பரிசு

பரிசு

9 mins read

சிறுகதை

ஷோபா குமரேசன்

காலை நேர பர­ப­ரப்­பான வேலையை முடித்த நான் அயர்ச்சி மிகு­தி­யால் 'தொப்' பென நாற்­காலி­யில் அமர்ந்­தேன். அப்­போது எதி­ரி­லி­ருந்த நாள்காட்­டி­யில் தேதி­யைக் கண்­ணுற்­ற­தும், ஏதோ சத்து பானத்தை அருந்­தி­ய­தைப்போல உடனே சோர்வு நீங்கி உடல் புத்­து­ணர்ச்­சி பெற்­றது. காரணம், இன்று என் செல்ல மகள் இவ்­வு­ல­கில் பிறந்து எங்­கள் வீட்டை இரட்­டிப்பு மகிழ்ச்­சி­யில் ஆழ்த்­திய பொன்­னாள்.

மக­ளின் ஒவ்­வொரு பிறந்­த­நாளின்போதும் நானும் என் கண­வ­ரும் சேர்ந்தே அவ­ளு­டன் கடைக்­குச் சென்று அவ­ளுக்­குப் பிடித்த பரிசை வாங்­கிக் கொடுத்து மகிழ்­விப்­பது வழக்­கம். ஆனால் இந்த ஆண்டு அதற்கு விதி­வி­லக்­காக, அலு­வ­லக வேலை கார­ண­மாக வெளி­யூர் சென்றுவிட்ட என் கண­வரை நினைத்து மனம் ஒரு கணம் சஞ்­ச­லப்­பட்­டது. இருப்பினும், 'என்ன செய்­வது? அவ­ரோட சூழ்­நி­லை­யும் அப்­படி ஆயிடுச்சி' என்று என்னை நானே சமா­தானப் படுத்­திக்­கொண்­டேன்.

இன்று பள்­ளி­யி­லி­ருந்து மகள் திரும்­பி­ய­தும் நானா­வது கடைக்கு அழைத்­துச் செல்ல வேண்டும் என முடி­வெ­டுத்து, சூடான தேநீர் தயா­ரித்து பரு­கிக்கொண்டே தொலைக்­காட்­சியை உயிர்ப்­பித்­தேன்.

தொலைக்­காட்­சி­யில் செய்தி ஒளி­பரப்­பா­கிக்கொண்­டி­ருக்க, சிறிது நேரத்­தில் பார்த்­துக்கொண்­டி­ருந்த என் விழி­கள் விரிந்து மனம் பதை­ப­தைத்­தது.

என் கையி­லி­ருந்த சூடான தேநீரைப் போலவே அப்­போது கீழே ஓடிய அவ­ச­ரச் செய்­தி­யும் என் உள்­ளத்­தைச் சுட்­டது, இனி­யும் தாம­திக்­கா­மல் அழைத்­துப் பார்ப்­ப­து­தான் சரி என முடி­வெ­டுத்து திறன்­பே­சி­யில் அழைக்க, மறு­பு­றம் அமை­தி­யாய் இருந்­தது.

ஒன்­றும் செய்ய இய­லா­த­வ­ளாய் அமர்ந்த என் எண்ண அலை­கள் பின்­னோக்­கிச் சென்­றன.

*

அப்­போது நாங்­கள் 'அங் மோ கியோ' வட்­டா­ரத்­தில் மூன்று அறை வீட்­டில் வசித்­தோம்.

அன்­றொரு நாள், நாங்­கள் எதிர்­பார்த்து காத்­துக்கொண்­டி­ருந்த அந்த இனிய சம்­ப­வம் நிகழ, நான் சிறகு முளைத்த தேவ­தை­யா­கப் பறந்­தேன்.

ஆம், தற்­போ­துள்ள சூழ­லில் பல­ருக்கு எட்­டாக் கனி­யாய் இருக்­கும் சிங்­கப்­பூர் குடி­யு­ரிமை பெறும் வாய்ப்பு என் குடும்­பத்­திற்கு கிட்ட, என் மனத்­தில் புது வீட்­டில் அடி­யெ­டுத்து வைக்க வேண்­டும் என்ற ஆசை விதை துளிர்­விட ஆரம்­பித்­தது.

