வாழ்க்கைப் பாதையிலே

வாழ்க்கைப் பாதையிலே

10 mins read
87ebffac-bdfc-41ac-97c2-ae65638ef496
-

செ. ப. பன்னீர்செல்வம்

அந்த பன்­னாட்டு நிறு­வ­னத்­தின் மேல­தி­காரி சுந்­த­ரம் அன்று தம் அலு­வ­ல­கத்­துக்கு வந்து சேர்ந்த விண்­ணப்­பங்­களை அடுக்கி வைத்­த­போது, அந்­தக் குறிப்­பிட்ட விண்­ணப்­பத்தை மட்­டும் மீண்­டும் மீண்­டும் பார்த்­தார். அந்த வேலைக்­கான தகு­தி­கள் யாவும் அந்த விண்­ணப்­ப­தா­ர­ருக்கு இருந்­த­போ­தி­லும் அதை அனுப்­பி­ய­வர் பெயர்­தான் சுந்­த­ரத்­துக்கு நெரு­ட­லாக இருந்­தது. அவ­ருக்கு முழு அதி­கா­ர­மும் கொடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தால், குறிப்­பிட்ட அந்த விண்­ணப்­பத்தை மட்­டும் நிரா­க­ரித்து, அதற்­கான முத்­தி­ரை­யை­யும் இட்டு, ஏற்­கப்­ப­டாத விண்­ணப்­பங்­கள் பெட்­டி­யில் வைத்து மகிழ்ந்­தார். சில­ரின் மனத்­துக்­குள் இன்­னொரு மனம் இருக்­கும் என்­பார்­களே அது­போ­லத்­தான் அவ­ருக்­கும் இருந்­தது. அந்த மனம் அவரை இன்­னும் ஏதேதோ செய்­யப் பார்த்­தது. அது மேலும் ஏதேதோ செய்ய நினைத்­தது. ஆனா­லும் அவர் தம்­மு­டைய உள்­ம­னத்­தின் விருப்­பத்தை நிறை­வேற்­று­வ­தில் உறு­தி­யாக இருந்­தார். தமக்கு மிக­வும் வேண்­டிய நண்­பன் வேணு­வின் மகள் சுந்­த­ரியை எப்­ப­டி­யும் அந்த வேலை­யிலே சேர்த்­து­வி­டவே அவர் விரும்­பி­னார்.

நண்­ப­ருக்­குக் கொடுத்த வாக்­கைக் காப்­பாற்ற வேண்­டி­யது அவ­ருக்கு முக்­கி­ய­மா­கப் பட்­டது. சுந்­தரி தன் அலு­வ­ல­கத்­தில் சேர்ந்­து­விட்­டால், மெது­வாக அவ­ளைத் தம்­மு­டைய மரு­ம­க­ளா­க­வும் ஆக்­கி­வி­ட­லாம் என்­பது அவ­ரின் ஆசை, இப்­ப­டிப்­பட்ட எண்­ணம் தம் மனத்­தில் இருக்­கும்­போது, தம்­மு­டைய அலு­வ­ல­கத்­தில் பியூ­னாக தம்பி வேலை­யில் இருந்து ஓய்­வு­பெற்­றுள்ள முத்­து­வின் மகன் மரு­த­னுக்கா அந்த வேலை­யைத் தர­மு­டி­யு­மென்று அவ­ருக்கு ஒரு­வித மனப்­போக்கு இருந்­தது. அந்த நேரத்­தில்­தான் தலைமை நிலை­யத்­தி­லி­ருந்து அவ­ருக்­குத் தொலை­பேசி வந்­தது, மிஸ்­டர் சுந்­த­ரம், நீங்க தேர்ந்­தெ­டுத்த விண்­ணப்­ப­தா­ரர்­களை நேர்­கா­ண­லுக்கு வரச் சொல்­லுங்­கள்,தேர்ந்­தெ­டுக்­கா­த­வர்­க­ளுக்கு ஏதா­வது கார­ணம் காட்டி, நிரா­க­ரிப்­புக் கடி­தம் அனுப்பி­ வி­டுங்­கள் என்று தலைமை நிலைய உயர் அதி­காரி இப்­ரா­கிம் கான் கூறி­னார்.

