்­தம் பற்றி ஆன்­மீ­கத் தத்­துவ விளக்­கங்­க­ளு­டன் சீனி­வா­சன் என்ற கதா­பாத்­தி­ரம் விவ­ரிக்­கி­றார். ஒவ்­வொரு சடங்­கும் முறை­யான ஓர் அமைப்­பைக் கொண்­டுள்­ளது. அதே நேரத்­தில் அதி­லி­ருந்து மாறு­பட வேண்­டிய சூழ்­நி­லை­களில் மாற்று வழி­யும் உள்­ளது. உதா­ர­ண­மாக கண­வன், மனைவி சேர்ந்து செய்­யும் சடங்­கில் யாரா­வது ஒரு­வர் வர முடி­யா­விட்­டால் ஒரு கைப்­பிடி புல் கட்டு அதற்­குச் சம­மா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

தன்னை எவ்­வ­ள­வு­தான் துன்­பு­றுத்­தி­னா­லும் இறந்த கண­வ­னின் ஆத்மா சாந்தி அடைய காரி­யங்­கள் செய்­யும் ஒரு மனைவி. ஏழேழு ஜென்­மங்­க­ளுக்கு இவரே கண­வன் ஆக வேண்­டும் என்று முடிக்­கா­ணிக்கை அளிக்­கும் இன்­னொரு மனைவி. இது­போன்ற முரண்­பட்ட பாத்­தி­ரங்­க­ளின் சங்­க­மத்­தில் உரு­வான கதை மணல் நதி.

அடுத்த கதை "நேற்று வரை ஏமாற்­றி­னாள்". கணே­சன், நீலா, சந்­துரு என்ற முக்­கோ­ணக் கதா­பாத்­தி­ரங்­க­ளின் உற­வில் ஏற்­படும் சிக்­க­லும் அந்­தச் சிக்­கலை எதார்த்த நடை­மு­றை­களில் தீர்க்­கும் மன்னி என்ற கதா­பாத்­தி­ர­மும் கதையை எடுத்­துச் செல்­கின்­றன. கண­வன் மனைவி அன்­னோன்­யம், கல்­யா­ணத்­துக்கு முன்­னி­ருக்­கும் நட்பு, காதல் பற்­றிய வெளிப்­ப­டைத்­தன்மை, அத­னால் ஏற்­படும் சிக்­கல்­கள் ஆகி­யவை கதை­யின் மையக் கருத்­து­கள்.

நூலா­சி­ரி­யர் தியான நிலை­யில் தனக்கே உரிய பாணி­யில் கதை­களை வித்­தி­யா­ச­மாக முடித்­தி­ருப்­பது இன்­னும் சிறப்பு.

இந்த நூல் கிடைக்­கும் நூல­கங்­க­ளின் விவ­ரங்­க­ளைப் பெற: http://catalogue.nlb.gov.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!