குடி­யு­ரிமை பெற்ற கையோடு, நான் வீடு வாங்குவதற்காக இணை­யப் பக்­கத்­தில் என் தேடு­தல் வேட்­கை­யைத் தொடங்­கி­னேன். அடுத்து வந்த சில மாதங்­களில், 'செங்­காங்' வட்­டா­ரத்­தில் 'பிடிஓ' திட்ட வீடு விற்­ப­னைக்கு வர நான் என் கண­வ­ரி­டம், "ஏங்க, ஐந்து அறை வீட்­டுக்கு விண்­ணப்­பம் போட்­டு­ட­லாம், அப்­ப­தான் வீடு நல்லா விசா­லமா இருக்­கும்," என்­றேன்.

"சரிம்மா, நீயே பார்த்து முடிவு செய்," என அலு­வ­ல­கத்­திற்­குக் கிளம்­பி­ய­வாறே என்­னி­டம் பொறுப்பை ஒப்­ப­டைத்­தார் கண­வர்.

அவர் அனு­ம­தி­யு­டன் என் மூளை ஏவு­கணை வேகத்­தில் அதற்­கான திட்­டத்­தைத் தொடங்­கி­யது.

இயற்­கையை நேசிப்­ப­வ­ளான நான், வீடு நல்ல காற்­றோட்­ட­மா­க­வும், வெளிச்­ச­மா­க­வும் இருப்­ப­தற்கு ஏது­வாக பத்­தா­வது மெத்­தை­யில் உள்ள வீட்­டைத் தேர்ந்­தெ­டுத்­தேன்.

ஆண்டுகள் இரண்டு உருண்­டோட, கட்­டப்­படும் உய­ர­மான கட்­ட­டத்­தைப் போலவே வீட்­டின் மீதுள்ள என் ஆசை­யும் உயர்ந்து வளர்ந்­தது. புது வீட்­டின் சாவி கைக்குக் கிடைத்­த­போது, ஏதோ பிறந்த குழந்­தையை கையில் ஏந்­து­வது போன்ற உணர்வு, எனக்கே எனக்­கான பளிங்கு போன்ற பளிச்­சென்ற வெள்ளை நிற தள ஓடு­கள் (டைல்ஸ்) பதிக்­கப்­பட்ட அழ­கான புது வீடு.

"என்­னங்க, வீட்­டின் உட்­புற வடி­வ­மைப்பை சிறப்பா செய்­ய­ணும்," என்­றேன் நான். ஆனால் அப்­போது அலு­வ­லக நிமித்­த­மாக வெளி­நாடு செல்ல ஆயத்­த­மான என்­ன­வர், "நம்ம மக­ளோட அபிப்­பி­ரா­யத்­தை­யும் கேட்டு நீங்க இரண்டு பேரும் சேர்ந்து செய்­யுங்க," என யோசனை கொடுத்­தார்.

'அட! நமக்கு இது தோணவே இல்­லையே', அவளை இன்­னும் சிறு குழந்­தை­யா­கவே பாவித்­துக் கொண்­டி­ருந்த என் எண்­ணத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைத்து அவ­ளு­டன் சேர்ந்து வீட்டை அலங்­க­ரிக்­கத் திட்­ட­மிட ஆரம்­பித்­தேன்.

என் மகள் என்­னி­டம் வீட்டை வடி­வ­மைக்க நிறைய புதுப்­புது உத்தி­களை அள்­ளித் தெளித்து என்னை வியப்­பில் ஆழ்த்­தி­னாள்.

மேல்­நாட்­டுப் பாணி குசி­னி­யில் ஆரம்­பித்து அல­மா­ரி­கள், வண்­ணம் பூசு­தல், மீன்­தொட்­டிக்­கென பிரத்­தி­யேக இடம் என அனைத்­தை­யும் ஒரு குழந்­தையை அழ­கு­ப­டுத்­து­வ­து போல், கலைநயத்­தோடு நாங்­கள் போட்ட வீட்­டின் திட்­டப்­பணி ஒரு கட்­ட­மைப்­பா­ள­ரின் உத­வி­யோடு மிகச் செம்­மை­யாக நிறைவு பெற்­றது.

