முன்கூட்டியே பதிவு செய்தால்
விமான பயணச்சீட்டு
கட்டணம் குறையும் என்பதால்
முன்பதிவு செய்து - மகளே
கடைத்தொகுதி சென்று - உனக்கு
விருப்பப்பட்டதை நான்
விரும்பி வாங்கிவிட்டேன்
கோடாலித் தைலம் - பச்சைத் தைலம் - அந்த புலித் தைலம்
புறா தைலம் வாங்கி விட்டேன்
என்று அப்பத்தாவிடம் சொல்
"தீபாவளிக்கு வாங்க" என்று
தினமும் கேட்ட அம்மாவிடம்
சொல்!
தவறாமல் வருகிறேன்!
தம்பிக்கு விளையாட்டுச்
சாமான்கள் வாங்கி வருகிறேன்
என்று!
பல வருடம் ஆச்சு
உன்னோடு சேர்ந்து
தீபாவளி கொண்டாடி!
மகளே காத்திரு..
மகிழ்ச்சியாய் எதிர்பார்த்து இரு!
- தென்மாப்பட்டு அ.ராஜா

