சுகமான சுமைகள்!

சிறுகதை

சித அருணாசலம்

'திண்­டுக்­கல்.. செம்­பட்டி.. ஒட்­டன்­சத்­தி­ரம்.. தாரா­பு­ரம்.. பல்­ல­டம்.. கோயம்­புத்­தூர்...' என்று கத்­திக்­கொண்டே தனது பேருந்­துக்கு ஆள் சேர்த்­துக் கொண்­டி­ருந்­தார் அரசு போக்­கு­வ­ரத்­துக் கழ­கத்­தின் நடத்­து­னர். மதுரை ஆரப்­பா­ளை­யம் பேருந்து நிலை­யம் ஆர­வா­ர­மாய் இருந்­தது.

நான் இன்­னும் வண்­டிய எடுக்­க­வே­யில்லை அதுக்­குள்ள என்ன கூவுற என்று முன்­னால் இருந்த வண்­டி­யின் ஓட்­டு­நர் முறைக்க, சரிண்ணே, சரி கிளம்­புங்க நேர­மாச்­சுன்னு சமா­தா­னப்­ப­டுத்தி விட்டு திரும்­ப­வும், 'திண்­டுக்­கல்.. செம்­பட்டி.. ஒட்­டன்­சத்­தி­ரம்.. தாரா­பு­ரம்.. பல்­ல­டம்.. கோயம்­புத்­தூர்...'ன்னு சுருதி சுத்­தமா கூவிக்­கொண்­டி­ருந்­தார்.

சோழ­வந்­தான் ஏறிக்­க­லா­மான்னு கேட்டு வந்த பய­ணி­யைக் கடிந்து கொண்­டி­ருந்­தார் நடத்­து­னர். டவுன் பஸ்­ஸுன்னு நினைச்­சுட்­டா­னுங்­கன்னு புலம்பிவிட்­டுத் தொடர்ந்­தார் தனது கூவு­தலை.

கோயம்­புத்­தூர் செல்­கிற அந்த வண்­டி­யைத் தேடிக் கண்­டு­பி­டித்து வந்து ஏறி­னார் ஹேம­லதா, தனது இரண்டு குழந்­தை­க­ளு­டன்.

ஒவ்­வொரு ஊரின் பெய­ராக அவர் சொல்­லியபோது, அந்த மாமா என்ன சொல்­றாரு என்று கேட்க ஆரம்­பித்­தான் அம்­மா­வி­டம், மூத்­த­வன் கிரி­த­ரன். சும்மா தொண தொணன்னு அனத்­தாத, பஸ்­ஸுல உக்­காந்­த­தும் உன் கேள்­வியை கேளுன்னு அவனை அடக்­கி­னாள் ஹேமா. அவ­னுக்கு வயது ஏழு . சின்­ன­வள் மோனிகா இரண்டு வயது.

பேருந்தில் ஏறும்­போதே நடத்­து­ன­ரி­டம், சார் டிக்­கெட் என கேக்க, தன்னை சார் என்று ஹேமா அழைத்­த­தும், குழந்­தை­யு­டன் இருந்­த­தும், அவ­ருக்­குப் பெரிய கரி­ச­னத்தை ஏற்­ப­டுத்தி விட்­டது. ஏறுங்­கம்மா, அப்­பு­றம் வாங்­கிக்­க­லாம் என்று சொல்­லிக்­கொண்டே, ஹேம­ல­தா­விற்கு பெட்­டி­க­ளைத் தூக்­கிக் கொடுத்து உதவி செய்­தார்.

பொது­வா­கவே ஹேமா மிக­வும் அமை­தி­யா­ன­வர். அதிர்ந்து பேசா­த­வர். எல்­லோ­ரை­யும் மதிக்­கும் குணம் அதி­க­மா­கவே கொண்­டி­ருந்­தார். சென்ற இட­மெல்­லாம் பிரச்­னை­களை அணு­க­வி­டா­மல் ஓரங்­கட்டி விடு­வார். இப்­ப­டிப்­பட்ட குணங்­கள் அடிப்­ப­டை­யா­கவே இருந்­த­தால், தன்­னிச்­சை­யா­கவே இது­போன்று பேசக்­கூ­டி­ய­வர்.

