பரமபதம்

சிறுகதை

பிரதீபா

"சம்­ப­வம் நடந்து இன்­னை­யோட இரண்டு நாளாச்சு. ஆதி­ரா­வைப்­ பற்றி ஏதா­வது விவரம் தெரிஞ்­சதா?" என்று கேட்­டார் முத்­து­லிங்­கம்.

"நேத்­துக்கூட காவல்­து­றை­யில விசா­ரிச்­சேன். தேடி­கிட்டு இருக்­காங்­க­ளாம். இன்­னும் எந்த விவர­மும் தெரி­ய­லைன்னு சொன்­னாங்க. அப்­படி ஏதா­வது தக­வல் தெரிஞ்சா சொல்­றேன்னு சொல்­லி­ருக்­காங்­கப்பா," என்­றான் அவ­ரின் மகன் தர்­ம­துரை.

"நம்­ம­கிட்ட ஒருவார்த்­தை சொல்­லி­யி­ருந்தா இதுக்கு ஒரு முடிவு எடுத்­தி­ருக்­க­லாம். அர்­ஜூன் வந்து கேட்டா என்ன பதில் சொல்­றது?"

"அவ செஞ்ச தப்­புக்கு நீங்க ஏம்ப்பா வருத்­தப்­ப­டு­றீங்க? அர்­ஜூனை இந்த நிலை­மையில விட்­டுட்டு எப்போ அவ சந்­தோ­ஷத்­தைத் தேடி போனாளோ அப்­பவே அவள நாம மறந்­து­ட­ணும்."

"எப்­ப­டிங்க மறக்க முடி­யும்? என்­னோட இருக்­குற வரைக்­கும் அக்கா அக்­கான்னு அன்பா இருந்­தவ இப்­ப­டிச் செய்­வான்னு என்­னால நெனைச்­சுக்கூட பார்க்க முடி­யல. நம்ம ஆதி­ராவா இப்­ப­டிப் பண்­ணு­னான்னு என்­னால இன்­னும் நம்ப முடி­யல. ஒரு வேளை பணத்­துக்­காக அந்த மேனேஜர் நம்ம ஆதி­ராவை ஏதா­வது பண்­ணி­யிருந்தா...?" என்­றாள் தர்­ம­து­ரை­யின் மனைவி துர்கா.

போனவ தனியா போகல துர்கா. பணம், நகை எல்­லாத்­தை­யும் எடுத்­துட்­டுப் போயி­ருக்கா. கிளம்­பு­ற­துக்கு முன்­னாடி அவ தெளிவா முடிவு செஞ்­சுட்­டு­தான் போயி­ருக்கா. அத­னால நீயா ஏதா­வது கற்­பனை பண்­ணா­ம­யிரு. அதான் புகார் கொடுத்­தி­ருக்­கோம்ல. அவங்க கண்­டு­பி­டிச்சு சொல்­லட்­டும்."

"இல்­லைங்க அப்­ப­டி­யும் இருக்க வாய்ப்பு இருக்­க­லாம்ன்­னு­தான் சொன்­னேன்."

"நீ சொல்­லுற மாதிரி இருக்­க­வும் வாய்ப்­பி­ருக்கு துர்கா. ஆனா எல்­லாத்­தை­யும் நாமளே ஊகம் செஞ்­சி­கிட்டு இருக்­காம மொதல்ல இந்த வழக்கை விசா­ரிக்­கிற என்­னோட நண்­பர்­கிட்ட என்ன செய்­ய­லாம்ன்னு கேக்­கு­றேன். கேட்­டுட்டு அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை என்ன எடுக்­க­லாம்ன்னு முடிவு பண்­ண­லாம். இதை அமை­தி­யா­தான் கையா­ளனும். அவ­ச­ரப்­பட்­டோம்ன்னா இந்த விஷ­யம் வெளியே பரவி நம்ம நிறு­வ­னத்­தோட பேரு பத்­தி­ரி­கை­யில வந்து நாறிப்­போ­யி­ரும்.

