சிறுகதை யூசுப் ராவுத்தர் ரஜித் துஆ

கிட்­டத்­தட்ட இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு ஆமினா­வும் மஹ்­மு­தா­வும் டன்­லப் தெரு அப்­துல் கஃபூர் பள்­ளி­வா­ச­லில் ரம­லா­னின் தரா­வீஹ் தொழு­கை­யில் கலந்­து­கொள்­கி­றார்­கள்.

கடந்த 2020, 2021ல் கொவிட் கெடு­பி­டி­கள். பாது­காப்பு இடை­வெளி, முன்­ப­திவு என்று பள்­ளி­யில் சந்­திப்­பதையே அவர்­கள் நினைத்­துப் பார்க்­க­மு­டி­யாத வகை­யில் இரண்டு ஆண்­டு­கள் கடந்­து­விட்­டன.

பள்­ளி­கள் மீண்­டும் வழக்­கம்­போல் செயல்­ப­ட­வேண்­டும் என்ற அவர்­க­ளின் துஆவை அல்­லாஹ் கபுல் செய்­து­விட்­டான். 2022 ஏப்ரல் 2ஆம் தேதி அவர்­கள் பள்­ளி­யில் சந்­தித்­துக் கொண்­டார்­கள்.

இரு­வ­ருக்­கும் இடையே 30 ஆண்­டு­கால நட்பு. ஆமி­னா­வுக்கு வீரா­சாமி ரோட்­டில் வீடு. மஹ்­முதா இருப்­பது சந்­தர் ரோட்­டில். மஹ்­முதா உண்­மை­யில் பாவம்.

முப்பது ஆண்­டு­க­ளுக்கு முன் சிங்­கப்­பூ­ரில் மீகோ­ரிங் வியா­பா­ரம் செய்­யும் சேக்­தா­வூ­துக்கு வாழ்க்கைப் பட்டு, தமிழ்­நாட்­டி­லுள்ள குட­வாசலி­லி­ருந்து சிங்­கப்­பூர் வந்து சிங்­கப்­பூ­ரி­லேயே நிரந்­த­ர­மா­கி­விட்­டார்.

குட­வா­ச­லில் தன் தகப்­ப­னா­ரின் பூர்­வீக வீடு இப்­போது மஹ்­முதா தம்­பி­யி­டம்.

குட­வா­சல் சென்­றால் தம்பி மனை­விக்கு பயப்­ப­ட­வேண்டிய நிலை. பெற்ற தாயும் அவர்­க­ளோடு­ தான். அம்­மா­வைப் பார்ப்­ப­தற்­காக அவர் குட­வா­சல் போகத்­தானே வேண்­டும். தன் அம்­மா­வைப் பார்க்­கத்­தான் மஹ்­முதா செல்­வார்.

அந்த வீட்­டில் எந்த உரி­மை­யும் இல்­லா­த­து­போல்­தான் இருக்க வேண்­டிய சூழ்­நிலை.

சிங்­கப்­பூ­ரில் தன் கண­வர் சேக்­தா­வூது சென்ற ஆண்டு வஃபாத் ஆகி­விட்­டார்.

வஃபாத்­துக்­குக்­கூட ஆமினா செல்­ல­மு­டி­ய­வில்லை. கொவிட் அனு­ம­திக்­க­வில்லை. இப்­போது சிங்­கப்­பூர் வீடு தன் மகன் பொறுப்பில். ஆனா­லும் மரு­ம­க­ளுக்கு பயந்து இருக்­க­வேண்­டிய நிலை. இது பாவம்­தானே? ஆனால் மஹ்­மூதா 'இது அல்­லாஹ்­வின் திட்­டம்' என்று ஏற்­றுக்கொண்­டு­விட்­டார்.

ஆமினா 30 வரு­டங்­க­ளுக்கு முன் கண­வ­ரோடு கூடவே சிங்கப்­பூர் வந்­து­விட்­டார். இரு­வ­ரும் வீரா­சாமி ரோட்­டில் இருக்­கி­றார்­கள்.

