காலனும் கிழவியும்

- புதுமைப்பித்தன்

வெள்­ளைக்­கோ­யில் என்­றால் அந்­தப் பகு­தி­யில் சுடு­காடு என்ற அர்த்­தம். ஆனால் அது ஒரு கிரா­ம­மும் கூட. கிராம முனி­ஸீபு முத­லிய சம்­பி­ர­மங்­கள் எல்­லாம் உண்டு. ஊர் என்­னமோ அப்­படி அப்­ப­டித்­தான்.

'வெள்­ளைக்­கோ­யி­லுக்­குப் போகி­றேன்' என்­றால் உல­கத்­தி­டம் செலவு பெற்­றுக்­கொள்­வது என்­பது அந்­தப் பகுதி வாசி­க­ளின் வியாக்­கி­யா­னம். ஆனால், வெள்­ளைக்­கோ­யி­லுக்­குப் போய்த் திரும்பி வரு­கி­ற­வர்­களும் பலர் உண்டு. ஏன், சுப்பு நாடான் தின­சரி காலை­யும் சாயங்­கா­ல­மும் அங்கு போய்த்­தான் ஏழை மக்­க­ளுக்­குக் கஷ்­டத்தை மறக்க வைக்­கும் அமு­தத்தை இறக்கி வரு­கி­றான். மாடத்தி தின­சரி அங்கு போய்த்­தான் சுள்ளி பொறுக்­கிக் கொண்டு திரும்­பு­கி­றாள். ஆனால் இப்­ப­டித் திரும்­பு­கி­ற­வர்­க­ளைப் பற்றி மட்­டி­லும் நினைவு வரு­கி­ற­தில்லை போலும் அவ்­வூர்­வா­சி­க­ளுக்கு.

அந்­தப் பிர­தே­சத்­திற்­குச் சென்­றும் வெறுங்­கை­யு­டன் திரும்பி வரும் நிலைமை ஒரே ஓர் ஆசா­மிக்கு ஏற்­பட்­டது. அவர்­தான் தர்­ம­ரா­ஜர்.

இந்­தச் சமா­சா­ரத்­தைப் பற்றி வெள்­ளைக் கோயில்­கா­ர­ருக்­குத் தெரி­யாது. ஏனென்­றால், மரு­தாயி, புகை­யும் சுடு­காட்­டுக்­கும் சல­ச­லக்­கும் பனை­வி­ளைக்­கும் இடை­யில் உள்ள ஒரு குடி­சை­யில் வசிக்­கும் கிழவி.

மரு­தா­யிக்கு இந்த விளை­யில் பனை­கள் சிறு விட­லி­க­ளாக நின்­றது தெரி­யும். அது மட்­டுமா? கும்­பி­னிக்­கா­ரன் பட்­டா­ளம் அந்த வழி­யா­கச் சென்­றது எல்­லாம் தெரி­யும். அந்­தக் காலத்­தில் மரு­தா­யி­யின் பறை­யன் நல்ல செய­லுள்­ள­வ­னாக இருந்­தான். வஞ்­ச­க­மில்­லா­மல் குடிப்­பான்.

மரு­தா­யிக்கு அந்­தக் காலத்­தி­லே­யி­ருந்த மிடுக்கு சொல்லி முடி­யாது. அறுப்­புக்­குச் சென்­று­விட்டு, களத்­தி­லி­ருந்து மடி நிறை­யக் கொண்டு வரும் நெல்லை, கள்­ளாக மாற்­று­வ­தில் நிபுணி. சதி­ப­தி­கள் இரு­வ­ரும் இந்த இலட்­சி­யத்தை நோக்கி நடந்­தால் வெள்­ளைக் கோயில் பக்­கம் குடி­யி­ருக்­கா­மல் வேறு என்ன செய்ய முடி­யும்?

