- மோ. அ. சூசைதாசன்
அகரம் மறந்தால் உயிர் இருக்காது
ழகரம் மறந்தால் தமிழ் இருக்காது
அன்பை மறந்தால் உறவிருக்காது
பண்பை மறந்தால் அறமிருக்காது
கண்ணை மறந்தால் ஒளி இருக்காது
தன்னை மறந்தால் வழி இருக்காது
விழுதை மறந்தால் ஆல் இருக்காது
பொழுதை மறந்தால் நாள் இருக்காது
நீரை மறந்தால் உயிர் இருக்காது
வேரை மறந்தால் பயிர் இருக்காது
ஒலியை மறந்தால் மொழி இருக்காது
வலியை மறந்தால் தொழிலிருக்காது
நூலை மறந்தால் ஞானம் இருக்காது
சேலை மறந்தால் மானம் இருக்காது
வனப்பை மறந்தால் சுவை இருக்காது
அணைப்பை மறந்தால் சுகம் இருக்காது
வானை மறந்தால் ஈரம் இருக்காது
வாளை மறந்தால் வீரம் இருக்காது
ஊரை மறந்தால் வீடிருக்காது
போரை மறந்தால் நாடிருக்காது
அடியை மறந்தால் ஆட்சி இருக்காது
கீழடியை மறந்தால் நீட்சி இருக்காது
தமிழை மறந்தால் வாழ்விருக்காது
தமிழுணர்வை மறந்தால்...
இருந்தும் இருக்காது உயிர்!

