உனக்கு சரியாக ஆங்கிலம் பேச தெரியாது
உனக்கு அழகாக உடுத்த தெரியாது
உனக்கு நாகரிகமாக நடந்துகொள்ள தெரியாது
உனக்கு அன்பை வெளிப்படுத்த தெரியாது, பாசமாகப் பேச தெரியாது
உனக்கு என் நண்பர்கள் யார் என்று தெரியாது
உனக்கு நான் என்ன படித்தேன் என்பதுகூட சரியாக தெரியாது
எங்களின் நலன் தவிர வேறேதும் உனக்கு தெரியாது அப்பா.