மகள் நிக்­காஹ் முடிந்து, புதிய வீடு வாங்கி பக்­கத்­தி­லேயே தனி­வீட்­டில் இருக்­கி­றார். ஆமினா எல்லா உரி­மை­யோ­டும் தன் வீட்­டில் இருக்­கி­றார்.

அவர்­கள் சந்­திப்­ப­தும், மனம்­விட்­டுப் பேசு­வ­தும் இந்த தரா­வீஹ் தொழுகை முடிந்த பிற­கு­தான். ஆமினா சுடச்­சுட இஞ்­சி டீ போட்­டுக்­கொண்டு வரு­வார். மஹ்­முதா அன்று செய்த ஜாலா தோசை, வடை, வடபாவ், சமோசா என்று ஏதாவது கொண்­டு­வ­ரு­வார். பகிர்ந்துகொள்­வார்­கள்.

மஹ்­மு­தா­வுக்கு ஊர்த் தொடர்பு இன்­னும் நெருக்­க­மாக இருக்­கிறது. குட­வா­ச­லில் பல சிங்­கப்­பூர்­வா­சி­கள் இருக்­கி­றார்­கள்.

அவ்­வப்­போது மஹ்­மு­தா­வின் தாயார் காய்ந்த கறி (உப்­புக்­கண்­டம்) காய்ந்த குடல் கறி, கைஅப்­ப­ளம், பரங்­கிப்­பேட்டை அல்வா, பதுர்­பேணி, சீப்­புப்­ப­ணி­யா­ரம், நான­ஹத்தா என்று நிறைய ஊர்ப்­பண்­டங்­கள் கொடுத்­த­னுப்­பு­வார்.

அடிக்­கடி குட­வா­ச­லி­லி­ருந்து பலர் சிங்­கப்­பூர் வரு­வ­தால், மஹ்­மு­தா­வின் தாயா­ருக்கு அது எளி­தா­கவே இருந்­தது.

அவர் நிறைந்த பரோ­ப­காரி. தன் வீட்­டின் ஒரு பகு­தி­யையே பிள்ளை­கள் ஓது­வ­தற்­கான அரபி மத­ர­ஸா­வுக்கு கொடுத்­து­விட்­டார்.

இப்­ப­வும் பெரிய அள­வில் ஜகாத் கொடுக்­கும் குடும்­பம் மஹ்­முதா குடும்­பம்­தான். ஊரி­லி­ருந்து எது வந்­தா­லும் அதி­க­மான பங்கை ஆமினா­வுக்­குக் கொடுப்­பார் மஹ்முதா.

ஆமி­னா­வுக்கு ஊர்ப்­பண்­டம் என்­றால் உயிர். ஆயி­ரம் வெள்­ளி­யை­யும், உப்­புக்­கண்­டத்­தை­யும் ஒரு தட்­டில் வைத்­துக் கொடுத்­தால், உப்­புக்­கண்­டத்­தைத்­தான் எடுப்­பார்.

அந்த உறவு இரண்டு ஆண்­டு­ க­ளுக்­குப் பிறகு மீண்­டும் பள்­ளி­யில் தொடர்­வது எவ்­வ­ளவு பெரிய மகிழ்ச்சி. நீண்­ட­நாள் முடிக்­க­முடியா­மல் கிடந்த வீடு முடிக்­கப்­பட்டு குடி­யே­றி­ய­து­மா­திரி.

ஆனால் அன்று மஹ்­முதா முகத்­தில் மகிழ்ச்சி இல்லை. ஏதோ ஒன்று அவரை அழுத்­திக் கொண்­டி­ருக்­கிறது. தொழுகை இடை­வெ­ளி­களில் இமாம் துஆ கேட்­கும்­போதெல்­லாம் கண்­ணீரை அடக்­க­மு­டி­யா­மல் முகம் பொத்தி அழு­தார்.

