ஞானம்

ஞானம்

1 mins read

கண்குளிர செவிமலரும்

கண்டுணர நிலையுயரும்

நன்குணர நற்காலும்

நலமருளும் அருவுருவும்

வளர்பிறையாய் ஒளிபெருகும்

வண்ணமிகு அணுக்களாலே

அளப்பரிய ஆற்றலையே

அனுதினமும் உள்வாங்கி

நீரின்று உப்பெடுக்க

நித்தியமும் கரைவாயே

பிரிகின்ற அணுக்களிலே

புதைக்கின்ற ஞானத்தை

நிலத்தினிலே சத்தெடுத்து

நிலைத்திடவே வேரூன்று

உலகமுமே உய்வுறவே

உற்றதுணை புரிந்தோங்கு!

- இராம நாச்சியப்பன்