"இந்த கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறு­வ­னத்தை ஆரம்­பிச்சு இப்போ இந்த நிலை­மைக்­குக் கொண்டு வர அப்பா பட்­ட­பாட்­டுக்கு அர்த்­த­மில்­லாம போகும்"

"தர்மா முதல்ல இதுக்கு என்ன பண்­ண­னும்மோ அதை உடனே பண்­ணுப்பா. நம்ம குடும்­பத்­துல எதுக்­குப்பா இப்­ப­டி­யெல்­லாம் நடக்­குது. இதெல்­லாம் பாக்­கக்­கூ­டா­துன்­னு­தான் உங்க அம்மா சீக்­கி­ர­மாவே கண்ணை மூடிட்­டாளோ என்­னவோ?"

"சரிங்­கப்பா! நீங்க வருத்­தப்­படாம ஓய்­வெ­டுங்க. என் நண்­ப­ரைப் பார்த்து இதுக்கு என்ன பண்­ண­லாம்னு கேக்­கு­றேன். துர்கா இதைப்­பத்தி யாருக்­கிட்­டை­யும் பேசாத. குறிப்பா வீட்­டுல வேலை செய்­ற­வங்­க­ளுக்கு இதைப்­பத்தி எது­வும் தெரி­யம பாரத்­துக்க. இந்­தப் பிரச்­ச­னை­யில இன்­னைக்கு அப்­பாவை டயா­லி­ஸி­ஸுக்கு கூட்­டிட்­டுப் போக மறந்­து­டாதே. அவ தனியா காணாம போயி­ருந்தா கவ­லைப்­ப­ட­லாம். ஆனா போனவ விவ­ரமா பணம், நகைன்னு எல்­லாத்­தை­யும் எடுத்­துட்­டுப் போயி­ருக்கா. அத­னால என்ன ஆச்­சுன்னு தெளிவா தெரிய வரைக்­கும் மன­சப்­ போட்­டுக் குழப்­பிக்­காம அமை­தி­யா­யி­ருங்க. நான் அடுத்து என்ன பண்­ண­லாம்ன்னு கேட்­டுட்டு வர்­றேன்," என்று கூறி­விட்டு வெளியே கிளம்­பி­னான் தர்­ம­துரை.

கண­வன் எவ்­வ­ள­வு­தான் சமா­தா­னம் கூறி­னா­லும் துர்­கா­வி­னால் இதை சுல­ப­மாக ஏற்­றுக்­கொள்ள இய­ல­வில்லை.

இரண்டு நாட்­க­ளுக்கு முன்பு ஜோகூ­ருக்­குச் செல்­லும் முன்பு தோட்­டத்­தில் ஏதோ சிந்­த­னை­யில் மூழ்­கி­யி­ருந்­தாள் ஆதிரா.

அவள் அரு­கில் சென்று தோளை தொட்ட பிறகே ஆதிரா சுய­நி­னை­விற்கு வந்­தாள்.

"என்ன ஆதிரா? பல­மான யோச­னை­யில இருக்கே. என்­னாச்சு? அர்­ஜூ­னைப்­பத்தி நெனச்­சு­க்கிட்­டு­யி­ருக்­கியா?"

"ஆமாக்கா. அவரு இல்­லாத வாழ்க்கை ஏதோ சூன்­யம் மாதிரி இருக்கு."

"கவ­லைப்­ப­டாதே ஆதிரா. நம்ம டாக்­டர் மாமா­வோட கண்­கா­ணிப்­புல அவன் நல்­ல­ப­டியா மீண்டு வந்­து­டு­வான். நேத்து கூடக் கேட்­டப்போ அர்­ஜூ­னோட உடல்­நி­லை­யில நல்ல முன்­னேற்­றம் வந்­து­கிட்­டே­யி­ருக்­குன்னு சொன்­னாரு. நீ மன­சைத் தள­ர­வி­டாதே. தைரி­ய­மா­யிரு"

"அந்த நம்­பிக்­கை­யி­ல­தான்க்கா நானும் இருக்­கேன்."