ஒரு வழி­யாக எல்லா வேலை­களும் முடிந்து, வீடு புது­ம­னை புகு­விழா கண்­டது.

ஏதோ பெரி­தாக ஒன்றை சாதித்­தது போல் மன­தில் அவ்­வ­ளவு உவகை!

திரைச்­சீ­லையை விலக்கி சாள­ரத்தை நன்­றாக திறந்து வீட்­டி­னுள் வந்த இத­மான காற்­றைச் சுவா­சிக்க, அது என் மதியை மயக்­கி­யது.

நாள­டை­வில் எங்­கள் குடி­யி­ருப்­பில் ஒவ்­வொ­ரு­வ­ராக குடி­யே­றத் தொடங்கி அனை­வ­ரும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் நட்­பு­ணர்­வோடு பழ­கத் தொடங்­கி­னர்.

நாள்கள் நகர, ஒருநாள் காலை மிதி­வண்­டி­யில் பேரங்­கா­டிக்­குச் சென்றுவிட்டு திரும்­பிக் கொண்­டி­ருந்­தேன்.

இரவு பெய்த கனமழை­யி­னால் பூமி குளிர்ந்­தி­ருக்க, நான் சீக்­கி­ர­மாக வீட்டை அடைய எண்ணி குறுக்கு வழி­யாக மிதி­வண்­டியை ஓட்ட ஆரம்­பித்­தேன். ஆனால் அந்த வழி­யெங்­கும் குண்­டும் குழி­யு­மாக ஒரே சக­தி­யு­டன் இருக்க, சற்று தூரம் கடந்­த­தும்­தான் நான் செய்­தது தவறு எனப் புரிந்­தது.

அப்­போது 'சதக்' என்ற சத்­தத்­தோடு மிதி­வண்டி சக­திக்­குள் மாட்­டிக்கொண்டது.

அதற்கு மேல் ஓட்ட திரா­ணி­யற்று மிதி­வண்­டியை வியர்க்க விறு­வி­றுக்க தள்­ளிக்கொண்டே மெது­வாக குடி­யி­ருப்பை நெருங்­கி­னேன்.

குடி­யி­ருப்­பின் கீழ்த்­த­ளத்தை அப்­போது பணி­யா­ளர் செல்­வம் சுத்­தம் செய்­துகொண்­டி­ருந்­தார். அவர் அருகே சென்ற நான் தயங்­கி­ய­வாறே, "செல்­வம், கொஞ்­சம் தண்ணி வேணும்.... வண்­டி­யில ஒரே சகதி..." என நான் சொல்­லிக் கொண்­டி­ருக்­கும்போதே அவ­ருக்கு என் நிலைமை புரிந்­து­விட்­டது.

"அத­னால என்­னக்கா? நானே கழு­வித் தர்­றேன்," என்­ற­படி வண்­டி­யைக் கழுவ, அது செல்­வத்­தின் தூய்­மை­யான மனது போலவே சுத்­த­மாக மாறி­யது.

"நன்றி செல்­வம்" என்­ற­படி வீட்டை அடைந்த நான் கண­வ­ரி­டம் நடந்­த­தைக் கூறி­னேன். இது போன்று செல்­வம் அவ்­வப்­போது எங்­கள் வட்­டார மக்­க­ளுக்கு செய்­யும் சிறு சிறு உத­வி­களும், அவ­ரின் கண்­ணி­ய­மான நடத்­தை­யும் என் கண­வர் உட்­பட அனை­வ­ரை­யும் நாள­டை­வில் கவர்ந்­தி­ழுத்­தது.

*

அப்­போது திடீ­ரெ­னக் கேட்ட இடிச் சத்­தம் என்னை உலுக்கி சுய­நி­னை­விற்கு இழுக்க மீண்­டும் தொலைக்­காட்­சி­யில் கண்­க­ளைப் பதித்­தேன்.

