முதன்முதலாக கண்ணாடி பார்த்தவள்
எவ்வாறு பிரமித்தாளோ
முதன்முதலாக வானொலி பாடக் கேட்டவள்
எத்தனை பயந்தாளோ
முதல்முதலாக மின்சார ஒளி கண்டவள்
எவ்வளவு நடுங்கினாளோ
முதன்முதலாக தொலைபேசியில்
தூரத்துக்குரல்கள் கேட்டவள்
எப்படி வியந்தாளோ
முதன்முதலாக விமானம் ஏறியவள்
எந்தளவு தவித்தாளோ
அதையெல்லாமும்
முதன்முதலாக நீ சிரித்தபோதும்
அழுதபோதும் தெரிந்துகொண்டேன்
- லதா