"உன்­னோட மன தைரி­ய­மும் நம்­பிக்­கை­யும்­தான் அவ­னைச் சீக்­கி­ரமா இது­ல­யி­ருந்து மீட்டு தரும். கவ­லைப்­ப­டாதே. நாங்க இருக்­கோம். நீ இங்­க­யி­ருந்தா அவ­னைப்­பத்­தி­தான் நெனச்­சு­கிட்­டு­யி­ருப்பே. நீ எஸ்­டேட்­டுக்­குக் கிளம்பு. அவரு ஜெண்­டிங் போயி­ருக்­காரு. நாளைக்கு எஸ்­டேட்­டுக்கு வந்­து­டு­வாரு. நீ அங்­கே­யி­ருக்­கிற வேலை­க­ளைப் பார்த்­துட்டு நாளைக்கு அவ­ரு­கூ­டத் திரும்பி வந்­துடு"

"சரிங்க அக்கா. நான் போகும்­போது அவரை ஆஸ்­பத்­தி­ரில பார்த்­துட்­டுப் போரேன்," என்று நம்­பிக்­கை­யோடு சொல்­லி­விட்டு போன­வளா நம்­பிக்கை துரோ­கம் செய்­தி­ருப்­பாள். ஆனா­லும் சில நாட்­க­ளாக அவ­ளின் நடை, உடை, பாவ­னை­யில் தென்­பட்ட மாற்­ற­மும் அவளை யோசிக்க வைத்­தது. அடிக்­கடி தன்னை மறந்து யோச­னை­யில் ஆழ்ந்­தி­ருப்­பாள். கேட்­டால் அர்­ஜூ­னின் ஞாப­கம் என்று மழுப்பி விடு­வாள். வீட்­டில் இருந்­த­வளை தேவை­யில்­லா­மல் நிர்­வா­கத்­தைப் பார்த்­துக்­கொள்­வ­தற்கு அனுப்­பி­யது தவறோ என்ற எண்­ணம் அவ­ளுக்­குள் விழுந்­தது.

சிங்­கப்­பூ­ரில் இருக்­கும் பணக்­கார குடும்­பங்­களில் அவர்­க­ளின் குடும்­பம் ஒன்று. செல்­வத்­தில் மட்டு­மல்ல குடும்­பத்­தில் மகிழ்ச்­சி­யும் குறை­வில்­லா­மல் இருந்­தது.

வான­வில் போன்று வண்­ண­ம­ய­மா­க­யி­ருந்த அவர்­க­ளின் வாழ்க்­கை­யில் யார் கண்­பட்­டதோ இன்று சுனா­மி­யால் உருக்­கு­லைந்த கட்­ட­டம்­போல் சிதைந்து நிற்­கிறது.

இப்­ப­டிக் குடும்­பம் பிள­வு­பட்டு நிற்­ப­தற்­குத் தானும் ஒரு கார­ணமோ என்று எண்­ணி­ய­போது அவள் மனத்­தைக் கத்­தி­யால் கீறி­ய­து­போன்ற உணர்வு ஏற்­பட்­டது.

நாளை அர்­ஜூ­னுக்­குத் தெரி­யும்­போது அவன் இதனை எப்­படி எடுத்­துக்­கொள்­ளப் போகி­றானோ என்று எண்­ணும்­போதே அவள் இத­யம் பட­ப­டத்­தது.

அர்­ஜூன் அவ­ளுக்கு மைத்­து­னன் முறை என்­றா­லும்கூட அவள் தர்­மா­வைத் திரு­ம­ணம் முடித்து வரும்­போது அவ­னுக்­குப் பதி­னைந்து வய­து­தான்.

உயர்­நி­லைப்­பள்­ளி­யில் படித்­துக்­கொண்­டி­ருந்­தான். அம்மா இல்­லா­மல் அண்­ணன் மற்­றும் தந்­தை­யின் அர­வ­ணைப்­பில் மட்­டுமே வளர்ந்­த­வன் என்­ப­தால் இயல்­பாக அவ­ளுக்கு அவன்­மேல் தாய்மை உணர்வு தோன்­றி­யது.

தன்­னு­டைய மூத்த பிள்­ளை­யா­க­தான் அவ­னைப் பாவித்­தாள். அவ­னும் 'அண்ணி அண்ணி' என்று அவள்­பால் அன்­பைப் பொழிந்­தான். அவ­னும் பல்­க­லைக்­க­ழ­கப்­ப­டிப்பை முடித்த பிறகு அண்­ண­னுக்கு உத­வி­யாக நிர்­வா­கத்­தைக் கவ­னிக்­கத்­தொ­டங்­கி­னான். அவ­னின் அய­ராத உழைப்­பி­னா­லும், திற­மை­யா­லும் அவர்­க­ளின் நிறு­வ­னம் சிங்­கப்­பூ­ரின் மிகப்­பெ­ரிய தொழில் நிறு­வ­ன­மாக உரு­வெ­டுத்­தது. பிள்­ளை­க­ளி­டம் பொறுப்பை ஒப்­ப­டைத்­து­விட்டு அவ­ளின் மாம­னார் முத்­து­லிங்­கம் வீட்­டில் பேரப்­பிள்­ளை­க­ளோடு ஓய்­வெ­டுக்­கத் தொடங்­கி­னார்.