பிறந்த இரண்டு வரு­டத்­தி­லேயே பெற்­றோ­ரோடு சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­வன் கிரி­த­ரன். தமி­ழில் புல­வர் பட்­ட­மும், முது­க­லைப் பட்­ட­மும் படித்­தி­ருந்த அவ­னது தந்தை சுந்­த­ரே­ச­னுக்கு எளி­தில் சிங்­கப்­பூர் உயர்­நி­லைப் பள்­ளி­யில் ஆசி­ரி­யர் பணி கிடைத்­தது. குடும்­பத்­தோடு சிங்­கப்­பூர் வந்­து­விட்­டார். சிங்­கை­யில் பிறந்­த­வள் தான் மோனிகா. இதற்கு முன்பு இந்­தி­யா­வுக்கு ஒவ்­வொரு வரு­ட­மும் வந்­தி­ருந்­தா­லும், இந்த முறை பல விஷ­யங்­கள் அவ­ளுக்­குப் புதி­தாக இருந்­தது.

கிளம்­பு­கிற நேரம் வந்­த­தால், ஓட்­டு­ன­ரும், நடத்­து­ன­ரும் வண்­டி­யில் ஏறி­னார்­கள். தனது இருக்­கை­யில் உக்­கார்ந்­த­துமே, ஓட்­டு­நர் சிடு­சி­டுன்னு முகத்தை வச்­சிக்­கிட்டு, யாரும்மா இங்க கூடைய வச்­சி­ருக்­கது என்று கோபத்­து­டன் சத்­த­மா­கக் கேட்­டார். ஒரு பெரிய கூடை என்­ஜி­னுக்­குப் பக்­கத்­தில் இருந்­தது.

பக்­கத்­துல இருந்த பாட்டி, "ஏம்பா, நான் தான் வச்­சேன்"ன்னு பதில் சொல்ல, நல்லா வச்ச போ, இங்­கன வச்­சீன்னா, நான் எங்க கியர் போடு­ற­தாம்?

ஏன் கூடைல போடு, காலி­யாத் தான இருக்­குன்னு வெகு­ளியா பதில் சொல்­லுச்சு பாட்டி.

ஓட்­டு­ன­ருக்கு ஆத்­தி­ரம், கிழவி நக்­கலா சொல்­லுதா, இல்லை தெரி­யாம உள­ரு­தான்னு குழம்பி,

ஏ! பெரி­யம்மா, இது என்ன கீரையா கூடைல போடா, கியர் தெரி­யும்ல. தள்ளி வை கூடை­யைன்னு அடுப்­புல போட்ட உப்பா வெடிச்­சார்.

பக்­கத்­துல இருந்­த­வு­க­ளெல்­லாம் சிரிச்சு பாட்­டிக்கு விளக்­கிச் சொல்ல, கூடை நகர்ந்­தது கியர் போட வச­தி­யாக. கூடவே அந்த வெள்­ளந்தி மன­தின் வெளிப்­ப­டை­யாக காவிக் கறை படிந்த பற்­கள் சிரித்­தது.

அட நான் ஒரு வெவ­ரங்­கெட்ட சிறுக்கி என்று முன­கி­யது. பற்­களில் காவி இருந்­தா­லும் சொற்­களில் சூது வாது தெரி­யாத கிழவி.

அடுத்த வரி­சைல இருந்து இதை­யெல்­லாம் பாத்­துக்­கிட்­டி­ருந்த கிரி­த­ர­னுக்கு சிரிப்பை அடக்க முடி­யலை. அம்­மா­வைக் கூப்­பிட்டு, இந்­தப் பாட்­டிக்கு கியர்னா என்­னன்னே தெரி­ய­லம்­மான்னு சிரிச்­சான்.

ஒரு அதட்டு போட்­டாள், ஹேமா. பெரி­ய­வங்­க­ளைப் பார்த்து அப்­ப­டி­யெல்­லாம் கேலி பேசக் கூடாது என்­றாள். மற்­ற­வர்­க­ளின் இய­லா­மை­யையோ, அறி­யா­மை­யையோ சிறி­த­ளவு கூடத் தொட்­டுப் பார்க்­கக் கூடாது என்­பது அவ­ளது உறு­தி­யான எண்­ணம். உயர்ந்­தது என்று கூடச் சொல்­ல­லாம்.

