- லதா
நாசி வழி நாளமெங்கும்
புரையோடுகிறது
நச்சுப் புகை
செரிக்காத வார்த்தைகளென
தடித்தலைகிறது காற்று
உயர் மாடிச் சாடியில்
ஒளிதேடி அலையும்
என் ஒற்றை மரம்
நீலம் பாய்ந்தாலென்ன
நிச்சலனமாய் வளரும் நிலா
*
உயிராற்றல்
நானாவது இந்நிலமல்ல
நானாவது என் முகமல்ல
நானாவது என் பெயரல்ல
நிலமில்லாத முகமில்லாத
பெயரில்லாத
உயிர்மொழி