அவ­ரி­டம் எது­வுமே பேச­மு­டி­ய­வில்லை. பேசு­வ­தற்கு தொழுகை முடி­ய­வேண்­டும். தொழுகை முடிந்து­ தானே பேச­மு­டி­யும். 9 மணிக்கு ஆரம்­பிக்­கும் தொழுகை 10.30க்குத்­தான் முடி­யும். இறு­தி­யில் இமாம் துஆ செய்­யும்­போது, பொங்­கிப்­பொங்கி அழுத மஹ்­மு­தாவை தன் தோளோடு அணைத்து பொத்­திக்­கொண்­டார் ஆமினா.

ஏதோ ஒரு பெரிய கவலை, தாங்­க­மு­டி­யாத வலி இருக்­க­வேண்­டும். மஹ்­முதா சொல்­வார் என்ற நம்­பிக்கை ஆமினா­வுக்கு உறு­தி­யாக இருந்­தது. அது வீண்­போ­க­வில்லை.

மஹ்­முதா சொன்­னார்.

"ஊர்ல அம்­மா­வுக்கு ஒடம்பு சரி­யில்ல ஆமினா. ஏதோ இரு­தயக் கோளா­றாம். தம்பி, அம்­மாவ மருத்­து­வ­ம­னை­யில சேத்­துட்­டாரு. ஒரு லட்­சம் உடனே அனுப்­புங்க மத்­தத நா பாத்­துக்­கி­றேங்­றாரு.

"மகன்ட்ட கேட்­டேன். ஊர்ல சொத்­தை­யெல்­லாம் எடுத்­துக்­கிட்­டாரு. நீங்க போனா­லும் பயந்­து­பயந்து போய் அம்­மா­வெப் பாத்­துட்டு வர்­றீங்க. சொத்­து­கள அனு­ப­விக்­கி­ற­வரு கொடுக்­கட்­டு­மேங்­கி­றாரு.

"அது­வும் நியா­யம்­தான். ஆனா பெத்த அம்­மா­வாச்சே. அவங்­க­ளுக்கு ஒன்­னுன்னா நா எப்­பு­டிம்மா சும்மா இருக்­க­மு­டி­யும்."

வார்த்­தை­கள் மிகச்­சி­ர­மப்­பட்டு வந்­தன. தோளில் சாய்ந்து மீண்டும் தேம்­பி­னார். பேச­மு­டி­யா­மல் தொண்டை அடைத்­தது. ஆனா­லும் தொடர்ந்­தார்

"ஆமினா எனக்கு ஒரு உதவி செய்ங்க. என்­கிட்ட கொஞ்­சம் நகெ இருக்கு. எடுத்­துட்டு வந்­தி­ருக்­கேன்," என்று சொல்லி, தன் கைப்­பை­யைத் திறந்து காட்­டி­னார். எல்லாம் பெரிய பெரிய நகை­கள். ஆமினா திடுக்­கிட்­டுப் போனார்.

மஹ்­முதா தொடர்ந்­தார்

"எனக்கு இந்த நகைய எங்கெ விக்­கி­ற­துங்­கி­ற­தெல்­லாம் தெரியாது. இது எல்­லாம் என் சொந்த நகை. என் மக­னுக்­குக்­கூ­டத் தெரி­யாது. எப்­ப­டி­யா­வது இத வித்து எனக்கு 2,000 வெள்­ளி­தாங்க. பண­மாற்று வியாபா­ரம் செய்ற சிராஜு நம்ம சொந்­தக்­கா­ர­ரு­தான். காலைல குடுத்தா சாயந்­த­ரமே என் தம்­பிக்­கிட்ட பணத்த சேத்­து­ரு­வாரு."

மீண்­டும் முகம் பொத்தி அழு­தார். ஆமினா சொன்­னார்

"என்ன மஹ்­முதா இப்­பு­டி­யெல்­லாம் பேசு­றிங்க. ஒங்க அம்மா என் அம்மா மாதிரி இல்­லியா. ஒங்க நகை­கள வித்­துத்­தான் நா குடுக்­க­ணுமா?