மாம­னார் முத்­து­லிங்­கத்­தின் அண்­ணன் தாமோ­த­ரன் சிங்­கப்­பூ­ரில் உள்ள பிர­பல மருத்­து­வ­ம­னை­யில் தலைமை மருத்­து­வ­ராக இருக்­கு­றார். அவ­ரு­டைய மகள் திரு­மணத்­தில்­தான் அவன் ஆதி­ரா­வைப் பார்த்­தான்.

ஆதி­ரா­வின் ஆர்ப்­பாட்­ட­மில்­லாத அழ­கும் மென்­மை­யான பேச்­சும் அர்­ஜூ­னுக்­குப் பிடித்­துப் போனது. அவன் தன் விருப்­பத்தை வீட்­டில் தெரி­வித்­தான்.

பின்­னர், பரஸ்­பர புரி­த­லுக்­குப் பிறகு இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­பு­தான் அவர்­க­ளுக்­குத் திரு­ம­ணம் நடந்­தது.

வீட்டு நிர்­வா­கத்தை இவள் கவ­னித்­துக்­கொண்டு வந்­த­தால் நன்கு படித்த ஆதிரா ஏன் வீட்­டில் அடைந்து கிடக்­க­வேண்­டும் என்று எண்­ணி­னாள்.

அவ­ளும் அர்­ஜூ­னு­டன் இணைந்து நிர்­வா­கத்­தைக் கவ­னித்து வரட்­டும் என்று கூறி ஆதி­ராவை அவள்­தான் அனுப்பி வைத்­தாள்.

இரண்டு வாரத்­திற்கு ஒரு­முறை மலே­சி­யா­வில் உள்ள ஜே.பி.­யில் இருக்­கும் ரப்­பர் எஸ்­டேட்டை பார்த்து­விட்டு வரு­வார்­கள்.

இரு­வ­ரும் மன­மொத்த தம்­ப­தி­களாக இணைந்து வீட்­டை­யும், நிர்­வா­கத்­தை­யும் மகிழ்ச்­சி­யு­டன் கவ­னித்து வந்­த­னர்.

யார் கண்­பட்­டதோ? சென்ற ஆண்டு அவர்­கள் ஜே.பி.க்கு போய்­விட்டு சிங்­கப்­பூர் வரும்­போது நிகழ்ந்த விபத்­தில் அர்­ஜூ­னுக்­குத் தலை­யில் அடிப்­பட்­டுக் கோமா­வுக்­குப் போய்­விட்­டான்.

நல்ல வேளை ஆதிரா லேசான காயத்­தோடு உயிர் தப்­பி­னாள். அதன் பிறகு குடும்­பமே நிலைக்­குலைந்து போனது. அதி­லி­ருந்து மெல்ல மெல்ல மீண்டு வரு­வ­தற்கு அவர்­க­ளுக்­குப் பல மாதங்­கள் ஆனது.

எப்­பொ­ழுது வேண்­டு­மா­னா­லும் அர்­ஜூன் கோமா­வி­லி­ருந்து மீண்டு வர­லாம் என்று டாக்­டர் மாமா சொல்­லி­விட்­டார்.

ஆரம்­பத்­தில் இதோ கண் விழித்து­வி­டு­வான் என்று எண்­ணிக்­கொண்டு நாட்­க­ளைக் கடத்­தி­னார்­கள்.

ஆனால் நாட்­கள் மாதங்­கள் ஆன­போ­து­தான் அவனை மருத்­து­வ­ரின் கண்­கா­ணிப்­பில் விட்­டு­விட்டு அவர்­கள் வேலை­யைப் பார்க்­கத் தொடங்­கி­னர்.

