வெளிச்சம் இன்னும் சேரலையே!

வெளிச்சம் இன்னும் சேரலையே!

1 mins read

ஊருக்கு ஓரத்திலே

ஒத்தையாய் நிக்குதடி

ஒசந்து நிக்கும் ஆலமரம்

ஆலமரக் கிளைகளிலே

வானத்து விண்மீன்கள்

வந்திறங்கி வந்ததுபோல்

காட்சி தந்து கண் சிமிட்டும்

ஓராயிரம் மின்மினிப் பூச்சிகள்

ஒளி கூட்டி நின்றாலும் - என்

அத்தானைக் காணலையே

இந்த அத்தமகள் நெஞ்சினிலே

வெளிச்சம் இன்னும்சேரலையே!

- கோ. கணபதி