இருள் விலகும்

இருள் விலகும்

1 mins read
a466ec4b-19a9-4d69-928c-14212b2dc371
-

- கி.சுப்பிரமணியம்

கதிரவன் மேற்குக் கடலினில் மூழ்க

எதிலும் இருளதின் ஏற்றம் - மதியும்

கயிற்றை அரவமாய் கண்களில் காட்டி

மயக்கும் அறிவை விரைந்து

இருட்டினில் தீபத்தை ஏற்றிடும் போது

குருட்டை விலக்கிடும் கொஞ்சம் - பரவும்

ஒளியில் கயிறென உண்மை புகட்டி

தெளிவுறும் சிந்தையும் சற்று

மெய்யும் இதுபோல் மறைந்து கிடந்திடும்

பொய்யுரையின் சேற்றில் புதையுண்டு - வாய்மை

இருட்டினில் வாய்பேசா ஊமையாய் தூங்கி

ஒருநாள் விழித்தெழும் ஒப்பு