நம்­பிக்­கை­தானே வாழ்க்­கை­யின் அச்­சாணி. அந்த அடிப்­ப­டை­யில்­தான் வாழ்க்கை ஓடிக்­கொண்­டி­ருந்­தது.

அர்­ஜூனை நினைத்து வீட்­டில் முடங்­கிக் கிடந்­த­வளை தேற்றி அவள்­தான் எஸ்­டேட் நிர்­வா­கத்தை கவ­னித்­துக்­கொள்ள மீண்­டும் அனுப்பி வைத்­தாள்.

ஆனால், இவள் இப்­ப­டிச் செய்­வாள் என்­பதை அவள் கன­வி­லும் நினைக்­க­வில்லை.

அர்­ஜூன் கோமா­வி­லி­ருந்து விடு­பட மாட்­டான் என்று நம்­பிக்­கையை இழந்­து­விட்­டாளா? அல்­லது ஒரு­வேளை பணத்­துக்கு ஆசைப்­பட்டு ஆதி­ராவை யாரா­வது ஏதா­வது செய்­தி­ருப்­பார்­களோ? ஆனால் அவள் மகிழ்ச்­சி­யாக மானே­ஜ­ரு­டன் சென்­ற­தா­கச் சொல்­கி­றார்­களே?

வீட்டு லாக்­க­ரி­லி­ருந்த அவ­ளு­டைய நகை­க­ளை­யை­யும் காண­வில்லை.

எதை நம்­பு­வது?

எது உண்மை?

புரி­யா­மல் அவ­ளு­டைய மனம் கலங்­கி­யது.

இந்­தப் பிரச்­ச­னையை யாரி­டம் சொல்லி தீர்வு காண்­பது என்ற மன­வே­த­னை­யில் உழன்­று­கொண்­டி­ருந்­த­வளை கடி­கா­ரத்­தி­லி­ருந்த குயில் 'குக்கூ குக்கூ' என்று 11 முறை கூவி அவளை நன­வு­ல­கிற்கு அழைத்து.

அப்­போ­து­தான் மாம­னரை மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்ல வேண்­டும் என்­பது அவள் நினை­வுக்கு வந்­தது.

உட­ல­ள­வில் தளர்ந்­து­போ­யி­ருந்­த­வர் அர்­ஜூ­னுக்கு நடந்த விபத்­துக்­குப் பிறகு இப்­போது மனத்­த­ள­வி­லும் சோர்ந்து போய்­விட்­டார்.

ஆதி­ரா­வின் பிரச்­சினை அவரை மேலும் முடக்கி போட்­டு­விட்­டது. அவ­ரைத் தேற்றி மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­றாள்.

அவர்­கள் சென்ற சற்று நேரத்­தில் ஜோகூர்பாரு செல்­வ­தற்­கா­கத் தன் கட­வுச்­சீட்டை எடுப்­ப­தற்கு வீட்­டிற்கு வந்­தான் தர்­ம­துரை.

அப்­போது ஊஞ்­ச­லில் ஆடிக்­கொண்­டி­ருந்த தன் தம்பி அர்­ஜூ­னைப் பார்த்­த­தும் அதிர்ச்­சி­யில் ஒரு கணம் நின்­று­விட்­டான்.

தர்­மா­வுக்­குத் தான் காண்­பது கனவா அல்­லது நனவா என்­பது புரிய ஒரு நிமி­டம் நீடித்­தது.

பிறகு, 'அர்­ஜூன் நீயா? நீ எப்போ வந்தே? எப்­படி இருக்க? தாமோ­த­ரன் பெரி­யப்பா உனக்கு நினைவு திரும்­பு­ன­தைப்­பத்தி ஒன்­னும் சொல்­ல­லையே?' என்று சந்­தோ­ஷத்­தில் கேள்­வி­களை அடுக்­கிக்­கொண்டே போனான்

'அண்ணா! எதுக்கு இவ்­வ­ளவு பதட்­டப்­ப­டு­றீங்க. அமை­தியா இருங்க. நான் முன்ன விட இப்போ ரொம்ப ஆரோக்­கி­யமா இருக்­கேன். எனக்கு இரண்டு நாளைக்கு முன்பே நினைவு திரும்­பி­டுச்சு. ஆனா சில பரி­சோ­த­னை­களை முடிஞ்­ச ­பி­றகு தான் பெரி­யப்பா வெளியே அனுப்­பு­வேன்னு சொன்­னாரு. அவரு உங்­கிட்ட இந்த விஷ­யத்­தைச் சொல்­ல­ணும்னு துடிச்­சாரு. நான்­தான் பெரி­யப்­பா­கிட்ட எது­வும் சொல்­ல­வே­ணாம்ன்னு சொன்­னேன். உங்க முன்­னாடி திடீர்ன்னு வந்து நின்னு இப்­படி உங்­களை ஆச்­ச­ரி­யப்­பட வைக்­க­ணும்னு நெனச்­சேன்.'