வண்டி கிளம்­பி­ய­தி­லி­ருந்து ஒரே சீராக நல்ல வேகத்­தில் சென்­று­கொண்­டி­ருந்­தது. அனு­ப­வம் வாய்ந்த ஓட்­டு­ந­ராக இருந்­த­தால், அந்த 215 கிலோ மீட்­டர் தூர பய­ணத்­திற்­கான பக்­கு­வம் இருக்­கிற நம்­பிக்­கையை பய­ணி­க­ளி­டத்­திலே, கிளம்­பிய சில மணி நேரத்­தி­லேயே பதித்­தி­ருந்­தார்.

அன்­றைக்கு கதி­ர­வன் தனது கரங்­களை சுருக்­கிக் கொண்­ட­தால், வானம் மப்­பும் மந்­தா­ர­மா­க­வும் இருந்­தது.

மழை வந்­து­வி­டுமோ என்­கிற கவலை பேருந்­தில் இருந்த அனை­வருக்­குமே இருந்­த­து­போன்ற முக பாவ­னையை ஹேம­லதா கவ­னித்­துக் கொண்­டி­ருந்­தாள்.

ஜன்­னல் ஓரத்­தில் இருந்த கிரி­த­ர­னுக்கு மழை வந்­து­விட்­டால், வேடிக்கை பாக்க முடி­யாதே என்ற கவலை.

சம­ய­நல்­லூ­ரைத் தாண்­டி­ய­தும் பச்­சைப் பசே­லென்ற வயல்­வெ­ளி­களும், தொடர்ந்த தோப்­பு­களும் மிக­வும் ரம்­மி­ய­மாக இருந்­தன. பேருந்­தில் போவது பழக்­க­மில்லை என்­றா­லும், அவ­னுக்­குப் பிடித்­தி­ருந்­தது. உய­ர­மான இடத்­தில் இருந்து வேடிக்கை பார்ப்­பது கொஞ்­சம் கூடு­தல் மகிழ்ச்­சி­யைக் கொடுத்­தது.

திண்­டுக்­கல் தாண்­டி­ய­தும் தூரத்­தில் மலைத்­தொ­டர் தெரிய ஆரம்­பித்­தது. இவ்­வ­ளவு நீள­மான மலை­யெல்­லாம் எங்க இருந்து ஆரம்­பிக்­குது... அம்­மாட்ட கேக்­க­ணும். அவ­னுக்­குள்ள ஏகப்­பட்ட கேள்­வி­கள். முதல்ல சத்­தம் போட்­டுக்­கிட்டே இருக்­காரே இவ­ரப் பத்­திக் கேக்­க­ணும்னு நினைச்­சுக்­கிட்டே அம்மா பக்­கம் திரும்­பி­னான்.

ஏம்மா, சிங்­கப்­பூர்ல பஸ்­ஸுல டிரை­வர் மட்­டும் தான இருப்­பாரு. இவர் யாரும்மா, ரொம்­பப் பேசிட்டே இருக்­காரே அப்­ப­டின்னு, கேட்­டான். ஒரு சில திரைப்­ப­டங்­கள்ல பார்த்­தி­ருந்­தா­லும், நேரே பார்க்­கும்­போது கொஞ்­சம் வித்­தி­யா­சமா இருந்­திச்சு.

அவன் கேள்­விக்­காக காத்­தி­ருந்­த­து­போல விளக்க ஆரம்­பித்­தாள் ஹேம­லதா. தம்பி, அவர் தான் கண்­டக்­டர்.

என்­னது கண் டாக்­ட­ரம்மா?

கொழுப்­புடா உனக்கு, கண்­டக்­டர் என்று அழுத்­திச் சொன்­னார்.

தமிழ்ல எப்­ப­டிம்மா சொல்­ற­துன்னு கேட்­டான்.

உன் அப்­பாவ மாதி­ரியே இருக்­க­டான்னு செல்­லமா தலைல குட்டி சொன்­னாள், தமிழ்ல 'நடத்­து­னர்'னு சொல்­வாங்க'. சற்று விளக்­க­மா­கத் தொடர்ந்­தாள்.

