எல்லாக் காலையிலும் சூரியன் உதிப்பதில்லை

எல்லாக் காலையிலும் சூரியன் உதிப்பதில்லை

1 mins read

கைப்பேசி அழைப்போடு தொடங்கும் காலைகள்

எப்படியோ இரவுக்குள் கொண்டு விட்டுவிடுகின்றன.

பரபரப்பான பல காலைகள் விடியும்போதே மாலைக்குள்

ஓடிவிடுகின்றன.

முதல்நாளின் வேதனையைச் சுமந்து நிற்பவை

அடுத்த பொழுதுக்குள் போவதேயில்லை

அவமானத்தின் காலைக் கதவை அடைத்து வைப்பதைப்போல

வெறுப்பின், சந்தேகத்தின் காலைகளையும் எவரும்

திறப்பதேயில்லை

எதுவாக இருந்தாலும்

மறக்கப்பட்டவர்களின் காலையைப்போல

எல்லாருக்கும் பூமி நிலைகுத்தி

நின்றுவிடுவதில்லை.

- லதா