சரி சார்-- மறு­மு­னை­யில் அவ­ரின் தொலை­பேசி வைக்­கப்­பட்­ட­வு­டன் சுந்­த­ரத்­துக்­குக் கூடு­தல் துணிச்சல் வந்­து­விட்­டது. அவர் அதற்­கா­கத்­தானே இவ்­வ­ளவு நேர­மும் காத்­துக்­கி­டந்­தார். வீட்­டுக்கு மெது­வா­கப் போக­லாம் என்று முடி­வெ­டுத்­த­வ­ராய், தாம் தேர்வு செய்­த­வர்­க­ளுக்­கான நேர்­கா­ணல் கடி­தங்­க­ளைத் தயார் செய்­தார். தேர்வு செய்­யப்­ப­டா­த­வர்­க­ளுக்­கும் கடி­தங்­களை அனுப்ப சுந்­த­ரம் ஆயத்­த­மா­னார். இன்­றைய வேலையை இன்றே செய்­து­விட்­டால், நாளை அதைப்­பற்றி அக்­கறை கொள்ள வேண்­டி­ய­தில்லை என்று அவர் நினைத்­தார். அன்று நெடு­நே­ரம் வேலை செய்­த­தால் மறு­நாள் சற்று நேரங்கழித்து வர­லாம் என்­றும் அவர் முடி­வெ­டுத்­தார். கடி­கா­ரத்­தைப் பார்த்­தார்.

இரவு மணி எட்­டரை ஆகி­யி­ருந்­தது. மேசை­யில் இருந்­த­வற்றை ஒழுங்­கு­ப­டுத்­தி­விட்டு வெளியே வந்­தார். வாசலை நோக்கி ஒரு வாடகை வண்டி வந்­து­கொண்­டி­ருந்­தது. அவர் வசித்து வந்த மண்ணு மலை பகு­திக்­குச் செல்ல அங்­கி­ருந்து நிறைய பேருந்து சேவை­கள் இருந்­தா­லும் அன்று கூடு­த­லாக வேலை பார்த்­து­விட்­ட­தால் டாக்­சி­யி­லேயே போக­லாம் என்று நினைத்­தார்.

அந்த டாக்­சியை நிறுத்­தும்­படி கை காட்­டி­னார். அந்த டாக்சி அரு­கில் வந்து நின்­ற­தும் அதன் ஓட்­டு­ந­ரைப் பார்த்­த­தும் முகம் மாறி­விட்­டது.

குற்­றம் உள்ள மனசு என்­னவோ செய்­தது. அதைச் செலுத்தி வந்­த­வர், பழைய ஊழி­யர் முத்­து­வின் மனைவி மாலதி. பெரிய கிராணி சுந்­த­ரத்­தைப் பார்த்­த­தும், மனத்­தில் மகிழ்ச்சி, தம் கண­வ­ரின் முன்­னாள் தலைமை அதி­காரி என்­னும் மரி­யாதை.

"வணக்­கம் அய்யா, எங்கே போக­ணும், போத்­தோங் பாசி­ருக்கா," என்று கேட்­ட­வாறு, தம் வண்­டியை நிறுத்­தி­னார்.

"பர­வா­யில்லை நான் வேறொரு நண்­ப­ருக்­கா­கத் தான் காத்­தி­ருக்­கின்­றேன். டாக்­சி­யில் இங்கு வந்து என்­னைக் கூட்­டிப் போவ­தா­கக் கூறி­னார். அவர்­தான் வந்­து­விட்­டாரோ என்று உங்­கள் டாக்­சிக்­குக் கைகாட்­டி­விட்­டேன்.