கலங்­கிய கண்­களில் அவ­ச­ரச் செய்­தி­யில் நகர்ந்த எழுத்­து­கள் மங்­க­லா­கத் தெரிந்­தது.

'என்ன ஆச்­சுன்னு தெரி­ய­லையே? திரும்­ப­வும் ஒருமுறை அழைத்­துப் பார்க்­க­லாம்' என நான் முயற்சி செய்ய இப்­போ­தும் மறு­முனை அமை­தி­யா­கவே இருந்­தது.

தலை­வலி பார­மாய் அழுத்த, மீண்­டும் பழைய நினை­வு­க­ளோடு சேர்த்து தலையை பின்­சாய்த்­தேன்.

*

ஒருநாள் பள்­ளி­யி­லி­ருந்து திரும்பி வந்த என் மகள் ஏதோ யோசித்­த­படி அமர்ந்­தி­ருந்தாள்.

"என்­னம்மா, அடுத்த வாரம் பிறந்­த­நாள் வருதே, என்ன பரிசு வேணும் என் செல்­லத்­துக்கு?" என்று அவ­ளி­டம் வின­வி­னேன்.

"அம்மா, நம்ப குடி­யி­ருப்­புக்­குக் கீழே தோட்­டம் வைக்­க­லாமா?" என்று என் மகள் ஆவ­லு­டன் கேட்க, இப்­ப­டி­யொரு பிறந்­த­நாள் பரிசை மகள் கேட்­டது என்னை வியப்­பில் ஆழ்த்­தி­யது.

"என்­னது? கீழே தோட்­டமா? விசா­ரிப்­போம், ஆமா என்ன திடீர்னு?" ஒன்­றும் புரி­யா­மல் கேள்­வி­களை அடுக்­கி­னேன்.

"இன்­னக்கி பள்­ளி­யில உலக வெப்­ப­ம­ய­மா­தல் குறித்து விழிப்­புணர்வுப் பயி­ல­ரங்கு நடந்­து­னாங்­கம்மா," எனக் கூறி மகள் நிறுத்த, அவ­ளின் நோக்­கத்தை ஓர­ளவு புரிந்துகொண்ட நான் பூரிப்­ப­டைந்­தேன். ஒரு தாயாக எனக்­கும் இது மக­ளுக்குக் கொடுக்க வேண்­டிய ஒரு சிறந்த பரி­சா­கத் தோன்­றவே என் கண­வரை நோக்­கி­னேன்.

"நல்­லது செய்­றதை தள்­ளிப் போட வேண்­டாம். உடனே விசா­ரிம்மா," என அன்­புக் கட்­ட­ளை­யிட்­டார் கண­வர்.

இதன் முதற்­ப­டி­யாக எங்­கள் வட்­டா­ரத்­தி­லுள்ள குடி­யி­ருப்­பாளர் குழுவை தொடர்புகொண்டு தோட்­டம் வைப்­ப­தற்­கான தக­வல்­க­ளைத் திரட்­டி­னேன்.

அவர்­கள் என்னை முத­லில் அங்கு உறுப்­பி­ன­ரா­கச் சேரச் சொல்லி ஊக்­கம் கொடுத்­த­தோடு, மற்­றும் சில குடி­யி­ருப்­பா­ளர்­களும் இணைய முன்­வந்­தால் என் கோரிக்­கையை நகர மன்­றத்­திற்கு பரிந்துரை செய்­வ­தா­கக் கூறி­னர்.

நான் இந்த செய்­தியை உட­ன­டி­யாக அண்டை அய­லா­ரி­டம் பகிர, எதிர்­பார்த்­த­து போலவே சிலர் தோட்­டக் கலை­யில் விருப்­பம் தெரி­வித்­தார்­கள்.

இதற்­கி­டை­யில் ஒருநாள் கீழே இறங்­கிய என் கண்­ணில் மிக நேர்த்­தி­யாக வெட்­டப்­பட்ட புற்­கள் தென்­பட, உடனே எனக்கு செல்­வத்­தின் ஞாப­கம் வந்­தது. கண்­களை நாலா­பு­ற­மும் சுழற்றி அவ­ரைத் தேட,

"அக்கா, எப்­படி இருக்­கீங்க?"

