எள்ளளவும் தளராதே!

எள்ளளவும் தளராதே!

1 mins read

- நா. ஆண்டியப்பன்

எத்தனைதான் சோதனைகள்

எப்படித்தான் வந்தாலும்

எள்ளளவும் தளராதேடா ­ மனிதா

எள்ளளவும் தளராதேடா! (எத்தனை)

உனக்கு மட்டும் சோதனையா?

உள்ளபடி வேதனையா?

உள்ளமதைக் கலங்கவிடாதே ­ மனிதா

உள்ளமதைக் கலங்கவிடாதே! (எத்தனை) 

புயல் வந்து சாய்த்தாலும்

பழைய கூடு சிதைந்தாலும

புதிய கூடு கட்டவில்லையா? ­பறவை

புதிய கூடு கட்டவில்லையா? (எத்தனை)

மீண்டும் மீண்டும் விழுந்தாலும்

மீண்டெழுந்த சிலந்தியதைக்

கண்ட மன்னன் எழுச்சியுற்றானே­ மனிதா

கண்ட மன்னன் எழுச்சியுற்றானே (எத்தனை)

எழுச்சியுற்ற மன்னன் புரூஸ்

தோல்விகளைப் புறந்தள்ளி

புயலெனப் புறப்பட்டானே மனிதா

புது வரலாறு படைத்திட்டானே! (எத்தனை)

எத்தனைமுறை விழுந்தாலும்

அத்தனைமுறை எழுந்ததை

எப்போதும் மறந்துவிடாதே­ மனிதா

எப்போதும் மறந்துவிடாதே (எத்தனை)