கொள்ளைநோயை வெல்வோம்!

கொள்ளைநோயை வெல்வோம்!

1 mins read

- அனுபமா உதிவ்

சிங்கப்பூர் ஜோகூர் நீரிணைகள் அரவணைக்க

கடல்நீர் தாலாட்டும் தீவு!

புயலோ பெருங்காற்றோ ஆழிப் பேரலையோ

ஒருநாளும் தலைகாட்டா தீவு!

பாதுகாப்பு நிறைந்துள்ள நாடு!

இருப்போரை உயரவைத்து

வந்தோரை வாழவைத்து

அன்பொன்றே நிறைந்துள்ள வீடு!

ஏதேன் தோட்டத்தில் பாம்பொன்று வந்ததுபோல்

உயிர்க்கொல்லி வந்ததுதான் மோசம்.

விரட்டி அடித்திடுவோம் நஞ்சை முறித்திடுவோம்

ஒன்றிணைந்து காத்திடுவோம் நாட்டை!

தடுப்பூசி போட்டிடுவோம் சட்டத்தை மதித்திடுவோம்!

முகக்கவசம் அணிந்தெங்கும் செல்வோம்!

அரசோடு இணைந்திடுவோம் நம்நாட்டைக் காத்திடுவோம்!

கொள்ளைநோயுடனான இப்போரை வெல்வோம்!