காற்பந்துத் திருவிழா

காற்பந்துத் திருவிழா

1 mins read
99a049e7-465d-41d2-b39b-5bf028ad9ab4
-

- இரா சத்திக்கண்ணன்

வேகவேகமாக

மின்னல் வேகத்தில்

பறக்கிறது

எட்டுத்திக்கும்

காற்பந்து

பார்ப்போரின்

நெஞ்சம்

படபடக்கிறது

விரிந்த

கண்களுடன்

அவர்களின்

கால்கள் செய்யும்

மாயாஜாலங்களை

கண்டு

ரசிக்கிறது

அவர்களின் கைகள்

ஆயிரமாயிரம்

கண்கள்

வெறித்துப்பார்க்கின்றன

அந்த

கட்டுக்கடங்காத

காற்பந்தை

ட்ரிபிளிங்

பாசிங்

பிரீ கிக்

இன்னும் பல

அழகுதான்

அந்த

காற்பந்திடம்

என்னைத் தின்னும்

கவலைகளை

கொடுத்துவிட்டு

மகிழ்கிறேன்

அந்த

அற்புதத்தை

ரசித்தபடி

சில

ஆத்மார்த்தமான

கண்ணீர்

சில

அற்புத புன்னகைகள்

என

மொத்த

உலகை புரட்டிப்போடும்

காற்பந்து

விசையுறு காற்பந்துக்

கவிதையாய்