நன்றி நீங்­கள் புறப்­ப­டுங்­கள் என்று கூறி­னார், சுந்­த­ரம். எதையோ மறைப்­ப­தற்கு, அவர் மழுப்­பு­வது நன்­றா­கத் தெரிந்­தது.

சரி­சார், நான் புறப்­ப­டு­கி­றேன். இன்று இரவு எங்­கள் வாடகை வண்டி சங்­கத்­தின் புத்­த­கம் படிப்­போம் இயக்­கத்­தின் கூட்­டம் நடக்­கிறது. அதில் நான் கலந்­து­கொள்ள வேண்­டும். இப்­போதே நேர­மா­கி­விட்­டது என்று கூறி­ய­வாறு நான் புறப்­ப­டு­கின்­றேன் என்று கூறி­விட்டு வண்­டியை வேக­மா­கச் செலுத்­தி­னார், மாலதி.

ஏதோதோ சிந்­த­னை­க­ளு­டன் பெரிய கிராணி சுந்­த­ரம் சாலை­யைக் கடந்­தார். பிறகு பேருந்து நிறுத்­தத்­தின் பக்­கத்­தில் சென்­று­அங்­கி­ருந்த இருக்­கை­யில் சிறிது நேரம் அமர்ந்­தார்.

முத்­து­வின் மகன், மரு­து­வுக்­குக் கடி­தத்தை அனுப்பி வைக்­கா­மல், அதை நிரா­க­ரித்­தது சரி­தானா என்று அவ­ரின் உள்­ம­னம் கேள்வி கேட்­டது. ஆனால், நெடு­நா­ளா­கத் திரு­ம­ணம் ஆகா­மல் இருக்­கும் தம் ஒரே மகன் அன்­ப­ர­சுக்கு ஏற்­ற­வ­ளா­கச் சுந்­தரி இருப்­ப­தால், ஒரே கல்­லில் இரு மாங்­காய்­க­ளைப் பெற அவர் முடி­வெ­டுத்­தது, அவ­ரைப் பொறுத்­த­வரை சரி­யா­கவே பட்­டது.

இருந்­தா­லும் அவ­ரின் மனக்­குரங்கு மரத்­துக்கு மரம் மாறி மாறி தாவிக்கொண்­டி­ருந்­தது. நேர் காண­லின்­போது, சுந்­த­ரி­யைத் தேர்வு செய்­யா­மல் அதி­கா­ரி­கள் வேறு யாரை­யா­வது தேர்வு செய்து­விட்­டால் என்ன செய்­வது என்று குழம்­பி­னார். ஆனா­லும் அந்த நேர்­கா­ணல் நிகழ்­வில் தாமே முக்­கிய அதி­கா­ரி­யாக இருக்­கப்­போ­வ­தால், அதைப் பற்­றிக் கவ­லைப்­ப­டு­வது தேவை­யில்லை என்று அவ­ரின் மற்­றொரு மனம் கூறி­யது.

முத்­து­வின் மக­னுக்கு வேறொரு வேலை கிடைக்­கா­மலா போய்­விடும்?

முத்து மட்­டும் என்ன? அலு­வ­ல­கப் பைய­னா­கத் தம்பி வேலை­யில்­தான் இருந்­தாரே தவிர, அவ­ரு­டைய பிள்­ளை­களை நன்­றா­கப் படிக்க வைக்க அரும்­பாடு பட்­டார்.மூத்த மகள் துள­சி­யம்மா, தொழிற்­கல்­லூ­ரி­யில் பயின்று கல்வி நிலைய ஊட­கம் ஒன்­றில் நல்ல வேலை­யில் இருக்­கி­றாள்.

அவ­ளின் தம்­பி­யா­கிய மரு­தன், பொரு­ளா­தா­ரப் பாடத்­தைச் சிறப்­பா­கப் படித்­துப் பட்­ட­தா­ரி­யாக உள்­ளான்.