மரு­தா­யிக்கு பிள்­ளை­கள் பிறந்­தன. அவை­யெல்­லாம் எப்­பவோ ஒரு காலத்­தில் நடந்த சமா­சா­ரம் - கனவு போல, இப்­பொ­ழுது பேரன் மாட­சா­மி­யும், எரு­மைக்­கி­டா­வுந்­தான் அவ­ளு­டைய மங்­கிய கண்­கள் கண்ட உண்­மை­கள். கிடாவை வெளி­யில் மேய­விட்­டுக் கொண்டு வரு­வான் பேரன். கிடா­வும், நன்­றா­கக் கரு­க­ரு­வென்று ஊரார் வயலை மேய்ந்து கொழுத்து வளர்ந்­தி­ருந்­தது. வாங்­கு­வ­தற்கு ஆள் வரு­வதை மாட­சாமி எதிர்­பார்த்­தி­ருந்­தான்.

மாட­சாமி அவ­ளு­டைய கடைக்­குட்­டிப் பெண்­வ­ழிப் பேரன். கொஞ்­சம் துடி­யான பயல். பாட்­ட­னின் ரத்­தம் கொஞ்­சம் ஜாஸ்தி. அத­னால்­தான் மாடு மேய்க்­கிற 'சாக்­கில்' கிழ­வி­யைக் குடி­சை­யில் போட்டு­விட்­டுப் போய்­வி­டு­வான். அவ­னுக்கு ஒரு பெண்­ணைக் கட்டி வைத்­து­விட்­டால் தனக்கு இந்­தக் குடி­சைக் காவல் ஓயும் என்று நினைப்­பாள். கிழவி தன் கைக்கு ஒரு கோல் போல அவ­ளுக்­கும் ஒரு உத­விக் கட்டை தேவை என்று நினைத்­தாள்.

காலத்­தின் வாசனை படாத யம­பு­ரி­யில் சிறிது பர­ப­ரப்பு. யம தர்­ம­ராஜா நேரி­லேயே சென்று அழைத்து வர­வேண்­டிய ஒரு புள்­ளி­யின் சீட்­டுக் கிழிந்­து­விட்­டது என்­ப­தைச் சித்­தி­ர­புத்­தி­ரன் மகா­ரா­ஜா­வி­டம் அறி­வித்­தான். சித்­தி­ர­புத்­தி­ர­னுக்கு ஓலைச் சுவ­டி­க­ளைப் பார்த்­துப் பார்த்தோ என்­னவோ சிறிது கால­மா­கப் பார்வை அவ்­வ­ளவு தெளி­வில்லை.

நேற்­றும் இன்­றும் அற்ற லோகத்­தில் மாறு­தல் ஏற்­ப­டு­வது ஆச்­ச­ரி­யந்­தான். இருந்­தா­லும் உண்­மையை மறைக்க முடி­ய­வில்­லையே!

தர்­ம­ரா­ஜா­வின் சிங்­கா­த­னத்­தின் மேல் அந்­த­ரத்­தில் தொங்­கும் ஒளி­வா­ளின் மீது மாசு படர்ந்­து­விட்­டது. கார­ணம், மகா­ரா­ஜ­னின் தொழி­லி­லும் மனத்­தி­லும் மாசு படர்ந்­த­தால் என்று கிங்­க­ரர்­க­ளுக்­குள் ஒரு வதந்தி. மகா­ரா­ஜா­வும் தம் முன்­வரும் உயிர்­க­ளுக்கு நியா­யம் வழங்­கும் போதெல்­லாம் அடிக்­கடி உயர அண்­ணாந்து வாளைப் பார்த்­துக் கொள்­வா­ராம்.

போருக்கு முதல்­வ­னை­யும் ஊருக்கு மூத்தவரையும் மகா­ரா­ஜாவே நேரில் சென்று அழைத்து வர­வேண்­டும் என்­பது சம்­பி­ர­தா­யம். காலத்­திற்கு அதி­ப­தி­யான மன்­னன் அந்­தக் கைங்­க­ரி­யத்­தைச் செய்­வ­தில் மனக் குழப்­பம் ஏற்­பட்­டது.

பூலோ­கத்­திலே, குறிப்­பாக வெள்­ளைக்­கோ­யி­லிலே, அப்­போது அஸ்­த­மன சம­யம். பேய்க்­காற்று யம­தர்­ம­ரா­ஜ­னின் வரு­கையை அலறி அறி­வித்­தது. பனை­ம­ரங்­கள் தங்­கள் ஓலைச் சிரங்­க­ளைச் சல­சலத்­துச் சிரக்­கம்­பம் செய்­தன.

