பிறவாத மொழிகள்

பிறவாத மொழிகள்

5 mins read

சிறுகதை

செல்வராணி

'டோக்­கன் எண் 325' என்று தாதி அழைத்­தார். அது­வரை தன் முறைக்­கா­கக் காத்­தி­ருந்த அகி­லா­வும் அவ­ரது கண­வர் சர­வ­ண­னும் ஆர்­வத்­து­டன் மருத்­து­வ­ரின் அறைக்­குள் நுழைந்­தார்­கள்.

ஒன்­பது ஆண்­டு­க­ளாக மருத்­து­வர் கூறப்போகின்ற அந்த இனிய செய்­திக்­கா­கத் தவ­மாய்த் தவம் கிடக்­கின்­ற­னர் இரு­வ­ரும்.

திரு­ம­ண­மாகி ஒன்­பது ஆண்­டு­கள் ஆகி­யும் இன்­னும் அந்­தப் பாக்­கி­யம் இவர்­க­ளுக்கு ஏனோ கிடைக்­க­வில்லை.

இரு­வ­ரும் கைநிறைய சம்­பா­திக்­கின்­றார்­கள்; நல்ல வேலை. ஆனால் கொஞ்சி விளை­யாட ஒரு மழ­லைச் செல்­வம் இல்­லையே என்று ஒவ்­வொரு நாளும் ஏங்­கித் தவிக்­கின்­ற­னர் அகி­லா­வும் சர­வ­ண­னும்.

எல்­லா­ருக்­கும் எல்­லாம் நினைப்­பது­போல் கிடைத்­து­வி­டு­வது இல்­லையே. அந்த வரி­சை­யில் சர­வ­ணன் தம்­ப­தி­யி­ன­ரும் மழ­லைச் செல்­வத்­திற்­காக ஏங்கி மருத்­து­வ­ரைக் காணக் காத்­துக்­கி­டக்­கும் வேளை­யில்­தான் தாதி அவர்­களை அழைத்­தார்.

"இப்ப நான் உங்­க­ளுக்கு ஒரு நல்ல செய்­தி­ய சொல்­லப் போறேன். சர­வ­ணன்! வாழ்த்­து­கள்! நீங்க அப்பா ஆகப் போறீங்க' என்­றார் மருத்­து­வர்.

மகிழ்ச்­சி­யில் அகி­லா­வைப் பார்க்க அவள் முகம் பௌர்­ண­மி­போல் பிர­கா­சித்­துக் கொண்­டி­ருந்­த­தைப் பார்க்க சர­வ­ண­னுக்கு எல்­லை­யில்லா ஆனந்­தம்.

மருத்­து­வர் அவர்­க­ளுக்­கான ஆலோ­ச­னை­களை வழங்­கி­னார். இரு­வ­ரும் வீடு திரும்­பி­னார்­கள்.

பல ஆண்­டு­க­ளா­கக் காத்­துக்­கி­டந்த வரம் இன்­று­தான் கிடைத்­துள்­ளது. உல­கத்­தில் தாங்­கள்­தான் இந்த நேரத்­தில் கொடுத்து வைத்­த­வர்­கள் போன்று ஆனந்தக் கட­லில் இரு­வ­ரும் மூழ்­கித் திளைத்­தார்­கள். அகி­லா­வைக் கண்­ணின் மணி­போல பத்­தி­ர­மா­கக் கவ­னித்து வந்­தான் சர­வ­ணன்.

நாளொரு மேனி­யும் பொழு­தொரு வண்­ண­மு­மாக அவள் வயிற்­றி­னுள் கரு வளர்ந்து வந்­து­கொண்­டி­ருந்­தது.

மாதங்­கள் உருண்­டோ­டின. பிர­ச­வத்­திற்­கான நாளும் நெருங்­கி­யது. மருத்­து­வ­ரி­டம் பரி­சோ­த­னைக்­காக இரு­வ­ரும் இன்று வந்­தி­ருக்­கின்­ற­னர்.

