காதல் உருட்டுகள்..!

காதல் உருட்டுகள்..!

1 mins read
Google News Preferred Icon

- பனசை நடராஜன்

உன் பெயர் சொல்லி

அழைக்காததால் கோபப்படுகிறாய்..

அடிக்கடி உச்சரித்தால்

வலிக்குமே உன் பெயருக்கு..!

செல்போன் கதிர்களால்

சிட்டுக்குருவிகள் மடிகின்றனவாம்..

என்னோடு மணிக்கணக்காய்

தொலைபேசு..

உன் குரல் கலந்த கதிரலைகள்

அவை உயிர்த்திருக்க மருந்தாகும்..!!

என் கல்லறையை மட்டுமாவது

இந்தக் கடற்கரை மணலால் கட்டுங்கள்..

நாங்கள் அமர்ந்திருந்த மணற்துகளால்

நான் உயிர்த்தெழக் கூடும்..!!