சுடு­காட்­டுச் சிதை­யில் வெந்து நீறா­கும் வாத்­தி­யார் உடல் ஒன்று கிழ­விக்­குக் கிடைக்­கப் போகும் பெரு­மை­யைக் கண்டு பொறா­மைப் புகை­யைக் கக்­கித் தன்­னை­ய­ழித்­துக் கொண்­டது. எங்­கி­ருந்தோ ஒரு கூகை­யின் அல­றல்.

ஓடிப் போய்ப் பேயாக மாறி­யா­வது தனக்­குக் கிடைக்­கப் போகும் சித்­தி­ர­வ­தை­க­ளி­லி­ருந்து தப்ப முய­லும் வாத்­தி­யார் உயிரை மறித்து, தூண்­டி­லில் மாட்டி, மேல் நோக்­கிப் பறக்­கும் கிங்­க­ரர்­கள், மகா­ராஜா தூரத்­திலே வரு­வ­தைக் கண்டு வேக­மாக யம­பு­ரியை நோக்­கிச் செல்­ல­லா­னார்­கள்.

எங்­கி­ருந்தோ ஒரு நாய் தர்­ம­ரா­ஜ­னின் வரு­கையை அறிந்து கொண்டு அழுது ஓல­மிட்­டது.

கிழவி, குடி­சைக் கதவை இழுத்­துச் சாத்­தி­விட்டு இடுக்­கான நடை­யில் வந்து உட்­கார்ந்து வெற்­றி­லைக் குழ­வியை எடுக்­கத் தட­வி­னாள். கை கொஞ்­சம் நடுங்­கி­யது. என்­று­மில்­லாத கொஞ்­சம் நாவ­றட்சி ஏற்­பட்­டது. 'சுவத்­துப் பயலே அந்­திலே சந்­திலே தங்­காதே. மாட்டே ஓட்­டிக்­கிட்டு வந்­தி­ருன்னு சொன்னா, மூதி...' என்று சொல்­லிக்­கொண்டே தண்­ணீர்க் கல­யத்தை எடுத்­தாள்.

புறக்­க­டை­யில் திடு­தி­டு­மென்று எரு­மைக் கிடா வந்து நின்­றது. அதன் மேலி­ருந்த கறுத்த யுவன் குதித்­தான்.

"ஏலே மாடா, எத்­தினி தெற­வே­தான் ஒன்­கிட்­டச் சொல்லி மார­டிக்க, மூதி, தொளு­விலே கட்டி, பருத்தி விதையெ அள்ளி வய்யி, பாளை­யங்­கோட்டை எசமா வந்­தி­ருந்­தாவ. நாளைக்கி கடாவெ கொண்­டா­ரச் சொன்­னாவ!" என்­றாள் வந்­த­வ­னைப் பார்த்து.

வந்­த­வன்தான் எம­தர்­ம­ராஜா.

'பாவம் கிழ­விக்கு அவ்­வ­ளவு கண் பஞ்­ச­டைந்து போய்­விட்­டதா?' என்று அவன் மனம் இள­கி­யது. கிழ­வி­யின் கடைசி விருப்­பத்­திற்­குத் தடை­யாக ஏன் இருக்க வேண்­டும் என்று எரு­மை­யைத் தொழு­வில் கட்­டி­விட்டு, பருத்தி விதையை அள்­ளி­வைத்­தான். பூலோ­கத் தீனி­யைக் கண்­டி­ராத எருமை திரு­தி­ரு­வென்று விழித்­தது.

கிழவி திடுக்­கிட்டு விடா­மல் இத­மாக வந்த காரி­யத்­தைத் தெரி­விக்க வேண்­டும் என்று நினைத்­துக் கொண்டு, குனிந்து குடி­சைக்­குள் நுழைந்­தான் யமன்.

"ஏலே அய்யா, அந்த வெத்­தி­லைச் சருகை இப்­பி­டித் தள்­ளிப் போடு!" என்­றாள் கிழவி.

வெற்­றி­லையை எடுத்­துக்­கொடுத்­து­விட்டு, "அதி­ருக்­கட்­டும் கிழவி, நான் யார் தெரி­யுமா? என்னை நல்­லாப் பாரு! நான் தான்..." என்று ஆரம்­பித்­தான் எமன்.

