இராம நாச்சியப்பன்
மாயை தீண்டா மதியும் வேண்டும்
மனமும் நிறைய மகிழ்வு வேண்டும்
தாயைப் போற்றித் துதிக்க வேண்டும்
தந்தை சொல்லை மதிக்க வேண்டும்
காயைப் போன்றோர் கனிய வேண்டும்
காலம் கடந்த ஞானம் வேண்டும்
நோயைத் தொலைத்த நிம்மதி வேண்டும்
நொடியில் வாழப் பழக வேண்டும்
அசைவம் உண்ணும் ஆசை வேண்டாம்
அன்பை அழிக்கும் ஆணவம் வேண்டாம்
இசையில் நனைய அஞ்ச வேண்டாம்
இன்னல் நல்கும் ஏச்சொல் வேண்டாம்
விசையில் இயக்கம் வீணுற வேண்டாம்
விரும்பா தவரை வெறுக்க வேண்டாம்
திசைகள் மாறிப் போக வேண்டாம்
தனிமைப் பட்டால் தவிப்பும் வேண்டாம்