அறமும் பொருளும் ஆண்டுதோறும்
அரசில் நிலைக்க மாற்றம் நேரும்
வரவும் செலவும் இருந்தும் கூட
வளமை குறையா வளரும் நாடு
இரவும் பகலும் உழைப்பை நம்பி
என்றும் இருக்கும் நாடு தம்பி
திறமை கொண்டோர் திருவும் சேர்ந்தே
திகழ்வார் வாழ்வில் செழிப்பாய் இங்கே
பரவும் பிணிகள் பறந்து போக
பற்றிய சிரமம் பலவாய் ஆக
பிறந்த நாளில் மகிழும் தாயே
பெருமை சேர ஒளிர்வாய் நீயே
சிறந்து உலகில் விளங்கும் நாடு
சிகரம் தொட்டு மாலை சூடு
சிரமேற் பணிந்து; உயர மேலே
சிங்கை என்றும் இனிதாய் வாழி!
- இராம நாச்சியப்பன்