"என்ன குடிச்­சுப்­பிட்டு வந்­தி­யாலே! எனக்­கென்ன கண்ணு பொட்­டை­யாப் போச்­சுன்னு நினைச்­சிக்­கிட்­டி­யாலே!" கிழ­விக்கு அவன் நின்ற நிலை­யைப் பார்த்­த­தும் மத்­தி­யா­னச் சம்­ப­வம் ஏதோ நினை­வுக்கு வந்­தது.

"சிங்­கி­கொ­ளத்தா மவளே, அவ­தான் சொக்கி. அவ­ளைப் பார்த்­தி­ருக்­கி­யாலே... நேத்­துக்­கூ­டச் சுள்ளி பொறுக்க வந்­தாளே... அவ அப்­பங்­கா­ரன் வந்­தி­ருந்­தான்... உனக்கு அவ­ளெப் புடிச்­சுக் கட்­டிப் போட்­டுட்டா நல்­ல­துன்­னான். என்ன சொல்றே?..."

காலத்­தின் அதி­ப­னான, காலத்­தின் எல்­லைக்கு அப்­பாற்­பட்ட யம­தர்­ம­ரா­ஜன் நடு­ந­டுங்­கி­னான்.

"நான் தான் யம­தர்­ம­ரா­ஜன்!" என்று அவ­னது வாய் உள­றி­யது. பயப்­பி­ராந்­தி­யில் வாய் உண்­மை­யைக் கக்­கி­யது. ஆனால் அந்த உண்மை கிழ­வி­யின் உள்­ளத்தில் பயத்தை ஏற்­ப­டுத்­த­வில்லை.

"குடிச்­சுப்­பிட்­டுத்­தான் வந்­தி­ருக்கே... ஒங்க பாட்­டன் குடிச்­சுக் குடிச்­சுத்­தான் தொலைஞ்­சான்... அதான் வெள்­ளக்­கோ­யில் குடிசை! நாச­மாப் போரத்­துக்கு நாலு வளி வேணுமா? விதி யாரை விட்­டுது...?" என்­றாள்.

விதி­யைப் பற்றி நினைத்­த­தும் கிழ­விக்கு என்­று­மில்­லாத தளர்வு தட்­டி­யது... மூச்­சுத் திண­றி­யது... யம­னுக்­குக் கால்­களில் தெம்பு தட்­டி­யது... விதிக்­கோ­லைப் பற்­றித் தன் ஆட்­சியை நிலை­நாட்ட நிமிர்ந்­தான்...

"ஏலே... ஒன் வக்­க­ணை­யெல்­லாம் இருக்­கட்­டு­மிலே, என்னா, எருமை அத்­துக்­கிட்டு ஓடுது? மறிச்­சுப் பிடிச்சா?" என்­றாள் கிழவி.

'ஏதேச்­சை­யாக அலைந்த வாக­னத்­தைக் கட்­டிப் போட்­டுப் பருத்தி விதை வைத்­தால் நிற்­குமா?' என்று நினைத்­துக்கொண்டே, வெளி­யேறி வந்து சமிக்ஞை செய்­தான் யமன். வாக­னம் வந்து மறை­வில் அவன் சொற்­படி நின்­றது.

எரு­மை­யின் முது­கில் போட்­டி­ருக்­கிற பாசக் கயிற்றை எடுத்­துக் கொண்டு மறு­ப­டி­யும் உள்ளே நுழைந்­தான் யமன். பாசத்­தால் அவ­ளைக் கட்­டி­வி­ட­லாம் என்று நம்­பி­னான். பாவம்!

"ஏலே, கயிறு நல்லா உறு­தி­யாக இருக்கே, எங்­கலே வாங்­கினே? ஒங்க பாட்­ட­னி­ருந்­தா­ருல்லே, அவ­ருக்கு அப்­பங்க காலத்­து­லே­தான் இது மாதிரி கெடைக்­கும். அங்­கென சுத்தி ஒரு கொடி­யாக் கட்­டிப் போட்டு வய்யி, ஒண்­ணுக்­கு­மில்­லாட்டா நாலு ஓலை­யை­யா­வது சேத்­துக் கட்­டிக்­கிட்டு வர­லாம்!" என்­றாள்.

