நன்றியென்பது யாதெனில்...

நன்றியென்பது யாதெனில்...

1 mins read
Google News Preferred Icon

நன்றியென்பது,

நன்றிக்கானது மட்டுமல்ல!

நன்றி அறிதலின்...

நலம் விழைதலின்...

நன்மை பயக்க,

நாளும் முனைதலின்...

நல் செய்கையின்

பாதை திருத்தலின்...

நன்றாய் கொண்டோர்

உள்ளம் மகிழ்தலில்...

நன்றியெனும் மாமழைப்

பொழிதலில்,

நல்லறம் செழிக்கும்

நாடெங்கும் கேளாய்...

நன்றியெனும்,

தூயப் பரிமாறலில்

புனிதமாகுமே இப்பூவுலகு

தினமும்...

நன்றி அறிவாய்

நன்றி செய்வோம்

நன்றி நமக்குள்

நல்லென முளைக்க

நன்றோர் போன்றோர்

விருத்தி செழிக்க

நன்றியின் சுடரொளி

வையத்துள் வீச,

நலம் பல மலர்ந்தே

சுகிக்குமே வையகம்!

நன்றி காண்... நன்றி செய்...

நன்றியே நல்வாக்கே...

எம் நாவினில் நீ

நிதமமர்வாய்...

நன்றியாகம நாமுள மருந்தே!

- நெப்போலியன்