இந்த வண்டி கிளம்­பு­ற­துல இருந்து, கோயம்­புத்­தூர் போற வரைக்­கும், வழில ஏறு­ற­வங்­க­ளுக்கு டிக்­கெட், அதா­வது பய­ணச்­சீட்டு கொடுக்­கு­றது, அந்­தந்த ஊர்ல பய­ணி­களை இறக்கி விடு­றது. டிரை­வ­ருக்கு, உனக்­குப் பிடிச்ச தமிழ்ல ஓட்­டு­ன­ருக்கு ஒத்­தா­சையா வழி பாத்­துச் சொல்­றது, கணக்­குப் பாக்­கு­றது, பய­ணி­க­ளோட பாது­காப்பை உறுதி செய்­றது. இப்­படி ஏகப்­பட்ட வேலை அவ­ருக்கு. சில சம­யம் பய­ணி­கள் கூட வராம லக்­கேஜ், அதா­வது, சுமை மட்­டும் வரும். அதுக்கு வேண்­டிய எல்­லாம் இவர் தான் பண்­ணு­வாரு.

அதெப்­ப­டிம்மா ஆளே இல்­லாம, பெட்­டி­யெல்­லாம் வருமா?

ஆமாடா, யார­வது வந்து வண்டி கிளம்­புற இடத்­துல ஏத்­தி­விட்டு, அதுக்­கான பணத்தை நடத்­து­னர் கிட்ட கொடுத்­து­ரு­வாங்க. இறங்­குற இடத்­துல ஆள் தயாரா இருப்­பாங்க. வந்து வாங்­கிட்டு போயி­ரு­வாங்க.

வேற யார­வது வந்து வாங்­கிட்டா?

அப்­படி எல்­லாம் வாங்க மாட்­டாங்­கடா, இன்­னொன்னு தெரி­யுமா, இந்த திரைப்­ப­டத்­துக்­கான படச்­சு­ருள் இருக்கு பாத்­தியா, அதை எல்­லாம் இந்த நடத்­து­னர் பேருந்து நிலை­யத்­துல ஆள வச்சு இறக்கி வச்­சு­ரு­வாரு. அது பாட்­டுக்கு இருக்­கும். அப்­பு­றமா சம்­பந்­தப்­பட்­ட­வங்க வந்து எடுத்­துட்டு போவாங்க. முந்­தி­யெல்­லாம் கொரி­யர் ரொம்ப பிர­ப­ல­மா­காத சம­யத்­துல இப்­ப­டித் தான் நடக்­கும். எல்­லாம் நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யில நடக்­கும்­டான்னு பெரிய விளக்­கத்­தைக் கொடுத்­தாள் ஹேமா.

செம்­பட்டி வந்­த­தும், பேருந்து நிலை­யத்­திற்­குள் வண்டி நுழைந்­தது. கொய்­யாப்­ப­ழத்­தை­யும், பலாச்­சுளை வெள்­ள­ரிக்­காய்­களை கூவி வித்­துக் கொண்­டி­ருந்த கூட்­டம் பஸ்­ஸுக்­குள்­ள­யும் வந்­தது. இந்த மாதிரி எல்­லாம் சிங்­கப்­பூர்ல பாக்க முடி­யா­துல்ல என்று சொன்ன அம்­மா­வி­டம், வாங்­கிக் குடும்மா என்று கேட்­டான். கொஞ்­சம் யோசிச்சு, கொய்­யாப்­ப­ழம் வாங்­கி­னாள் அப்­ப­டியே சாப்­பி­டப் போன­வனை தடுத்து, அவ­ச­ரக் குடுக்கை, கொஞ்­சம் இருன்னு சொல்­லிட்டு சுற்று முற்­றும் ஆள் இல்­லைங்­கு­றத உறுதி செஞ்­சுட்டு ஜன்­னல் வழியா பழத்தை தண்­ணீர் விட்­டுக் கழு­வி­னாள்.