"நல்லா ஆச்­ச­ரி­யப்­பட வெச்ச. உன்­னைப் பார்த்தா வீட்­டுல இருக்­குற எல்­லா­ரும் சந்­தோ­ஷத்­துல துள்ளி குதிக்­கப் போறாங்க. அர்­ஜூன்! உன்னை மறு­ப­டி­யும் இப்­ப­டிப் பார்க்­கும்­போது எனக்கு எவ்­வ­ளவு மகிழ்ச்­சியா இருக்­குது தெரி­யுமா? என் பலமே இப்­ப­தான் திரும்பி வந்த மாதி­ரி­யி­ருக்கு. நீ கூட இல்­லாம நான் பட்ட கஷ்­டப்­பட்ட எனக்­கு­தான் தெரி­யும். எப்­ப­டி­யி­ருந்த நம்ம குடும்­பம் இன்­னைக்கு இப்­படி உடைஞ்சு போயி­ருக்­கு­றத பார்க்­கும்­போது மனசு வலிக்­குது"

"காலம் நடத்­திய கோலம். என்ன பண்­றது அண்ணா?

"காலம் இப்­படி ஒரு அலங்­கோலத்தை நம்ம குடும்­பத்­துக்­குக் கொடுத்­து­ருக்க வேணாம். பிள்­ளைங்­க­ளுக்­காக மனசை கல்­லாக்­கிட்டு ஓடி­கிட்­டி­ருக்­கேன். பழ­சை­யெல்­லாம் பேசி வீட்­டுக்கு வந்­த­வு­டனே உன்னை வருத்­தப்­பட வச்­சுட்­டு­யி­ருக்­கேன். குளிச்­சுட்டு வா. நாம இரண்டு பேரும் ஒண்ணா சாப்­பி­ட­லாம்"

"எனக்­குப் பசிக்­க­லண்ணா. வீட்­டுல யாரை­யும் காணோம். எல்­லா­ரும் எங்கே போயி­ருக்­காங்க?'

"பிள்­ளைங்க பள்­ளிக்­கூ­டத்­துக்­குப் போயி­ருக்­காங்க. அண்ணி அப்­பா­வைக் கூட்­டிட்டு மருத்­து­வ­ம­னைக்­குப் போயி­ருக்கா. நான் அண்­ணிக்கு கால் பண்ணி சிகிச்சை முடிஞ்­ச­தும் சீக்­கி­ரம் வீட்­டுக்கு வரச் சொல்­றேன். அப்பா உன்­னைப் பார்த்­தா­ருன்னா அப்­ப­டியே மகிழ்ச்­சி­யில் பூரிச்­சுப் போயி­டு­வாரு"

"ஆதிரா எங்­கண்ணா?"

ஆதி­ரா­வைப்­பற்­றிக் கேட்­ட­தும் தர்­மா­வால் ஒரு நிமி­டம் ஒன்­றும் சொல்ல முடி­ய­வில்லை. பல மாதங்­க­ளுக்­குப்­பி­றகு குண­மாகி இப்­பொ­ழு­து­தான் வீட்­டிற்கு வந்­தி­ருக்­கி­றான். அவ­னி­டத்­தில் நடந்­த­தைச் சொன்­னால் மீண்­டும் அவ­னுக்கு ஏதா­வது ஆகி­வி­டுமோ என்ற பயம் அவ­ருக்­குத் தோன்­றி­யது. உடனே, அவன், "ஆதிரா ஜேபிக்­குப் போயி­ருக்கா," என்­றான்.

"ஆதி­ரா­வுக்கு என்ன ஆச்­சுன்னா?"