பாசக் கயிற்­றின் நுனி­யைக் கூரை­யைத் தாங்­கும் விட்­டத்­தில் கட்­டிக்­கொண்டே, நான் அவள் பேரன் அல்­லன் என்­பதை இந்­தக் கிழ­விக்கு எப்­ப­டித் தெளி­வு­ப­டுத்­து­வது என்று எண்­ணி­யெண்­ணிப் பார்த்­தான். தனது சுய உரு­வைக் காண்­பித்­தால் பயந்­து­விட்­டால் என்ன செய்­வது என்றே நினைப்பு... வேறு வழி­யில்லை...

'ஏ, கிழவி, என்னை இப்­படி திரும்­பிப் பார்!" என்று அதி­கா­ரத்­தொ­னி­யில் ஒரு குரல் எழுந்­தது.

கிழவி திரும்­பிப் பார்த்­தாள். கூரை­யின் முகட்­டை­யும் தாண்டி, ஸ்தூ­லத் தடை­யால் மறை­யா­மல் யமன் தன் சுய உரு­வில் கம்­பீ­ர­மாக நிற்­ப­தைக் கண்­டாள்.

"நீ யாரப்பா! இங்னெ எம் பேரன் நிண்­டு­கிட்­டி­ருந்­தானே, அவ­னெங்கே?" என்­றாள்.

"நான் தான் யமன்! நான் தான் அவன்; உன் பேர­னில்லை!" என்­றான் யமன்.

"அப்­ப­டியா சேதி! வா இப்­படி இரி" என்று சொல்லிக்கொண்டே, வெற்­றி­லை­யைத் தட்­டத் தொடங்­கி­னாள் கிழவி, "இப்­பம் எதுக்கு இங்கெ வந்தே?"

யமன் அவள் அரு­கில் வந்து உட்­கார்ந்­தான். அத­னால் நின்­ற­தன் காம்­பீ­ரி­யம் மறைந்­து­விட்­டது.

"போருக்கு முதல்­வ­னை­யும் ஊருக்கு மூத்­த­வ­ரை­யும் நான் தான் அழைத்­துக் கொண்டு போக வேண்­டும்!" என்­றான்.

"அப்­பி­டின்னா?"

"நீ என் கூட வர­வேண்­டும். நீ அப்­பொ­ழுது கட்­டிப்­போ­டச் சொன்­னாயே அது உன் எரு­மை­யல்ல, என் வாக­னம்..."

"நான் ஒன்­கூட வர­ணு­மாக்­கும்! என்னெ கூட்­டிக்­கிட்­டுப் போவ ஒனக்­குத் தெறமை யிருக்கா? ஒனக்­குப் பாதி வேலே­கூட சரி­யாச் செய்­யத் தெரி­யாதே. என்­னெக் கட்டோடெ கூட்­டிக்­கிட்­டுப் போவ ஒனக்கு முடி­யுமா?"

"எனக்கு முடி­யாத ஒன்று இருக்­கி­றதா? நான் இது­வரை எத்­தனை பேரை அழைத்­துச் சென்­றி­ருக்­கி­றேன். அது உனக்­கெப்­ப­டித் தெரி­யும்? நீ என்ன புரா­ணம் இதி­கா­சம் படிக்­கக் கூடிய ஜாதி­யில் பிறந்­தி­ருக்­கி­றாயா?..." இப்­ப­டிச் சொல்­லிக் கொண்டு போகும் பொழுதே யம­னுக்­குத் தானே தனக்­குப் பொய் சொல்­லிக் கொள்­கிறது போலப் பட்­டது; ஏனென்­றால் அவ­னுக்கு மார்க்­கண்­டன் சமா­சா­ர­மும் நினை­வுக்கு வந்துவிட்­டது.

