வழி பிறக்கும்

வழி பிறக்கும்

1 mins read

- மோ. அ. சூசைதாசன்

மற்றைய மாதங்கள் போலல்ல தை

அற்புதமாய் வழி பிறக்கும் - அதற்கு

சற்றேனும் முயற்சி வேண்டும்

கற்றுணர்ந்தோர் சொன்ன உண்மை

மாற்றங்கள் அற்ற வாழ்க்கை மாறி

ஏற்றங்கள் வேண்டும் சிந்தனைகளில்

போற்ற வேண்டும் நம் உறவுகளை

ஆற்ற வேண்டும் உறவில் காயங்களை

வேற்றுமை நீங்கி ஒற்றுமை ஓங்கி

ஊற்ற வேண்டும் உண்மை அன்பை

உற்றாருக்கு உதவியற்றோருக்கு

உற்ற துணையாய் நிற்க வேண்டும்

கற்ற தமிழை ஒருநாளும் மறவாது

போற்ற வேண்டும் உயிராய் - அப்போது

அற்புதமாய் வழி பிறக்கும் - நிச்சயமாய்

நற்குடியாய் நாம் வாழ்வோம்