முகக்கவசம்

முகக்கவசம்

1 mins read

- இரா சத்திக்கண்ணன்

கொரானாவிற்காக

முகக்கவசம் அணிவது

சௌகரியமாகத்தான்

இருக்கிறது!

பிடிக்காதவர்

எதிரேவந்தால்

காணாததுபோல்

சென்றுவிடலாம்!

தெரிந்தவரே

எதிர்வரினும்

அசட்டுப்புன்னகை

தேவையில்லை!

முக ஒப்பனைகள்

முகப்பூச்சுக்கள்

அதிகம்

தேவையில்லை

வேண்டாத

வார்த்தைகள்

'நா' 'வன்மை'

அதிகம்

வெளிப்படுவதில்லை

பொட்டிப்பாம்பாய்

அடங்கிக்கிடக்கிறது

நாக்கு!

காதுகளை

இறுகப்பிடித்து

அதிகம்

கேட்கவைக்கிறது!

இருமலும்

தும்மலும்

யோசித்துதான்

வருகிறது

மூச்சிரைக்கிறது

வேர்வை

யார்

யாருடன்

இருக்கிறார்கள்

செல்கிறார்கள்

யார்

யாருக்கு ?

என்பதைப்பற்றி

சிந்தை

அறியமுற்படுவதில்லை!

முகத்திரையில்

உண்மை

முகம்

தெரிகிறது!