தைப்பொங்கல்

தைப்பொங்கல்

1 mins read

செங்கதிரோன் துணை கொண்டு!

செங்கரும்பின் சுவை கண்டு!

புதுப்பானை பொங்கலிட்டு.. பால்

பொங்கும்போது குலவையிட்டு

பொங்கலோ பொங்கல் என்று

பொங்கும் மகிழ்ச்சியுடன்

முழக்கமிட்டு..!

உழவர் திருநாளாம்..

உழைக்கும் மக்களின் பெருநாளாம்...

தைப்பொங்கல் திருநாளை

தரணியில் மகிழ்ச்சியுடன்

கொண்டாடுவோம்!

- தென்மாப்பட்டு அ.ராஜா