நடைமேடை அருகில்...

நடைமேடை அருகில்...

1 mins read

ஊர்ந்து வந்து நின்று...‌‌‌‌‌

திறந்த கதவுகள் வழியாக

இறங்குபவர்களை இறக்கிவிட்டு...

ஏறுபவர்களை ஏற்றிக்கொண்டு...

அவரவர் தேவைகள் முடிந்து...

அவசரமாய் அந்நியமாய்

செல்பவர்களை..

மௌனமாகப் பார்த்துவிட்டு - தன்

கடமையை தொடர -

மனிதர்களை கடந்து செல்லும்

மின்சார ரயிலும்

ஒருவகையில்

மனித வாழ்வின் தத்துவமே!

- தென்மாப்பட்டு அ. ராஜா