பயணம்!

பயணம்!

1 mins read

- பனசை நடராஜன்

உலகப் பெருவெளியை

ஓரளவேனும்

உணர வைக்கிறது

அறிந்து கொள்ளுதலையும் பின்

ஆர்ப்பரிக்காதிருப்பதையும்

ஒருங்கே கற்றுத் தருகிறது

பழக்கங்களை

நம்பிக்கைகளை

பரிசீலிக்க வைக்கிறது

சுத்தமாதலும்

குப்பையாதலும்

அவரவர்க்குத் தக்கபடி

குட்டையாகத் தேங்காமல்

குதித்தோடும் நதியாக்கி

வாழும் நாள்களை

வண்ணமயமாக்குகிறது

தேடலைத் தேடும்

எல்லா உயிர்க்கும்

முதல் தேர்வாக

இருக்கிறது

பயணம்....!