நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்

2 mins read

தலைப்பு: ஆரண்ய காண்­டம்

நூலா­சி­ரி­யர்: கொ.மா.கோதண்­டம்

பதிப்­பா­ளர்: சென்னை, தாமரை பப்­ளி­கே­ஷன்ஸ் (பி) லிட்., 2015.

குறி­யீட்டு எண்: Tamil KOT

அனைத்து உரி­மை­களும் காப்­பு­ரி­மைக்கு உட்­பட்­டவை.

20ஆம் நூற்­றாண்­டின் குறிஞ்­சிக் கபி­லர் என்று போற்­றப்­படும் நூலா­சி­ரி­ய­ரின் "காட்­டுக்­குள்ளே இசை விழா" என்ற நூலுக்கு சாகித்ய அகா­டமி விருது வழங்­கப்­பட்­டது.

பதி­னொரு சிறு­க­தை­களும் ஆரண்ய காண்­டம் என்ற நெடுங்­க­தை­யும் கொண்ட இந்­நூல் இந்­தி­யக் குடி­ய­ர­சுத் தலை­வர் விரு­து­பெற்ற நூலா­கும்.

எளிய மக்­க­ளு­டன் நேரி­டை­யாக தொடர்பு­கொண்ட எழுத்­தா­ளர் என்­பதை அவ­ரின் ஒவ்­வொரு கதை மூலமும் நன்கு உணர முடி­கிறது.

மண் வாச­னை­யைப்­போல இவ­ரின் கதை­களில் எழில் கொஞ்­சும் மலை­களின் அழகு கொஞ்­சு­கிறது.

"ஓ... அந்த உயர்ந்த மலை­க­ளின் அடர்ந்த காடு­க­ளுக்­குள்ளே!" என்­கிற கதை­யில் வனாந்­தி­ரத்­தில் புதைந்து கிடக்­கும் மரஞ்­செ­டி­க­ளை­யும் மிரு­கங்­க­ளின் நட­மாட்­டத்­தை­யும் நன்கு விவ­ரித்து நம்­மை­யும் பத்­தி­ர­மாக அடர்ந்த காட்­டுக்­குள் அழைத்­துச் செல்­கி­றார்.

'தட்­டுப்­பலா' என்­கிற விஷச்­செ­டி­யைப்­பற்றி அரி­தான தக­வ­லை­யும் தந்­தி­ருக்­கி­றார்.

ஆனால், கதை­யில் துய­ரத்­தை­யும் நெஞ்­சைப் பிழி­யும் முடி­வை­யும் தந்து உள்­ளார்.

'நைட் வாட்ச்­மேன்' கதை­யில் மனி­த­னுக்­குத் தேவை தூக்கம் என்­பதை உணர்த்­தி­யுள்­ளார்.

'வாழ்க்­கைச் சுமை', 'ஒரு வாய்க் கஞ்சி' கதை­களில் வாழ்க்­கைப் போராட்­டங்­களை உருக்­க­மா­கப் படைத்­தி­ருக்­கி­றார். பெண் மன­தின் அற்­பு­தத்தை அறி­யா­த­வர்­க­ளுக்கு 'ஓ...இவ­ளி­ட­மும்' கதை­யில் விடை கிடைக்­கும்.

மேலும், 'புக­ழுக்­குப் பின்னே...', 'கல்­யா­ணச் சாப்­பாடு', 'வைர­மோ­தி­ரம் எங்கே?' போன்ற அரு­மை­யான சிறு­க­தை­களும் இடம்­பெற்­றுள்­ளன.

இந்த நூல் கிடைக்­கும் நூல­கங்­க­ளின் விவ­ரங்­க­ளைப் பெற: http://catalogue.nlb.gov.sg

-தேசிய நூலக வாரிய நூல் அறி­மு­கக் குழு