பெரும்பசியோடிருக்கும் ஓநாயென அண்ணாந்து பார்த்துக் காத்திருக்கும் நிலம்..
உதிரும் திராட்சையாய்த் தூறல் தொடங்கிப் பேய்மழையைக் கொட்டுகிறது வானம்..
இறுக்கமான முகக்கவசமாய்
நெகிழியும், குப்பைகளும் நிலமெங்கும்..
எட்டாததைப் புளிக்குமென்று எரிச்சலில் புலம்புகிறது இயலாமையால்..
கோப்பைக் கஞ்சியைக் குடிக்க முடியாத கொக்கு போல ஏமாற்றம்..
சூறாவளியில் அல்லாடும் தீயாக
திசையறியாமல் திரண்டோடிக்
கடலில் கண்ணீராகிறது
பசிதீர்க்க முடியாத பெருமழை..!
- பனசை நடராஜன்

