வாழ்வின் விந்தை க. பார்த்திபன்

வாழ்வின் விந்தை க. பார்த்திபன்

1 mins read

எங்களுக்கு விந்தையானவரே

தாரகமந்திரம் உங்கள் வார்த்தை

எத்திசை செல்ல வேண்டுமென்று தீர்மானித்த தீர்க்கதரிசி

எங்கள் வாழ்வின் துணைவேந்தரே

வீடென்னும் பல்கலைக்கழகத்தில்

எங்களை ஓவியமாக்கிய ஓவியரே

தெவிட்டாத அன்பும் அறிவும் புகட்டி

சுறுசுறுப்பாக உழைக்க தைரியம் கொடுத்து

எங்களைச் சாதிக்க வைத்த

தொலைநோக்கு பார்வையோடு எதிர்காலத்தை

தோழமையோடு திட்டமிட்ட உத்தமரே

எங்கள் வாழ்வை பிரகாசிக்க வைத்தவரே

உங்கள் நினைவோடுதான் எங்கள் வாழ்க்கைப் பயணம்!