அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்

1 mins read

கம்பங்கள் இன்றில்லை என்றபோதும்

நகரங்கள் இன்றுவர காரணம்யார்?

நம் முன்னோரை, பாடுபட்ட பெரியோர்தம்மை

நம்மால் மறந்திடத்தான் முடிந்திடுமோ அருமைக்கண்ணே!

நல்லவகை சாலைகளும் அருமைமிகு வண்டிகளும்

நல்லபடி வந்த தெலாம் யாரால் யாரால்?

கம்பத்து வீடுகளில் இருந்ததென்ன?

மின்சாரம் இன்றுபோலில்லை, இருந்தவை ஆழக் கிணறுகளே

குளித்திடவும் துணி துவைத்திடவும் உணவுபல சமைத்திடவும்

கிணற்றுநீர்தான் உதவினவாம் அருமைக் கண்ணே! என்றும்

முன்னோரை மறவாமை வேண்டும்,

பின்னோரை ஊக்குவிக்க வேண்டும்,

வளமெல்லாம் வந்திடுமாம்

நலமெல்லாம் பெருகிடுமாம் அருமைக்கண்ணே!