- அனுபமா உதிவ்
தோழா! வானம் தொடுவோம் வாவா!
தேள்கூட தேனாய்க் கொட்டும் வாவா!
கூட்டுப் புழுவாய் இருந்தது போதும்!
கூடிச் சிறகை விரிப்போம் வாவா!
தனிமைக் கொடுமை நமக்கினி எதற்கு?
இனிமை உலகம் அமைப்போம் வாவா!
வலிமை கூட்டும் உணவினை உண்போம்!
இளமை கூட்டும் பயிற்சிகள் செய்வோம்!
தூய்மை போற்றி உடல்நலம் காப்போம்!
அன்பினை ஏற்றி மனநலம் காப்போம்!
நோயிலா வாழ்வை உறுதியாய் ஏற்போம்!
மரணமிலா வாழ்வை வாழ்ந்து பார்ப்போம்!
ஆதி நெருப்பை அகல்விளக்கு ஆக்குவோம்!
சோதி யாகி இருட்டை விரட்டுவோம்!
பாதியோடு பாதியாய் முழுமை யாகுவோம்!
மீதி இல்லாதபடி கொடுப்போம்! பெறுவோம்!