"அதெல்­லாம் இருக்­கட்­டும். நீ என்­னெக் கூட்­டிக்­கிட்டு போய்த்­தின்னா, நான் இருந்த நெனப்பே, என்­னைப் பத்­தின நெனப்பே, நான் வச்­சி­ருந்த பொளங்­கின சாமா­னெல்­லாம் ஒன்­னோடெ எடுத்­துக்­கிட்­டுப் போவ முடி­யுமா? என்­னமோ எமன் கிமன் இன்னு பய­மு­றுத்­தி­ரியே. ஒன் தொழிலே ஒனக்­குச் செய்­யத் தெரி­ய­லியே! அதெத் தெரிஞ்­சுக்­கிட்டு எங்­கிட்ட வா!" என்று காலை நீட்­டிக் கொண்டு முழங்­கா­லைத் தட­வி­னாள் கிழவி.

"என்ன சொன்­னாய்! எனக்கா தெரி­யாது? இதோ பார், உன்னை என்ன செய்­கி­றேன்!" என்று உறு­மிக் கொண்டு எழுந்­தான் யமன். அந்தோ! அவன் வீச­வேண்­டிய பாசக்­க­யிறு அவனே கட்­டிய கொடி­யா­கத் தொங்­கி­யது?

"உன்­னாலெ என் உசி­ரெத்­தானே எடுத்­துக்­கிட்­டுப் போவ முடி­யும்? இந்த உட­லைக்­கூ­டத் தூக்­கிட்­டுப் போவ உனக்­குத் தெறமை இருக்கா? யோசிச்­சுப் பாரு. ஒண்ணெ வேறயா மாத்த முடி­யும். உன்­னாலே அழிக்க முடி­யுமா! அடி­யோட இல்­லாமே ஆக்க முடி­யாதே! அப்­பு­ற­மில்ல உனக்கு? பழ­சுன்னா அவ்­வ­ளவு கிள்­ளுக்­கீ­ரேன்னா நெனச்சே?" என்று பொக்கை வாயைத் திறந்­து­காட்­டிச் சிரித்­தாள் கிழவி.

கையைப் பிசைந்­து­கொண்டே வெளி­யே­றி­னான் யமன். அன்­று­தான் அவ­னுக்கு உண்­மை­யான தோல்வி. மார்க்­கண்­டே­யன் சமா­சா­ரம்­கூட அவ­னுக்கு அன்று வெற்றி மாதி­ரியே புலப்­பட்­டது.

யம­ரா­ஜ­னின் தோல்­வி­யைக் கண்டு தன்­னைக் காப்­பாற்­றிக் கொள்­ளப் போய்ப் பதுங்­கி­யது போலப் பேய்க் காற்­றும் ஓய்ந்து நின்­றது. மாட­சாமி எரு­மையை ஓட்­டிக் கொண்டு வந்து சேர்ந்­தான். கட்­டுத்­த­றி­யில் தீனி போட்­டுப் பருத்தி விதை வைத்­துத் தயா­ராக இருந்­த­தைக் கண்­டான். குருட்­டுக் கிழ­விக்கு வெறும் இடத்­தில் எரு­மை­யி­ருப்­ப­தா­கத் தோன்­றி­ய­தால் எல்­லாம் தானா­கத் தட­வித் தட­வித் செய்­தி­ருக்­கி­றாள் என்று அவ­னுக்­குத் தோன்­றி­யது.

உள்ளே நுழைந்­தான், வாயில் வெற்­றி­லை­யைக் குதப்­பிக் கொண்டே கிழவி யம­தே­வ­னின் விஜ­யத்­தை­யும், தோல்­வி­யை­யும் பற்­றிச் சொன்­னான். மாட­சாமி வாலி­பத்­தின் அவ­நம்­பிக்­கை­யு­டன் சிரித்­தான். 'குருட்டு மூதி என்­னவோ ஒள­ருது!' என்று முணு­மு­ணுத்­தான்.

இருந்­தா­லும், 'நல்ல கெட்­டிக் கயிறு; காஞ்ச சரு­கா­வது கட்­ட­லாம், கைக்கு வந்­தது தவ­றி­விட்­டதே!' என்று அவள் ஏங்­கி­யது அவ­னுக்கு கொஞ்­சம் நம்­பும்­ப­டி­தான் இருந்­தது.

'மணிக்­கொடி' இத­ழில்

15-9-1937ல் வெளி­வந்த சிறு­கதை. நன்றி: சென்னை நூல­கம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!