ஓர் ஊரிலே ஒரு ராஜ­கு­மாரி

சிறுகதை மலையரசி சீனிவாசன்

கையிலிருக்கும் பணத்தை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்க்கும்போது "இத்தனை நாளா இந்தப் புத்தி எங்கே போச்சு?" என்று நீண்ட பெருமூச்சை விட்டுக் கொண்டான் ராமன்.

"ஒரு சிகரெட் விலை.." கணக்குப் போடும்போதே சிகரெட் புகையின் வளையங்கள் அவன் கழுத்தை நெருக்குவதைப்போல இருந்தது.

திருமணத்திற்கு முன்னும் சரி திருமணத்திற்குப் பின்னும் சரி ராமன் நிரந்தரமாக ஓர் இடத்தில் வேலை பார்த்ததில்லை.

"நமக்கு இருக்கும் மூணு பிள்ளைங்களை நினைச்சாவது நிலையான ஒரு வேலையைப் பார்க்கக் கூடாதா?" என்ற தனலட்சுமியின் தொடர் நச்சரிப்பில் ராமன் இப்பொழுதுதான் ஒரே இடத்தில் ஏழு மாதமாக வேலை பார்க்கிறான்.

"பன்னிரண்டு மணி நேரமும் வேலை பார்க்க வேண்டியதில்லை." "அதென்னடா வேலை?" நண்பனின் சகோதரனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவன் பார்த்து வந்த வேலைக்கு அழைத்துச் சென்றான். "ஒன்னும் கஷ்டமில்லாத வேலை. வண்டிக்குப் பின்னால ஏறிக்க வேண்டியதுதான் குப்பைத் தொட்டியிலிருக்கும் குப்பையெல்லாம் வண்டிக்குள்ளே கொட்டியதும், பிறகு ஒரு குச்சியை வைச்சு வண்டி ஓரத்திலே ஏதாவது குப்பை இருந்தா வண்டிக்குள்ளே தள்ளிவிடவேண்டியதுதான். ரொம்ப சின்னாங்கு(சுலபம்)" அந்தக் குப்பைத் தொட்டியில் தன்னை யாரோ தள்ளிவிடுவதைப்போல "அய்யோ... ஆள விடுடா" என்று ஓட எத்தனித்தவனைப் பிடித்து நிறுத்தியவன் "கொஞ்ச நாளைக்குத்தான்.." என்று எதை எதையோ கூறிச் சம்மதிக்க வைத்தான்.

"பரவாயில்லங்க எந்த வேலையா இருந்தாலும் சந்தோசத்துடன் செய்யுங்க," என்றாள் தனலட்சுமி.

"என்னமோ பார்க்கிறேன்," என்று சலிப்புடன் கிளம்பினான். ராமனுக்கு உதவியாக மற்றொருவரும் இருந்தது நிம்மதியைக் கொடுத்தது. அவனுக்குக் குடலைப் புரட்டிக்கொண்டு வருவதைப் பார்த்தவர் "அண்ணே….கொஞ்ச நாளுக்கு அப்புறம் இந்த நாற்றமே..." என்றார்.

அடுக்குமாடி வீடுகளில் இருந்து குவியும் குப்பைகளில் இருந்து ஒருநாள் ஒரு சிறிய காற்பந்து அவனைத் தாண்டி உருண்டோடியது. மைனாக்கள் சிறகடித்தன.

"காற்பந்து வேணும் அப்பா," என்று இரண்டாம் மகன் கேட்டது ஞாபகம் வரவே உடனே அதை எடுத்து வண்டிக்குள் போட்டுக் கொண்டான்.

"சபாஷ்,," மகன் பந்தடிப்பதைப் பார்த்து கைதட்டினான். மறுசுழற்சி செய்யும் குப்பைகளை எடுப்பதற்காக அவசரமாக ஆள் தேவையென்று ராமனை அனுப்பினார்கள்.

"புதுசாதான் இருக்கு!" அந்த இளஞ்சிவப்பு கைப்பையை ஈரத் துணியால் துடைத்தாள் தனலட்சுமி.

பாலி கிளினிக்கில் உதவியாளராக வேலை பார்த்துக்கொண்டு வீட்டையும் பொறுப்புடன் பார்த்துவரும் மனைவியிடம் புதிய பூரிப்பைப் பார்த்தவன் பெரியவனுக்கும் ஒரு தோள் பை கிடைத்தால் நல்லாயிருக்குமே என்று சாப்பாட்டுப் பையுடன் கிளம்பினான்.

"இதை எப்படிங்க செய்யறது"

"இப்படியே சேர்த்துச் சேர்த்து வைச்சுத்தான்,"

"ஆனா... எதோட எத சேர்க்கணும்னு ஒரு படம் இருக்குமே," என்றவள் நெகிழிப் பைக்கு ஒரு முடிச்சைப் போட்டாள். "ரம்யாவிற்கு எல்லாம் தெரியும். நீ நல்லாக் கழுவி பிள்ளைக்குத் தெரியாம எடுத்துவை," என்று கடுகடுப்புடன் கூறியவன், "அப்பா!" என்று இரண்டாம் வகுப்பிற்கான துணைப்பாடம் முடிந்து ஓடி வரும் ரம்யாவை அள்ளி அணைத்தான்.