பாத்­துக்­கிட்டே இருந்த கிரி, 'இதை­யும் சிங்­கப்­பூர்ல பாக்க முடி­யா­தும்மா' அப்­ப­டின்­னான் நக்­கலா.

முறைச்ச அம்­மா­வி­டம், கியர் பாட்­டியை காணும்மா, இறங்­கிட்­டாங்­க­ளோன்னு சொல்­லிக் கொண்டே கூடை இருக்­கான்னு பாத்­தான். அம்மா கூடை இல்லை. பாட்டி இறங்­கி­ருச்சு போல என்­றான். பாட்டி இருக்­கட்­டும், பாப்பா தூங்க ஆரம்­பிச்­சுட்டா, அவ விழுந்­தி­ரா­மப் புடிச்­சுக்­கன்னு சொல்லி விட்டு கொய்­யாப்­ப­ழத்தை நறுக்கி கொடுத்­தாள்.

இங்க வண்டி பத்து நிமி­ஷம் தான் நிக்­கும். சாப்­பாட்­டுக்கு தாரா­பு­ரத்­துல தான் நிக்­கும்னு, வண்டி நின்­ன­வு­டனே சொன்­ன­தால சரியா பத்து நிமி­டத்­துல, ஆள்­களை கணக்கு எடுத்து வண்­டிய கிளப்ப சொன்­னாரு. வண்டி தாரா­பு­ரம் நெருங்க சாலை­க­ளின் இரு­பு­ற­மும் பசு­மை­யின் அளவு குறைந்து கொண்டே வரு­வதை சிறு­வ­ய­தாக இருந்­தா­லும் கிரிக்கு உணர முடிந்­தது.

ஏம்மா இப்­ப­டின்னு கேக்க, இது வானம் பாத்த பூமி­டான்னு புதுசா ஒரு வார்த்­தை­யைப் பிர­யோ­கித்­தாள் ஹேமா.

அப்­ப­டின்னா என்­னம்மா?

அதுவா, இந்­தப் பக்­கத்­துல மழை ரொம்­பப் பெய்­யாது. எப்­படா மழை வரும் அப்­ப­டின்னு, இங்க இருக்­க­வங்க ஆகா­யத்த அடிக்­கடி பாக்­குற நில­மைடா என்­றாள்.

இவ­னது கேள்­வி­கள் தொடர வண்­டி­யும் பல்­ல­டம் தாண்டி சூலூ­ருக்கு வந்து விட்­டது. சிங்­கா­நல்­லூர் பேருந்து நிலை­யத்­தில் வண்டி நின்­ற­தும், நடத்­து­னர் தூங்­கிக்­கொண்­டி­ருந்­த­வர்­களை எழுப்பி இறக்­கும் வேலை­யில் மும்­மு­ர­மா­யி­ருந்­தார்.

கோயம்­புத்­தூர் வந்­த­தும், நானாக வீட்­டுக்கு வந்­து­வி­டு­வேன், யாரும் கூப்­பிட வர­வேண்­டாம் என்று ஹேமா ஏற்­கெ­னவே சொல்­லி­யி­ருந்­தாள்.

ஹேமா­வின் மாமா பெரி­ய­வர் மல்­லை­ய­னுக்கோ காலை­யில் வண்டி கிளம்­பி­ய­தும் வந்த தொலை­பேசி அழைப்­பிற்­குப் பிறகு மனது எதி­லும் ஒட்­ட­வில்லை.

பிள்­ளை­கள் சூதா­னம வந்து சேர­ணு­மேன்னு ஒரே கவ­லையா இருந்­தது.

அஞ்சு மணி நேரம் கணக்கு வச்சு சிறிது முன்­னா­டியே சிங்­க­நல்­லூர் பேருந்து நிலை­யத்­துக்கு வந்து விட்­டார், மரு­ம­க­ளை­யும், பேரப்­பிள்­ளை­க­ளை­யும் கூப்­பிட. அங்க வந்து சேரும் அரசு பேருந்து எல்­லாத்­தை­யும் விடாம போய் நின்னு ஹேமா தெரி­கி­றாளா என்று பார்த்­துக் கொண்­டி­ருந்­தார். சில நிமி­டங்­க­ளி­லேயே அவர்­கள் வந்த பேருந்து வந்து சேர்ந்­தது.

