தேக்கா பார்க்க ஏக்கம்

தேக்கா பார்க்க ஏக்கம்

1 mins read

விடுமுறை நாட்களில்

விழாக்கோலம் காணுமிடம் தேக்கா.

நண்பர்களைக் கண்டு...

நட்பாய் நாலு வார்த்தை பேச..

உறவுகளைக் கண்டு...

ஊர் கதைகள் பேச...

சொந்தங்கள் எல்லாம் தேடி

வந்து சேருமிடம்!

ஆனால் இன்று....

கடைவீதிகளும்

காய்கறிக் கடைகளும்

எங்களை காணாது

கலங்கி நிற்கின்றன!

நகைக்கடைகள் நாங்கள்

இல்லாத நாட்களைக் கடத்துகின்றன!

உண்டு மகிழ்ந்த..

உணவுக்கடைகள் எங்களை..

என்று வருவோமென்று..

எதிர்பார்த்து காத்திருக்கின்றன!

தொலைபேசிக் கடைகள் கூட்டம்

தொலைத்து நிற்கின்றன!

வங்கிகள் எங்கள்

வருகையை வரவேற்கின்றன!

உற்சாகபான கடைகள்..

உற்சாகமின்றி உள்ளன!

சிராங்கூன் கடைகள் கண்டு

பதினான்கு மாதம் ஆனது!

அந்த

தேக்கா பார்க்க மனம்-

ஏக்கமாக உள்ளது!

- தென்மாப்பட்டு அ.ராஜா