கேட்க வேண்டாமா?

கேட்க வேண்டாமா?

1 mins read

உழைப்பு வெற்றியைப் பகிர்ந்தளிக்கிறது

உண்டாகும் களைப்போ

உற்சாகத்தைப் படரவிடுகிறது

பேச்சைக் குறைக்கின்ற உழைப்பு

பெரியதொரு சிந்தனையாகி

பெருமையுடன் சாதிக்கிறது

கருவியாகி உருவாகி நின்று

காரணமாய் நடத்திச் செல்லும்

கைகளுக்கு கௌரவம் சேர்க்கிறது

உழைப்புக்கு இத்தனை சிறப்பாவென

புருவத்தை உயர்த்தும் சிந்தனை

உழைத்தவன் உயர்ந்தானா என

கேட்க வேண்டாமா?

உலகத்தில் நிலைத்தானா என

உரக்கக் குரல் கொடுக்க வேண்டாமா?

-சித. அருணாசலம்