இவை யாவும் பெரிய கிரா­ணிக்­கும் தெரி­யும். ஆனா­லும் சுய­ந­லம் பொது­ந­லத்தை ஓரங்­கட்டி விட்­டது.

நேர்­கா­ணல்­நாள் வந்­தது. சுந்­தரி மிகச் சிறப்­பா­கவே செய்­தாள். வினாத்­தாள் இப்­படி இப்­படி இருக்கு­மென்று முன்­கூட்­டியே தெரி­வித்து நல்ல பயிற்­சி­யைத் தந்­து­விட்ட சுந்­த­ரத்­தால்­தான் அது சாத்­தி­ய­மா­யிற்று என்­பது வேறு யாருக்­கும் தெரி­யாது.

புதி­தாக வேலைக்­குச் சேர்ந்த சுந்­த­ரிக்கு அலு­வ­ல­கத்­தில் இருந்த அத்­துணை துறை­க­ளி­லும் பயிற்சி கிடைத்­தது. அவ­ளுக்கு எல்லா வற்­றை­யும் விழுந்து விழுந்து கற்­பித்த சுந்­த­ரத்தை ஒரு சிலர், ஒரு மாதி­ரி­யா­கத்­தான் பார்த்­தார்­கள்.

நேர்காண­லுக்கு அழைக்­கப்­படா­த­வர்­கள், ஒரு வேளை தங்­க­ளுக்­குப் போதிய தகுதி இல்­லை­போ­லும் என்று நினைத்­தார்­கள். ஆனால் முத்­துக்­கு­டும்­பத்­தி­னர் மட்­டும் மனம் கலங்­கி­னார்­கள்.

எல்­லாத் தகு­தி­களும் இருந்­தும்­கூட, தங்­கள் மகன் மரு­தனை நேர்­கா­ண­லுக்கு அழைக்­கா­தது, அவர்­க­ளுக்கு வேத­னை­யாக இருந்­தது. அது­வும் பல ஆண்­டு­க­ளாக முத்து வேலை செய்த பன்­னாட்டு நிறு­வ­னத்­தில் அவ­ரின் மக­னுக்கே வாய்ப்பு இல்­லையே என்று அவர்­கள் ஏங்­கி­னர். ஆனால், மரு­தன் அதைப்­பற்­றி­யெல்­லாம் கவலை படவே இல்லை. ஏன் இப்­ப­டிக் கவலைப்பட ­வேண்­டும்? இது இல்லை என்­றால் இன்­னொரு வேலை கிடைக்­கா­மலா போகும்?

"அதற்­கில்லை மருதா அப்பா வேலை செய்த இடத்­தில் நீயும் ஒரு நாள் பெரிய கிரா­ணி­யா­கப் பணி­யில் இருக்க வேண்­டு­மென்று அப்பா நினைத்­தார். அது நிறை­வே­றா­மல் போய்­விட்­டதே என்று அக்­காள் துள­சி­யம்­மாள் வருத்­த­மா­கக் கூறி­யது, மரு­த­னுக்கு ஒரு மாதி­ரி­யாக இருந்­தது.

அப்­போது அடுத்த அறை­யி­ல் இருந்து உள்ளே வந்­தார், தந்தை முத்து.

"தம்பி மருதா, உன்­னு­டைய சர்ட்­டி­பிக்­கேட் வகை­களை எடுத்­துக்­கொண்டு உடனே என்­னோடு புறப்­படு" என்­றார் அவர்.

என்­னப்பா இது இராத்­திரி எட்டு மணிக்கு மேலே ஆகுது. இப்போ, எங்கே புறப்­ப­ட­ணும்?

"சொன்னா கேளுப்பா, ம் உடனே புறப்­படு. பெரிய கிராணி சுந்­த­ரத்­தைப் பார்த்­து­விட்டு வரு­வோம்" தன் தந்­தை­யின் மனத்­தைப் புரிந்­து­கொண்­டான் மரு­தன்.

