பாரினில் காணாக் கவி

பாரினில் காணாக் கவி

1 mins read

கி. சுப்பிரமணியம்

கம்பனைத் தாண்டிக் கவியில்லை என்றோர்க்கு

சிம்மமென ஏடெடுத்த செம்மல் - இம்மையில்

பாரதி போன்றதொரு பாட்டுப் புலவன்போல்

பாரினில் கண்டதில்லை பின்

கற்றோர் புகழக் கவிதை இயற்றாது

மற்றோரும் போற்றி மகிழ்ந்திட - வற்றா

எளிய நடையினில் எல்லோரும் பாடிக்

களிப்புறச் செய்த கவி

முண்டாசு கட்டி முழக்கமிட்டுப் பாடுவான்

கண்களில் தீப்பொறிகள் கக்கிட - எண்ணில்

புவியில் எழுச்சிமிக்க இன்பத் தமிழில்

கவிபாட இன்னொருவன் காட்டு