"வாம்மா அகிலா! இப்­படி வந்து உட்­கார்," என்று அகி­லாவை அறை­யி­னுள் அழைத்­துச் சென்­றார் மருத்­து­வர்.

பரி­சோ­த­னை­களை எல்­லாம் முடித்­து­விட்­டார். பின்­னர் சர­வணனை அழைத்து, "இதாப்­பாருங்க சர­வ­ணன், தாயும் சேயும் நல்லா இருக்­கி­றாங்க. ஆனா அகி­லா­வுக்கு வயசு முப்­பைத்­தைந்த தாண்­டி­ன­தால சுகப் பிர­ச­வம் என்­பது கொஞ்­சம் கஷ்­டந்­தான். அத­னால ஆப்­ரே­ஷன்­தான் செய்ய வேண்­டி­வ­ரும். ஒங்­க­ளுக்கு வச­தி­யான நாளை நீங்­களே குறிச்­சிக்­க­லாம்," என்று சொன்­னார் மருத்­து­வர்.

"நாங்க வீட்­டில போய் நல்ல நாளா எங்க சோசி­ய­ருக்­கிட்­டக் கேட்­டுச் சொல்­றோம்," என்று தம்­ப­தி­யர் சொல்ல, "சரி உங்க வச­திக்கு ஏற்ற நாளைக் குறிச்­சிட்டு சொல்­லுங்க, நாங்க ஏற்­பாடு செய்­றோம்," என்­றார் மருத்­து­வர். நன்றி கூறிக்கொண்டு விடை­பெற்­றார்­கள் அகி­லா­வும் சர­வ­ண­னும்.

"என்ன! சோசி­ய­ரி­டம் போய் நல்ல நாள் பார்க்­கப் போறீங்­களா? நான் இந்த உல­கத்தை முதல் முத­லா­கப் பார்க்­கப் போகும் நாள் நல்ல நாளாக இருக்க வேண்­டும் என்­ப­தில் என் பெற்­றோர்­க­ளுக்­குத்­தான் எவ்­வ­ளவு அக்­கறை? இது அக்­க­றையா? இல்லை மூட நம்­பிக்­கையா? நான் வெளி­வ­ரும் முன்பே என்­னைக் குழப்பி விடு­கி­றார்­களே என் பெற்­றோர்­கள்," என்று வயிற்­றி­னுள் குழந்­தைப் புலம்­பி­யது.

"அகிலா! வர்ற பதன்­கி­ழமை நாள் நல்லா இருக்­குன்னு சோசி­யர் சொன்­னார்.

அன்னைக்கே ஆப்­ரே­ஷனை வெச்­சுக்­க­லாம்," என்­றான் சர­வ­ணன்.

"நாளை­யி­லி­ருந்து நீ ஆபீ­சு­க்கு லீவ போட்­டிடு. மூணு­மா­சம்­தானே மருத்­துவ லீவு தரு­வாங்க இல்­லையா? எனக்­கும் இரண்டு வாரங்­கள் கிடைக்­கும்; பர­வா­யில்லை. பணிப்­பெண் இருக்­கி­றா­தானே? அதுக்­கப்­பு­றம் அவ பாத்­துக்­கு­வா. நீ தொடர்ந்து வேலைக்­குப் போலாம்," என்­றான் சர­வ­ணன்.

"ஆமாங்க, மூணு மாசம்­தான் லீவு எடுப்­பதா நானும் நினைச்­சன். அதத்­தாங்க நீங்­களும் சொல்­றீங்க. பணிப்­பெண் குழந்­தையை நல்­லபடி­யாப் பாத்­துக்குவாளா? எனக்­கென்­னவோ கொஞ்­சம் தயக்­கமா இருக்­குங்க, என்ன செய்­றது?" என்று தன் ஆதங்­கத்தை வெளிப்­படுத்­தி­னாள் அகிலா.

