தனியறையில் தனித்திரு

தனியறையில் தனித்திரு

1 mins read

- இராம நாச்சியப்பன்

இரவும் பகலும் ஓர்அறையில்

இருந்து இருந்து களி(ழி)க்கின்றேன்

மறந்தும் கூட வெளிச்செல்லா

மறைந்து வாழும் நிலையன்றோ?

மனித வாடை இல்லாமல்

மனித நேயம் வளர்க்கின்றேன்

தனித்தி ருந்து தனியறையில்

தன்னை அறிய முயல்கின்றேன்

புறத்தில் ஓசை இல்லாமல்

புதிதாய்க் கல்வி பயில்கின்றேன்

வரமும் பெற்று வந்ததினால்

வாழ்க்கைப் பாடம் கற்கின்றேன்

இருக்க உடுக்க குறையுமில்லை

இயற்கை இன்றி நிறைவுமில்லை

திருப்பித் திருப்பிப் பார்த்தாலும்

தீர மறுக்குது நேரம்தான்