" அப்பா, பெரிய கிராணி ஒரு மாதி­ரி­யா­ன­வர்னு பேசிக்­கி­றாங்­களே, அவ­ரைப் போயிப் பார்த்து என்ன ஆகப் போகுது, எனக்கு அது சரி­யா­கப் படலை என்று மரு­தன் தயக்­கத்­தோடு கூறி­னான்.

மருதா, நான் சொல்­வ­தற்கு மதிப்­புக் கொடுப்­பியா, மாட்­டியா, புறப்­ப­டச் சொன்னா, உடனே புறப்­படு... சற்­றுக் கோபத்­து­டன் பேசி­னார், மரு­த­முத்து.

தந்தை சொல்­மிக்க மந்­தி­ர­மில்லை என்­பதை மனத்­திற்­கொண்டு, எல்­லா­வற்­றை­யும் எடுத்­துக்­கொண்டு மரு­தன் புறப்­பட்­டான். வெளியே சென்­றி­ருந்த தாயார் தம் வாடகை வண்­டி­யு­டன் வீட்­டுக்கு வந்­தி­ருந்­தார்.

மிக நேர்த்­தி­யாக அனை­வ­ரை­யும் ஏற்­றிக்­கொண்டு பெரிய கிராணி சுந்­த­ரம் வீட்­டுக்­குப் போய்ச் சேர்ந்­த­னர்.

மரு­தன் மட்­டும் சுந்­த­ரம் கிராணி என்ன சொல்­லப் போகி­றாரோ என்று பல­வாறு எண்­ணிக் கொண்­டி­ருந்­தான்.

"யாரது, இந்த நேரத்­தில், - முத்­து­வின் குரல் சரி­யா­கக் கேட்­கா­த­தால், சுந்­த­ரம்­தான் உரக்­கப் பேசி­னார்.

அய்யா, பெரிய கிராணி, நான்­தான் முத்து வந்­தி­ருக்­கேன்,

பெரிய கிரா­ணி­யின் முகம் மாறி­விட்­டது, இருந்­தா­லும் வேண்டா வெறுப்­பா­கக் கத­வைத் திறந்­தார், சுந்­த­ரம்.

" என்­னப்பா, என்ன விஷ­யம்" வந்­த­வர்­களை வாங்க என்று சொல்­லக்­கூட அவ­ருக்கு வாய் வர­வில்லை. அவர் செய்­தது அவ­ருக்­குத் தானே வெளிச்­சம்?

அவ­ரின் பார்வை எதை எதையோ, கண்­ணோட்­ட­மிட்­டதை மரு­தன் பார்த்­துக் கொண்­டு­தான் இருந்­தான்.

என் கையில் எது­வு­மில்லை, வேலை­யில்லை என்று கம்­பெனி கடி­தம் தந்­து­விட்ட பிறகு, நான் என்ன செய்ய முடி­யும்?, முத்து பேசாம உன் மகனை வேறு வேலைக்­குப் போகச் சொல்லு. - வேண்டா வெறுப்­பா­கப் பேசி­னார்,

சுந்­த­ரம். அவர் எதைச் சொல்ல வரு­கி­றார், என்­பது மரு­த­னுக்­குப் புரி­ய­வில்லை,

தன் தந்­தைக்­காக அவன் பொறு­மை­யைக் கடைப்­பி­டித்­தான். இருந்­தா­லும் அவ­னால் தொடர்ந்து வெறு­மனே இருக்க முடி­ய­வில்லை.

"என்ன சார், நேர்­கா­ண­லுக்­குக் கூப்­பி­டாம, நான் அந்த வேலைக்­குத் தகுதி இல்­லா­த­வன் என்று முடிவு செய்­தது நல்­ல­தா­கப் பட­வில்­லையே," என்­றான் அவன். மரு­தன் பேசி­யது பெரிய கிராணி சுந்­த­ரத்தை என்­னவோ பண்­ணி­யது.