என் பின்­னால் குரல் கேட்டு திரும்ப, செல்­வம் நின்று கொண்­டி­ருந்­தார்.

"இப்­ப­தான் உங்­க­ளைப் பத்தி நினைச்­சேன் செல்­வம்" என்று புன்­சி­ரிப்பை உதிர்த்த நான், மக­ளின் விருப்­பம் பற்­றி­யும், தோட்­டம் வைப்­ப­தற்கு நடந்­துகொண்­டி­ருக்­கும் ஏற்­பா­டு­க­ளைப் பற்­றி­யும் அவ­ரி­டம் விளக்­கிக் கூறி­னேன்.

"நாங்க பத்துப் பேர் சேர்ந்து தொடங்க இருக்­கி­றோம், ஏதா­வது உத­வின்னா உங்­கள்ட்ட..." என நான் தயக்­கத்­து­டன் இழுக்க,

"கண்­டிப்பா செய்­யி­றேன்கா," என்­றார் செல்­வம்.

நாட்­கள் நகர, எங்­கள் கோரிக்கை நிறை­வேற்­றப்­பட்டு, மண்­ணின் தரம் சோதிக்­கப்­பட்­டது.

பிறகு அதற்­கேற்ப தோட்­டம் அமைக்க இடம் ஒதுக்கி தரப்­பட்­ட­தும் எங்­கள் உள்­ளத்­தில் மகிழ்ச்சி ஊற்­றெ­டுக்க, நானும் என் மகளும் ஆலோ­சித்து தின­மும் சமைக்­கத் தேவைப்­படும் தக்­காளி, கறி­வேப்­பிலை முதற்­கொண்டு சில காய்­கறி­க­ளை­யும் பயி­ரி­டத் திட்­ட­மிட்­டோம்.

சிறிது நாட்­களில் பச்­சைப் பசேல் என வள­ரத் தொடங்­கிய எங்­கள் தோட்­டத்தை சுற்­று­லாப் பய­ணி­கள் போல் பட்­டாம் பூச்­சி­கள் சுற்றிவர, தோட்­டமே வண்­ண­ம­ய­மா­னது. மேலும் அதில் விளைந்த காய்­க­றி­களை முதன்முறை­யாக பறித்துச் சாப்­பிட, அந்த உணர்வு வார்த்­தை­க­ளால் வர்­ணிக்க இய­லாத தனி மன­நி­றை­வை எங்­க­ளுக்குக் கொடுத்­தது.

பகல் பொழு­தில் செல்­வம் அவர் பணி­க­ளுக்­கி­டையே அங்­கி­ருந்த குப்­பை­களை அகற்றி பரா­ம­ரித்து எங்­க­ளுக்கு உத­வி­னார்.

காலப்­போக்­கில் அந்தத் தோட்­டம் என் மக­ளின் பய­னுள்ள பொழுது­போக்கு இட­மாக மாறியது.

அவ­ளின் ஆர்­வத்­தைப் பார்த்த செல்­வம் செடி­களை வளர்ப்­ப­தற்­கான நுட்­பங்­க­ளை­யும் அவ­ளுக்கு கற்­றுக்கொடுக்க ஆரம்­பித்­தார்.

அதோடு மட்­டு­மல்­லா­மல் அவ­ளின் ஒவ்­வொரு பிறந்­த­நா­ளின் போதும் தொட்­டிச் செடி­க­ளைப் பரி­ச­ளித்து ஊக்­கப்­ப­டுத்­த­வும் தொடங்­கி­னார்.

மாதங்­கள் சில கழிய, ஒருநாள் செல்­வம் என்­னி­டம்,

"அக்கா, நான் ஊருக்கு போய்ட்டு ஒரு மாதத்­தில திரும்பி வந்­து­டு­வேன்," என்­றார்.

"என்ன செல்­வம் திடீர்னு? ஏதா­வது நல்ல செய்­தியா?" என நான் சிரித்­த­படி வினவ, "ஆமாக்கா, எனக்கு திரு­ம­ணம் பேசி முடிச்­சிட்­டாங்க," என்­றார்.