"அப்­ப­டிப்­பார்த்தா சிங்­கப்­பூ­ரில ஆம்­ப­ளங்க மட்­டுத்­தான் வேலைக்­குப் போவாங்க. பொம்­ப­ளங்க வீட்­டில குழந்தை­யைப் பார்த்­துக்­கிட்­டு­தான் இருப்­பாங்க, ஆனா இங்க அப்­ப­டியா நடை­மு­றை­யில இருக்கு? பெரும்­பா­லான பெண்­கள் வேலைக்­குச் செல்­றாங்க. அவங்க குழந்­தை­களை யார்­தான் பார்த்­துக்­கி­றாங்­கன்னு நீ நெனெக்­கிற? ஏதோ ஒரு சில­ரைத்­தான் பெத்­த­வங்­க கூட இருந்து பார்த்­துக்­கி­றாங்க. மற்ற எல்லா குழந்­தை­க­ளை­யும் பணிப்­பெண்­கள்தான் பார்த்­துக்­கி­றாங்க. அத­னால நீ கவ­லைப்­பட வேணாம். நம்ம பணிப்­பெண் குழந்­தையை நல்­ல­ப­டியா கவ­னிச்­சிக்­குவா," என்று அகி­லா­வைச் சமா­தானப்­படுத்­தி­னான் சர­வ­ணன்.

"என்ன? இன்­னும் மூன்றே மூன்று மாசம்­தான் நான் என் அம்­மா­வு­டன் இருக்­கப் போகி­றேனா? அதுக்­கப்­பு­றம் என்­னைப் பணிப்­பெண் கவ­னித்­துக் கொள்­வாங்­களா? அதுக்­கப்­பு­றம் எனக்கு எல்­லாமே என் பணிப்­பெண்­தானா?

நான் அழுதா ஏன் அழ­றேண்ணு அவங்­க­ளுக்கு எப்­ப­டித் தெரி­யும்? இதெல்­லாம் தாய்க்­குத்­தானே தெரி­யும்.

தாய்ப்­பா­லு­டன் தன் உணர்­வு­க­ளை­யும் சேர்த்து அம்­மா­வால மட்­டும்­தான் ஊட்ட முடி­யும். இது ஏன் என் அம்­மா­வுக்­கும் அப்­பா­வுக்­கும் புரி­யல்ல?

இதுக்­கப்­பு­றம் தென­மும் அம்­மா­வும் அப்­பா­வும் ஆபீ­சில இருந்து தாம­த­மாக வீட்­டுக்கு வரு­வாங்க. வந்­த­தும் களைப்பா இருக்­குன்னு ஓய்­வெ­டுத்­துக்குவாங்க. எங்­கூட எவ்­வ­ளவு நேரம்­தான் செல­வ­ழிக்­கப் போறாங்க? நான் வளர்­வது எல்­லாம் பணிப்­பெண்­ணின் கவ­னிப்­பில் என்­றால் பெற்­றோர்­க­ளின் கட­மை­தான் என்ன? குழந்தை கிடைக்­க­லைன்னா மட்­டும் பொலம்ப தெரிஞ்ச இவங்­க­ளுக்­குக் அதை எப்­ப­டிப் பார்த்­துக்­கி­ற­துண்­ணுத் தெரி­யல்ல.

தாயின் அர­வ­ணைப்­பில் இருப்­ப­து­தான் எனக்­குப் பாது­காப்­பாக இருக்­கும். நான் ஆரோக்­கி­யமா வள­ர­ணுன்னா என் பெற்­றோர்­ எங்­கூட இருக்­ணுந்­தானே? என் பெற்­றோர்­க­ளின் உல­கமே நான்­தான்; யாரா­வது கொஞ்­சம் என் பெற்­றோ­ருக்­கிட்ட இத எடுத்­துச் சொல்­லுங்­க­ளேன் பிளீஸ்...

