பாரதியே...

பாரதியே...

1 mins read
3c2ec602-fbef-46fa-bc5d-fd85e62b1e12
-

- மோகனபிரியா தனசேகரன்

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தார்.

கட்டத்தில் சாய்ந்தனர், காதலில் மாய்ந்தனர்,

வீரம்தொ லைத்தநல் ஆடவர் தாம்.

பணியும் கல்வியும் செல்வமும் பெற்றதனாலே

ஆணுக்கு சமம் நாமெனகூறியார்ப் பரித்தார்;

குலத்தொழில் காலத்தும் கூடிபணி யாற்றியதும்

தெய்வங்களாக்கிப் போற்றிப்பணிந்த தையேன் மறந்தார்.

காதலைக் காசுக்கும் வீரத்தை வஞ்சியர்க்கும்

கூறுகட்டித் தொலைத்து நிற்கும் ஆடவர்கள்

பேதமை உணர்வோடு பேச்சற்ற நிலையோடு

பேராண்மை வேண்டு மீணக்குரல் கேட்கிறதா?

பாரதியே, நீ பாக்கியசாலி?

காசுசேர்க்காமல் கவிதை பாடிவிட்டாய்;

மாசுபடாமலுன் மனைகாத்துக் கொண்டார்;

நீவடித்த புதுமைப் பெண்களின்று

சமுதாய சமன்பாட்டை போட்டிகளாக்கி

அடிமைத்தளைகளை அணுகுண்டால் துளைத்து

வேள்விகளை கேள்விகளாக்கி பூரிக்கின்றார்?

கண்ணைவிற்று சித்திரம் பார்க்கும்

அவர்தம் விந்தை புதுமை

இஃதென்ன வென்று கேட்டுச்சொல்வீர்?!