"ஆதி­ரா­வுக்கு என்ன...? அவ நல்லா தான.... இருக்கா? அவ­ளுக்கு என்ன ஆச்சு? ஜேபிக்கு தானே போயி­ருக்கா?"

"அண்ணா மறைக்­காம என்ன நடந்­த­துன்னு சொல்­லுங்க..."

"பெரி­யப்பா ஏதா­வது சொன்­னாரா?"

"ஆமா... ஆதி­ரா­வைப் பார்க்­க­ணும்னு கேட்­டேன். ஆனா அவரு எனக்கு சரி­யான பதி­லைச் சொல்­லலை. அப்­பு­றம் வற்­பு­றுத்தி கேட்ட பிற­கு­தான் ஆதி­ரா­வைக் காணோங்­கிற விப­ரத்­தைச் சொன்­னாரு. அவ­ளுக்கு என்ன ஆச்­சுண்ணா?'

"இப்போ அவ­ளைப்­பத்தி தெரிஞ்சு என்ன பண்­ணப்­போற?'

"என் பொண்­டாட்­டி­ய­பத்தி நான் தெரிஞ்­சுக்­காம யாரு தெரிஞ்­சுக்­குவா?"

"அந்த அக்­கறை அவ­ளுக்கு இல்­லையே. அப்­ப­டி­யி­ருந்­தி­ருந்தா உன்னை இந்த நிலை­மை­யில விட்­டுட்டு போயி­ருப்­பாளா?"

"என்ன நடந்­த­த­துன்னு கொஞ்­சம் விவரமா சொல்­லுங்க?"

தர்­மன் பெரு­மூச்சு ஒன்றை இழுத்­து­விட்­டுக்­கொண்டே "சாலை விபத்­துல உனக்­குத் தலை­யில அடிப்­பட்­ட­துல நீ கோமா­வுக்­குப் போயிட்ட. நல்ல வேளை ஆதிரா லேசான காயத்­தோட பொழச்­சு­கிட்டா. நீயும் எப்­ப­டி­யும் கண் முழிச்­சு­டு­வன்னு நாங்க நம்­பிக்­கையா இருந்­தோம். ஆனா, நாட்­கள் கடந்­ததே தவிர உங்­கிட்ட எந்த முன்­னேற்­றம் இல்ல. எங்­க­ளுக்­கும் நம்­பிக்கை விட்­டுப்­போச்சு. உனக்கு இப்­படி ஆனதை நெனச்சு அப்­பா­வோட உடல்­நி­லை­யும் மோசமா ஆயி­டுச்சு.

"வீட்­டு­லே­யி­ருந்தா பழைய நினை­வு­கள் ஆதி­ராவை அழைக்­க­ழிச்­சுக்­கிட்டே இருக்­கும். அத­னால ஒரு மாற்­றமா இருக்­கட்­டும்ன்­னு­தான் நீ பார்த்­துக்­கிட்டு வந்த நிறு­வ­னத்தை அவ­ளைக் கவ­னிச்­சுக்­கச் சொன்­னேன். உன்னை மாதிரி அவ­ளும் புத்­தி­சாலி. எல்­லாத்­தை­யும் சீக்­கி­ரமா கத்­து­கிட்டா.

"அடிக்­கடி மலே­சி­யா­வுல இருக்­குற நம்ம எஸ்­டேட்­டைப் பார்த்­து­கு­ற­துக்­குப் போவா. அப்­படி இரண்டு நாளைக்கு முன்­னாடி கிளம்பிப் போன­வ­தான் திரும்­ப­வே­யில்லை.

"பிறகு விசா­ரிச்­சுப் பார்த்­த­துல அவ அங்கே எஸ்­டேட்­டுல வேலை பார்க்­குற ஒருத்­தன் கூட நெருக்­கமா பழ­கு­னதா சொன்­னாங்க. போகும்­போது பல லட்ச வெள்ளி பணத்­தை­யும், நகை­யை­யும் எடுத்­துட்­டுப் போயிட்டா. இந்த விஷ­யம் தெரிஞ்ச பிறகு நாங்க எல்­லாம் கொதிச்­சுப்­போய் இருக்­கோம். உன்­கிட்ட இந்த விஷ­யத்தை எப்­ப­டிச் சொல்­லப் போறோம்ன்னு துடிச்­சு­கிட்டு இருந்­தோம். இவ்­வ­ளவு சீக்­கி­ரமா அது நடக்­கும்ன்னு நான் நெனைச்­சுக் கூடப் பார்க்­கல.