"என் சொந்­தக்­காசே 2,000 வெள்­ளிக்கு மேல இருக்கு. நாளெக்கி காலைல கொண்­டு­வந்து தர்­றேன். இது நமக்­குள்ள இருக்­கட்­டும். நகை­கள எடுத்­துக்­கிட்டு சந்­தோ­ஷமா போங்க.

"அம்­மா­வுக்கு ஒன்­னும் ஆகாது. ஒங்க துஆவெ என்­னோடெ துஆவெ அல்­லாஹ் கண்­டிப்பா கபுல் செய்­வான். தைரி­யமா இருங்க. காலைல பத்து மணிக்­கெல்­லாம் நா வந்­து­ரு­வேன்."

சொன்­ன­ப­டியே அடுத்­த­நாள் ஆமினா 2000 வெள்­ளியை மஹ்­மு­தா­வி­டம் கொடுத்­து­விட்டு திரும்பிவிட்­டார்.

ஆமினா, மஹ்­முதா இரு­வ­ருமே அறுபதைத் தாண்­டி­ய­வர்­கள். பள்ளி­ வா­ச­லில் அடுத்­த­டுத்த நாற்­கா­லி­யில் உட்­கார்ந்­து­தான் தொழு­வார்கள்.

ஆமி­னா­வுக்கு ரத்த அழுத்த நோய் உண்டு. அதற்­காக அவர் மருந்து எடுத்­துக்கொண்­டு­தான் இருக்­கி­றார்.

காசைக் கொடுத்து வந்­த­தும் இஃப்தா­ருக்­கான சமை­ய­லில் இறங்கி ­விட்­டார். ஒரு குக்­கரை அடுப்­பில் ஏற்­றி­ய­போது தலைசுற்றித் தடு­மா­றி­னார்.

வயிற்­றைக் கலக்கிக்­கொண்டு வந்­தது. கழி­வறை சென்றார். வியர்த்­துக் கொட்­டி­யது. ஏதோ செய்­கிறது. மகள் வீடு பக்­கத்­தில்­தான். கண­வர் வேறு வேலை­யாக தூரத்­தில் இருக்­கி­றார். நிற்­கக்­கூட முடி­ய­வில்லை. சுவரைப் பிடித்தே நடந்­து­வந்து படுத்­துக்­கொண்­டார்.

மகளை அழைத்­தார். இன்­னும் மயக்­க­மா­கத்­தான் இருக்­கி­றார். ரத்த அழுத்­தம் அதி­க­மா­கி­யி­ருக்­க­லாம். தொலை­பே­சிச் செய்­தி­யைக் கேட்ட மாத்­தி­ரத்­தில் அடுத்த நிமிடமே மகள் வந்­து­விட்­டார்.

ரத்த அழுத்­தம் பார்த்­தார் 190ஐ தொட்­டது. அதிர்ந்­து­போ­னார். அது மிக­வும் ஆபத்­தான அள­வல்­லவா? அத்­தா­வி­டம் செய்­தி­யைச் சொல்­லி ­விட்டு ஆம்­பு­லன்ஸை அழைத்­து­விட்­டார். அடுத்த சில நிமி­டங்­களில் ஆம்புலன்ஸ் சங்­கூ­திக்­கொண்டு வந்து­விட்­டது.

மூன்று துணை மருத்துவ ஊழியர்கள் பூட்ஸ் காலு­டன் ஏகப்­பட்ட கரு­வி­க­ளோடு உடல்­முழுக்க ஒரு ஊதா நிற கவ­சத்­து­டன் அறைக்கே வந்­து­விட்­டார்­கள்.

கிடு­கி­டு­வென்று ஈசி­ஜியை ஓட­விட்­டார்­கள். உடம்­பில் பல இடங்­களில் எதை­யெ­தையோ பொருத்­தி­னார்­கள்.

