காத்திருப்பு!

காத்திருப்பு!

1 mins read
Google News Preferred Icon

மாணவப் பருவத்தில்

விடுமுறையைக் கழிக்க

உல்லாசப் பயணம் செல்ல

காத்திருந்தோம்

வேலைக்குச் சேர்ந்ததும்

ஓய்வுதேடி

வெளிநாடு செல்ல

காத்திருந்தோம்

மணமானதும்

இணையுடன் சேர்ந்து

இன்பச்சுற்றுலா செல்ல

ஏக்கத்துடன் காத்திருந்தோம்.

சோர்வு நம்மைத்

தழுவும்போதெல்லாம்

மனதுக்கு புத்துணர்ச்சி தர

இயற்கை எழில்கொஞ்சும்

இடம்தேடிச் செல்ல

காத்திருந்தோம்.

குறைந்த கட்டண

விமானச் சேவை பற்றிய

தகவல்கள் காதுக்கு

எட்டும்போதெல்லாம்

எங்கு செல்லலாம் என

இணைய ஏடுகளைப்

புரட்டி புரட்டிப் பார்த்தோம்.

அவை அனைத்தையும்

புரட்டிப் போட்டுவிட்டதே

இந்தத் தொற்று...

- இர்ஷாத் முஹம்மது