"ஞாயித்­துக்­கி­ழ­மை­யில கிடைக்­கிற ரெட்டை சம்­ப­ளத்தை விட்­டுட்டு.." தன­லட்­சுமி முகத்­தைச் சுழித்­தாள். சின்­னது பெரிது என்று ஒவ்­வொரு லேகோ­வை­யும் பொருத்­திப் ­பார்க்கும் ரம்­யா­வின் துரு­து­ருப்­பைக் கண் இமைக்­கா­மல் ரசித்­தான்.

"இது என்­ன­வாக இருக்­கும்?"

"இப்ப லேகோ­வில் விதவிதமா வந்­தி­ருக்­குங்க."

"அப்­ப­டியா?" "ம்ம்... அந்­தக் கடை பக்­கம் போனாத்­தானே?" வெடுக்­கென்று தோள்­பட்­டையை இடித்­துக் காட்­டி­னாள். அதைப் பொருட்­ப­டுத்­தா­மல் "ரயிலு!" என்று பச்சை லேகோவை நீட்­டி­னான்.

"ஆமா அப்பா" அடுத்த நாற்பது நிமி­டங்­களில் ரயில் வண்டி புறப்­ப­டு­வ­தற்­குத் தயாராக இருந்­தது. லேகோ தண்­ட­வா­ளங்­களை இணைத்து இணைத்து பாதை உரு­வாக்­கிக்­கொண்­டி­ருந்­தாள் ரம்யா.

"ஓ... இது ரெடி­யா­ன­தும் கையா­லேயே ரயில் வண்­டியை இதுல தள்­ள­னும் அப்­ப­டியா?" ஆமாம் என்று தலை­யாட்­டி­ய­ அவ­ளுக்­குத் தண்­ட­வா­ளத்­தின் வளைவு சரி­யாக வர­வில்லை. அதைப் பார்த்­த­வ­னுக்­குப் பகீரென்­றது "ஒண்ணு குறை­யுது," என்று மனை­வி­யி­டம் சாடை­யில் கேட்­டான்.

"அந்­தப் பைக்­குள்­ளேயே நல்­லாத் தேடிப்­பா­ருங்க," நெகிழி பையைக் கசக்­கி­னான். வாடிய முகத்­து­டன் தரை­யில் விரித்­தி­ருக்­கும் பாய்க்கு அடி­யில் கையை விட்­டுத் துழா­வி­னாள் ரம்யா. ராம­னுக்கு என்ன செய்­வதென்று புரி­யா­மல் "சரி­யாப் பார்த்து வாங்­காம விட்­டுட்­டேனே!" பொய்யை உமிழ்ந்தவனின் கோபப் பார்வை மனைவி மீது பாய்ந்­தது.

"அன்­னைக்­குச் சுத்­தமா கழுவி காயத்­தான் வைச்­சேன்." 'லெகோ'வால் குடும்­பத்­தில் ஏதா­வது கல­வ­ரம் நடந்­து­வி­டுமோ என்­கிற பதற்­றத்­து­டன் அவள் அணிந்­தி­ருக்­கும் நீள­மான கவுனை உத­றி­னாள். ரம்­யா­விற்­குச் சட்­டென்று ஏதோ நினை­விற்கு வரவே தனது பென்­சில் பாக்­ஸைத் திறந்­தாள்.

"குளிக்­கும்­போது எனக்கு ஒரு லெகோ கிடைச்­சது அத ஸ்கூ­லுக்கு எடுத்­துக்­கிட்­டுப்­போய் எல்­லார்­கிட்­டே­யும் காண்­பிச்­சேன்," குற்­ற­வு­ணர்ச்­சி­யில் எது­வும் கேட்க நா எழா­மல் தண்­ட­வா­ளத்­தில் தலை வைத்துப் படுத்­தி­ருப்­ப­தைப்­போல மரண பயம் கவ்­வி­யது.

"சாரி­ப்பா அத லிண்டா கேட்­ட­தும் கொடுத்­துட்­டேன்" கன்­னத்­தில் கைவைத்­தாள். சரிந்து விழுந்­த­வன் எழுந்து அமர்­வ­தற்கு ஓரிரு நாட்­க­ளா­கி­யது. ராமன் ஒரு மாத­மாக ஊதித்­தள்­ளாத பணத்­து­டன் கடைத் தொகு­திக்­குள் நுழைந்­தான். கீழ்­த்த­ளத்­தில் சிறு­வர்­க­ளுக்­காக நடக்­கும் நிகழ்ச்­சி­யைப் பார்ப்பதற்­குப் பிள்­ளை­க­ளு­டன் பெற்­றோர்­களும் உற்­சா­கத்­து­டன் நின்­று­கொண்­டி­ருந்­தார்­கள்.

லேகோ விற்­கும் கடை­யைத் தேடி­னான். கடைத் தொகு­தி­யின் இரைச்­ச­லில் கைப்­பேசி அழைப்பை மூன்று முறை தவ­ற­விட்­ட­தைக் கவ­னித்­த­வன் உடனே அழைத்­தான்.

நண்­பன் கூறு­வது ராமனுக்குச் சரி­யாக விளங்­க­வில்லை.

"என்­னடா சொல்றே?"

"தம்­பிக்கு உடம்பு சரி­யாயிட்டு. நாளை­யி­லி­ருந்து வேலைக்கு நீ வரவேண்­டாம்."

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!