ஒரு­வர் ஈசி­ஜி­யைக் கண்­காணித்­தார் ஒரு­வர் ஆக்‌ஸி மீட்­டரை வைத்­தார். இன்­னொ­ரு­வர் ரத்­தத்­தில் சர்க்­கரை அள­வைப் பார்க்க ஊசி­யோடு தயா­ரா­னார். ஆக்ஸி மீட்­டர் பார்த்­த­வர் ஏஆர்டி எடுக்­கத் தயா­ரா­னார். எல்­லாம் மள­ம­ள­வென்று முடிந்­தது.

ரத்­த­ழுத்­தம் இப்­போது 180 காட்­டி­யது. ரத்­தத்­தில் சர்க்­கரை 7.8 என்­றது. ஏஆர்டி நெக­டிவ் என்­றது. எது­வுமே அபா­ய­மல்ல. ஈசி­ஜி­யும் பயங்­காட்­ட­வில்லை. மூத்த மருத்­து­வர் சொன்­னார்.

"எல்­லாம் சரி­யா­கத்­தான் இருக்­கிறது. பயப்­பட ஒன்­று­மில்லை. ஆனா­லும் திடீ­ரென்று 190 காட்­டு­கி­ற­தென்­றால் நரம்­புப் பிரச்­சினை இருக்­க­லாம். சி.டி ஸ்கேன் மற்­றும் சில சோத­னை­கள் செய்­தால்­தான் தெரி­யும்," என்றபடி சொன்­ன­தோடு சக்­க­ர­நாற்­காலியை ஒரு­வர் வீட்­டுக்­குள் கொண்­டு­வந்­தார்.

ஆமி­னாவை ஏற்றிக்­கொண்­டி­ருந்தனர். அப்போது கண­வர் வந்­து­விட்­டார். ஆமி­னா­வுக்­குத் துணை­யாக கண­வர் இருந்­து­கொண்­டார்.

ஆம்­பு­லன்ஸ் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னைக்கு விரைந்­தது. சிறிது நேரம் காத்­தி­ருப்­புக்­குப்­பின் சிறப்பு அறை ஒதுக்­கப்­பட்­டது. உடன் சி.டி ஸ்கேன் எடுக்­கப்­பட்­டது. எது­வும் பயப்­ப­டும்­ப­டி­யாக இல்லை.

மருத்­து­வர் சொன்­னார், "மூத்த மருத்­து­வர் வேலை முடிந்து சென்று­ விட்­டார். நாளைக்­காலை அவர் வந்­த­பி­றகு அவர் ஒப்­பு­த­லு­டன் நீங்கள் வீட்­டுக்­குச் செல்­ல­லாம். ஸ்கேன் முடி­வு­கள் பயப்­ப­டும்­ப­டி­யாக இல்லை. ஆனா­லும் மூத்த மருத்­து­வர்­தான் முடி­வெ­டுக்க முடியும்."

அன்று இரவு ஆமினா தொழு­கைக்­குச் செல்­ல­வில்லை. செல்­ல­வும் முடி­யாது. மஹ்­மு­தா­வி­டம் கொடுத்த காசு அன்று மாலையே மஹ்­முதா தம்­பி­யி­டம் கொடுக்­கப்­பட்­டு­விட்­டது. ஆமி­னா­வுக்கு இப்படி ஆகி­விட்­டது மஹ்­மு­தா­வுக்கு பேர­திர்ச்­சி­யா­கி­விட்­டது. அன்று தொழுகை முடிந்து அல்­லாஹ்­வி­டம் ஏந்­திய கைகளை மஹ்­முதா இறக்கவே இல்லை. கண்­ணீர் கொட்­டி­யது.

"அல்­லாஹ் ஏந்­திய என் கைகளை வெறுங்­கை­க­ளாக ஆக்கி­ வி­டாதே. ஏதா­வது பாவங்­கள் தவ­று­கள் இருக்­க­லாம். இந்த ரம­லா­னின் பரக்­கத்­தைக் கொண்டு ஆமினா­வை­யும் என் தாயா­ரை­யும் நல­மோடு என்­னி­டம் சேர்த்­து­விடு!" மன­சுக்­குள்­ளேயே கத­றி­னார் மஹ்­முதா.

