தோன்றும் தோன்றும்

தோன்றும் தோன்றும்

1 mins read

அஞ்ஞானம் அகன்றால் அது தோன்றும்

அறிவைக் கடந்து பயணித்தால் அது தோன்றும்

தோற்றுத் தோற்றுக் கலங்கும்

போதும் அது தோன்றும்

மன வேதனையின் உச்சத்தில்

அது முன்வந்து தோன்றும்

எப்படிப் போகலாம் என்று

கலங்கும்போதும் அது தோன்றும்

பிணிதரும் பீதியிலும் வலிதரும் மீதியிலும்

அது முன்னின்று தோன்றும்

மயிரிழையில் உயிர்பிழைத்தால்

அது அழையா விருந்தாளியாய்த் தோன்றும்

துயரின் பிடியில் துவளும்

போது அது விளக்காய்த் தோன்றும்

செய்தவற்றை மெய்யாய் உணரும்

தருணம் அது தோன்றும்

பிறர் செய்யும் தவற்றை மனதார

மன்னிக்கும்போதும் அது தோன்றும்

பிரதிபலனில்லா அன்பை பிறருக்குத்

தந்தால் அது மனதில் தோன்றும்

தோன்றா இறைவன் கருணை

உள்ளத்தில் தோன்ற அனைத்தும் தோன்றும் தோன்றும்

ஒழுக்கம் தவறாது ஒழுகினால்

உன் வாழ்வில் தோன்றும் அனைத்தும் துலங்கும்

- இராம நாச்சியப்பன்