இதோடு நின்­று­விடு­வாங்­களா இவங்க? எனக்­குப் பதி­னெட்டு மாதம் ஆன­வு­டன் என்­னைக் குழந்­தை­கள் பரா­ம­ரிப்பு நிலை­யத்­தி­ல­தானே இவங்­க சேர்க்­கப் போறாங்க? அங்க நான் அதிகாலை­யில ஏழு மணி முதல் சாயந்­தி­ரம் ஏழு மணி வரைக்­கும் இருக்­க­ணும். காலை­யில நான் தூங்­கிக்­கிட்டு இருக்­கி­றப்­பவே என்னை அனுப்பி­வி­டு­வாங்க.

காலை­யில் நான் கண்­மு­ழிச்­ச­தும் அம்மா என்­னைக் கட்­டி­ய­ணைச்சு முத்­த­மிட்டா எப்­படி இருக்­கும்? என்­னைக் குளிப்­பாட்டி தாலாட்­டுப் பாடி தூங்க வைக்­கும் அந்த இனி­மை­யான சுகம் எனக்­குக் கிடைக்­காதா?

என்­னைக் குளிப்­பாட்­டு­றது என் பாலர் பள்ளி ஆயா. எனக்­குப் பசித்­தால் உண­வூட்­டு­வது ஆயா. ஏன் என்­னைத் தூங்க வைப்­ப­தும் ஆயா­தான்.

இப்­ப­டிப் பகல் முழு­வ­தும் பாலர் பள்­ளி­யில் கழித்­து­விட்டு இர­வில் வீட்­டிற்கு வந்­தால் வீட்­டில் என்­னைக் கவ­னிப்­பது பணிப்­பெண்.

ஆக மொத்­தத்­தில் நான் என் அம்­மா­வு­டன் மகிழ்ச்­சி­யா­கக் கழிக்­கும் நாட்­கள் இந்­தப் பத்தே பத்து மாதங்­கள்­தான்.

இந்த உல­கத்தை நான் பார்க்­கும் நாள் முதல் என்­னைக் கவ­னித்­துக் கொள்­ற­வங்க பணிப்­பெண்­ணும் ஆயா­வும்தானே அப்­ப­டிப்­பட்ட உல­கில நான் பிறக்க விரும்­பல.

நான் என் அம்மா அப்­பா­வு­டன் இனி­மை­யா­கக் களிக்க வேண்­டிய மழ­லைப்­ப­ரு­வத்தை ஆயா­வு­ட­னும் பணிப்­பெண்­ணு­ட­னும்­தான் களிக்­க­வேண்­டு­மென்­றால் அப்­ப­டிப்­பட்ட உல­கில் நான் ஏன் பிறக்க வேண்­டும்? என்­பது போன்ற பல்­வேறு கேள்­வி­களில் குழந்தை மூழ்­கத்­தொ­டங்­கி­யது. நாள்­கள் புயல் வேகத்­தில் கடந்­தன; புதன்­கி­ழ­மை­யும் வந்­தது. மழ­லை­யின் புலம்­ப­லைப் புரி­யாத பெற்­றோர் மகிழ்ச்­சி­யு­டன் மருத்­து­வ­மனைக்­குப் புறப்­பட்­ட­னர். "இதோ நான் வெளி­யு­ல­கைக் காணப்­போ­கி­றேன். ஆனால், மற்­ற­வர்­க­ளின் பரா­ம­ரிப்­பில்­தான் நான் வாழவேண்­டு­மென்­றால் அப்­ப­டிப்­பட்ட வாழ்க்கை எனக்கு எதற்கு?" என அப்­பிஞ்சு உள்­ளம் வாட, அதன் இத­யத்­து­டிப்பு மெல்ல மெல்ல வழக்­கத்­திற்கு மாறா­கத் துடிக்க ஆரம்­பித்­தது.