அடுத்­த­நாள் காலை 10 மணி. மூத்த மருத்­து­வர் வந்­து­விட்­டார். எல்லா சோத­னை­க­ளை­யும் பார்த்­தார். பின் சொன்­னார், "ஒன்­றும் பிரச்­சினை இல்லை. சில பேப்­பர்­கள் தயா­ராக வேண்­டும். எல்­லாம் முடிந்­த­தும் கையெ­ழுத்­துப் போட்டு­ விட்டு உங்­கள் மனை­வி­யைக் கூட்­டிச் செல்­லுங்­கள்."

ஆமினா இயல்புநிலைக்கு வந்து­ விட்­டார். 11 மணி. மஹ்­முதா தொலை­பே­சி­யில் அழைத்­தார். ஆமினா­வுக்கு சலாம் சொல்­லி­ய­போது குரல் உடைந்­தது.

"பயப்­ப­டா­தீங்க மஹ்­முதா. ஒன்னும் பிரச்­சினை இல்­லென்னு மூத்த மருத்­து­வர் சொல்­லிட்­டாரு. இன்­னிக்கு சாயந்­த­ரம் வீட்­டுக்கு வந்­து­ரு­வேன். ஒடம்­புல தண்­ணிச்­சத்து இல்­லி­யாம். நெறையா தண்ணி குடிக்­கச் சொன்­னாரு. வேறெ ஒன்­னு­மில்ல மஹ்­முதா. இன்­னிக்கு ராத்­திரி பள்­ளி­யில சந்திப்­போம். தைரி­யமா இருங்க. அல்­லாஹ் நம்­மல அவ்­வ­ளவு எளிதா கைவிட்­ற­மாட்­டான். அது­வும் ரம­லான் மாதம்."

மஹ்­முதா, "நீங்க எனக்கு செஞ்ச ஒதவி சாதா­ர­ண­மா­ன­தில்ல ஆமினா. நிச்­ச­யமா நம்ம துஆவெ இந்த ரம­லா­னின் பரக்­கத்­தைக் கொண்டு அல்­லாஹ் கபுல் செய்து­வி­டு­வான்," என்று சொல்­லிக் கலங்­கி­னார்.

அன்று இரவு இரு­வ­ரும் பள்ளி­யில் சந்­தித்­துக்கொண்­டார்­கள். ஆனந்­தக் கண்­ணீர் கயி­றாக இரு­வரை­யும் கட்­டிப்­போட்­டது. மஹ்­முதா சொன்­னார்

"அம்­மா­வுக்கு பயப்­ப­டும்­படி ஒன்னும் இல்­லி­யாம். இன்­னிக்கி ராத்­திரி வீட்­டுக்கு வந்­து­ரு­வாங்­க­லாம். ஏதோ அடப்பு இருக்­கு­றது மாரி இருந்­துச்­சாம். ஸ்டன்ட் வக்­க­னும்னு சொன்­னாங்க. இப்ப அதுவும் தேவை­யில்­லை­யாம். எல்­லாமே கன­வு­மாதிரி வந்து பயங்­காட்­டிட்­டுப் போயி­ருச்சு."

அன்று இர­வுத் தொழுகை முடிந்து இமாம் சில நிமி­டங்­கள் பயான் செய்­தார். அன்­றைய தலைப்பு துஆ­வின் மகிமை. இமாம் பயானை இந்த வார்த்­தை­க­ளோடு முடித்­தார்.

"இந்த ரம­லான் மாதத்­தின் பரக்கத்­தைக் கொண்டு நீட்­டும் கைகளை தன் அருட்­கொ­டை­யால் அல்­லாஹ் நிறைத்­து­வி­டு­வான்."

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!