அதைக் கேட்­ட­தும் ஏதோ என் சொந்த தம்­பிக்கே திரு­ம­ணம் போல் உள்­ளம் குதூ­க­லிக்க எங்­கள் தோட்­டக் குழு­வி­லி­ருந்த உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரி­ட­மும் பேசி நிதி திரட்டி புது மண­மக்­க­ளுக்கு உடுப்­பு­க­ளோடு பண உத­வி­யும் செய்து வழி­ய­னுப்­பி­னோம்.

ஆனால் ஒரு மாதம் கழித்து திரும்பி வந்த செல்­வத்­தின் முகத்­தில் கொஞ்­சம்கூட உற்­சா­கம் இல்­லா­மல் ஏதோ வாடிய செடி­யைப் போல் தோற்­ற­ம­ளிக்க,

"என்­னாச்சு செல்­வம்?" என்று வின­வி­னேன்.

"என்­னன்னு சொல்­ற­துக்கா? தங்­கை­களை கரை­யேத்த வாங்­குன கட­னோடு இப்ப என் கல்­யா­ணச் செல­வும் சேர்ந்து கண்­ணைக் கட்­டு­துக்கா," என்று வருத்­தத்­தோடு கூறி­னார். 'ம்ம்....எப்­ப­டி­யா­வது செல்­வத்­துக்கு உத­வ­ணுமே' என யோசித்த நான் அன்­றி­ரவே என் கண­வ­ரி­டம் இதைப் பற்றி ஆலோ­சித்­தேன்.

நான் சொல்­வதை பொறு­மை­யுடன் செவி­ம­டுத்த என் கண­வர் என்­னி­டம், "ஆமாம்மா, பாவம் செல்­வம். ரொம்ப பெரிய குடும்­பம் போல­ருக்கு," எனக் கூறி பெரு­மூச்சு விட்­டார்.

"ஏங்க நம்­மால செல்­வத்­துக்கு வேற வேலைக்கு ஏற்­பாடு செய்ய முடி­யுமா?" என்­றேன்.

"நானே அதைப் பத்­தி­தாம்மா யோசிச்­சிக்­கிட்டு இருக்­கேன்.. எப்­ப­டி­யா­வது செல்­வம் ஸ்கில் டெஸ்ட் எடுத்­திட்டா கட்­டு­மா­னத் துறை­யில வேலைக்குச் சேர்த்து விட்­டு­ட­லாம், நானே செல்­வத்­தி­டம் இதப்­பத்தி பேசு­றேன்," என கண­வர் கூற எனக்­குள் நிம்­மதி பிறந்­தது.

அதன் பிறகு வளர்ச்சி கண்ட எங்களின் தோட்டத்தைப் போல, செல்வமும் படித்து படிப்படியாக வளர்ந்து வேறு வேலைக்கு மாறினாலும், இன்று வரை என் மகளின் பிறந்தநாளுக்கு தவறாமல் தொட்டிச் செடி பரிசோடு வந்து விடுவார்.

அப்போது வெளியிலிருந்து அடித்த குளிர்க்காற்றில் உடல் சிலிர்க்க, மீண்டும் சுய நினைவு அடைந்தேன்.

என் மகளின் பிறந்தநாளான இன்று செல்வத்தின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம்.

இதோ தொலைக்காட்சியில் வேலையிட விபத்து பற்றிய அவசரச் செய்தி என்னை இடியாய்த் தாக்கியது. அதுவும் அது செல்வம் வேலை செய்யிற கம்பெனியேதான் என உறுதியாய்த் தெரிந்தது. திறன்பேசியில் அழைத்தும் எந்த பயனுமில்லை.

யாருக்கும் எந்தப் பாதிப்பும் நேர்ந்திருக்கக்கூடாது என உள்ளுக்குள் கடவுளை வேண்டியவாறே நிலைகொள்ளாமல் குழம்பித் தவித்தேன்.

அப்போது அழைப்பு மணி ஒலிக்க, கதவைத் திறந்தேன். பள்ளியிலிருந்து புன்சிரிப்புடன் திரும்பி வந்த என் மகள் கையில் தொட்டிச் செடி இருந்தது.