தனது வய­தை­யும் மறந்து வண்­டி­யின் பின்னே வேக­மா­கச் சென்­றார் பெரி­ய­வர். இறங்­கு­ன­தும், ஹேமான்னு வாஞ்­சை­யோடு அழைக்க, ஏன் மாமா நீங்க அலை­யி­றீங்­கன்னு அவள் கேட்­ட­தற்கு சிரிப்பே பதி­லாக மோனி­காவை வாங்­கிக் கொண்­டார்.

மறு கையால் கிரி­யைப் பிடித்­துக்­கொண்­டார். பிள்­ளை­கள் மாமா­வி­டம் இருந்­த­தால், ஹேமா சுமை­க­ளைச் சேர்த்து எடுத்­துக் கொண்­டாள். ஏற்­கெ­னவே சொல்லி வைத்­தி­ருந்த ஆட்டோ வந்து நின்­றது.

ஒன்­றும் சொல்­லா­மல் ஹேமா, மாமா­வோடு ஏறிக்­கொண்­டார். பிள்­ளை­கள் இரு­வ­ரது மடி­யி­லும் அமர, இரு­கூ­ருக்கு வழி சொல்லி விட்டு, ஹேமா­வி­டம் கேட்­டார், ஏம்மா, இப்­ப­டிக் கஷ்­டப்­ப­டுற.

ஒரு கார் எடுத்­துக்­க­லாம்ல, இல்லை சுந்­த­ரே­சன் வரும்­போது இப்­படி வர­லாம்ல என்று அக்­க­றை­யோடு கேட்­டார்.

அவங்­களும் அப்­ப­டித்­தான் மாமா சொன்­னங்க, ஆனா நான் தான் இந்த முடி­வெ­டுத்­தேன்னு சொன்­னாள். சொல்­லி­விட்­டுத் தொடர்ந்­தாள்.

பிள்­ளைங்க வாழ்க்­கைல எல்­லாத்­தை­யும் பாக்­க­ணும் மாமா. சிர­மம்னா என்­னன்னு உணர்­ற­தோட அத நேர­டியா அனு­ப­விக்­க­ணும். அம்மா வீட்­டுல இருந்து ஒரு கார் எடுத்து சௌரி­யமா வந்­து­ர­லாம். பிறந்­த­தில் இருந்து எல்லா வச­தி­க­ளோடு வளர்ந்து வர்ற இவங்க எதிர்­கா­லத்­துல ஒரு சின்ன பிரச்சினையைக் கூட சகிச்­சுக்க முடி­யா­மப் போயி­ரு­வாங்க.

அது மட்­டும் இல்ல, இந்த சமூ­கம் எப்­படி இருக்கு, அதுல மக்­க­ளெல்­லாம் எந்த நில­மைல இருக்­காங்க அப்­ப­டின்னு நேர­டியா அவங்க பாக்­க­ணும், கத கேக்­குற மாதிரி தெரிஞ்­சுக்­கக் கூடாது.

இந்த சமு­தா­யத்­துக்­குத் தன்­னோட பங்­க­ளிப்பு என்­னங்­குற எண்­ணம் அப்­பத் தான் துளிர் விட ஆரம்­பிக்­கும். பணத்­தோட அரு­மைய உண­ர­ணும்.

எல்லா மக்­களும் எப்­ப­டித் தங்­கள் வாழ்க்­கையை ஓட்­டு­றாங்­கன்னு பக்­கத்­துல இருந்து தெரிஞ்­சுக்­க­ணும்.

மொத்­தத்­துல வாழ்க்­கை­யோட மறு­பக்­க­மும் அவர்­கள் கண்­ணுல பட­னும் மாமா. இத­னால எனக்­கும் சிர­மம் தான். இந்த சுமை­யோட பல சுமை­களை நான் சுமக்க வேண்டி இருந்­தது. அதி­லும் ஒரு சுகம் இருந்­தது மாமா என்­றாள்.

தன் மக­னின் வாழ்­வில் இணைந்து செல்­கிற இன்­னொரு தண்­ட­வா­ள­மாக ஹேமா அவ­ருக்­குத் தெரிந்­தாள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!