"அர்­ஜூன், நீ வருத்­தப்­ப­டு­வேன்­னு­தான் இத­பத்தி பேச வேணாம்ன்னு சொன்­னேன். ஆதி­ரா­வைப்­பத்தி யோசிச்சு மனசை குழப்­பிக்­காத. எல்­லாத்­தை­யும் மறந்­துட்டு புது வாழ்க்­கைய தொடங்­கப்­பாரு."

"அப்போ ஆதிரா எங்க இருக்­கான்னு உங்­க­ளுக்­குத் தெரி­யாதா?"

"தெரி­யாது."

"ஆனா, உங்­க­ளுக்­குத் தெரி­யும்ன்னு ஆதிரா சொன்­னாளே?"

"என்ன சொல்ற..... அர்­ஜூன்? ஆதிரா உன்­கிட்ட பேசி­னாளா? எப்போ?"

"இப்­ப­தான் கொஞ்ச நேர­துக்கு முன்­னாடி."

"என்ன சொன்னா?"

"என்னை மட்­டும் நெனச்­சு­கிட்டு இருக்­கி­றதா சொன்னா"

"உன்னை மட்­டும் நெனச்­சு­கிட்டு இருக்­கி­றவ ஏன் வேறொ­ருத்­தன் கூட ஓடி போனான்னு கேட்­டியா?"

"கேட்­டேனே. உங்க அண்­ணன்­கிட்ட கேளுங்­கன்னு சொன்னா."

"எங்­கிட்ட....கேக்க சொன்­னாளா?"

"ஆமா..சொல்­லுங்­கண்ணா."

"நீங்க சொல்­ல­மாட்­டீங்க. ஆனா நான் சொல்­றேன். சின்ன வய­சுல அம்மா இல்­லாத குறையே தெரி­யாம அண்­ணனா மட்­டு­மில்­லாம அம்­மா­வுக்கு அம்­மா­வா­யி­ருந்து என்னை வளர்த்­தீங்க. பார்த்­துப் பார்த்து என்­னைப் படிக்க வச்­சீங்க. தேடி தேடி ஆதி­ராவ எனக்­குக் கட்டி வெச்­சீங்க. எல்­லாமே நல்­லா­தான் போயிட்டு இருந்­தது. என்­னைக்­குச் சூதாட்­டத்­துக்கு அடி­மை­யாகி பணத்தை இழக்­கத் ஆரம்­பிச்­சீங்­களோ அப்­பவே தர்­ம­னா­யி­ருந்த நீங்க சகு­னியா மாறிட்­டீங்க. மகா­பா­ரத்­துல அந்­தத் தர்­மன் பாழா­போன சூதாட்­டத்­தால தன் குடும்­பத்­தையே வெச்­சுச் சூதா­டு­னான். ஆனா நீங்க சூதாட்ட மோகத்­தால, சொத்­துக்கு ஆசைப்­பட்­டுத் தம்பி குடும்­பத்­தையே கொல்ல துணிஞ்­சிட்­டீங்க'

"இல்ல... நான் எது­வும் செய்­யல," என்ற தர்­மா­வின் அல­ற­லை­யும் தாண்டி கத­றிய அவன் கைபேசி அவனை நிலைப்­ப­டுத்த எடுத்­துப் பார்த்­தான். திரை­யில் அவ­னு­டைய டாக்­டர் பெரி­யப்பா அழைப்­ப­தா­கக் காட்ட, அவன் வேக­மாக அழைப்பை எடுத்­தான். மறு­மு­னை­யில், "தர்மா! திடீர்ன்னு கோமா­வு­ல­யி­ருந்த அர்­ஜூ­னுக்கு வலிப்பு வந்­து­டுச்சு. எவ்­வ­ளவோ முயற்சி பண்­ணி­யும் எங்­க­ளால அவன் உயி­ரைக் காப்­பாத்த முடி­யல," என்று பதற்றமா­கப் பேசி­னார்.

அவன் சட்­டென்று ஊஞ்­ச­லைப் பார்த்­தான்.

ஊஞ்­சல் மட்­டும் ஆடிக்­கொண்­டி­ருந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!