"மன்­னிக்­க­வேண்­டும், இதற்­கு­மேல் வேலை விஷ­ய­மாக இங்கே நின்னு பேசு­றது சட்­டப்­ப­டித் தப்பு" - சொல்லி முடித்­தாரோ இல்­லையோ, தன் அறைக்­குள் போய்­விட்­டார். அங்கே அந்த நேரத்­தில் பெரிய கிரா­ணி­யின் மனைவி மாதவி தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யில் மூழ்­கி­யி­ருந்­தார். வர­வேற்பு அறை­யில் நடந்­தது எது­வுமே அவ­ருக்­குத் தெரிந்­த­தாக அவர் காட்­டிக்­கொள்­ள­வில்லை. ஒரு­வேளை இது கண­வ­ரின் வேலை இடத்­துச் சமாச்­சா­ரம் என்று நினைத்­தாரோ என்­னவோ!

இவ்­வ­ள­வும் நடந்­த­பி­றகு, மரு­த­னுக்­கும் அவன் தந்­தைக்­கும் அங்கு நிற்­கப்­பி­டிக்­க­வில்லை. கலங்­கிய நெஞ்­சத்­தோடு, கார் நிறுத்து மிடத்­தில், காத்­தி­ருந்த தங்­கள் டாக்­சி­யைத் தேடிச் சென்­றார்­கள். வீட்­டுக்கு வரும் வழி­யில் வழி­நெ­டு­கத் தாய்க்­கும் தந்­தைக்­கும் ஆறு­தல் கூறி­ய­படி வந்­தான் மரு­தன். சகோ­தரி துளி­சி­யம்­மாள் மட்­டும், அனைத்­தை­யும் கேட்­டுக்­கொண்டே, வந்­தாள், ஆண்­டு­கள் ஓடின. சிங்­கப்­பூ­ரி­லுள்ள பல பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் ஆட்­கு­றைப்­பில் ஈடு­பட்­டன. அந்த நேரம் பெரிய சம்­ப­ளம் எடுத்­துக்­கொண்­டி­ருந்த பெரிய கிராணி சுந்­த­ர­மும் வேலை­யி­லி­ருந்து நிறுத்­தப்­பட்­டார். அவ­ருக்கு ஓய்­வூ­திய தொகை­யா­கக் கொடுக்­கப்­பட்ட பணத்தை வைத்­துக்­கொண்டு அவ­ரும் அவ­ரின் வய­தான மனை­வி­யும் நாட்­க­ளைக் கடத்தி வந்­த­னர். இருந்­தா­லும் பணம் போத­வில்லை.

ஆடம்­பர வாழ்க்கை வாழ்ந்­து­விட்டு திடீ­ரென்று சிக்­க­ன­மாக வாழ அவர்­க­ளால் முடி­ய­வில்லை. தாம் அன்­போடு வேலை வாங்­கித் தந்து மரு­ம­க­ளாக்­கிக்­கொண்ட சுந்­தரி, கொஞ்ச நாளி­லேயே கண­வ­னு­டன் தனிக்­கு­டித்­த­னம் சென்­று­விட்­டாள். அதன் பிறகு அவ­ரி­டம் கூட சொல்­லிக்கொள்­ளா­மல், மக­னும் மரு­ம­களும் வெளி­நாட்­டில் நல்ல வரு­மா­னம் கிடைக்­கும் என்று எண்­ணி­ய­வர்­க­ளாய் சிங்­கப்­பூரை விட்­டு­விட்டு, கன­டா­வுக்­குச் சென்று விட்­ட­னர்.

அதன் பின்­னர், மிகப் பெரிய வீட்­டில் சுந்­த­ர­மும் அவ­ரின் மனை­வி­யும் தனி­மை­யில் வாட ஆரம்­பித்­த­னர். ஓர் அறையை மட்­டும் வெளி­யா­ருக்கு வாட­கைக்கு விட்­ட­னர். கைச் செல­வுக்கு ஓர­ளவு பணம் கிடைத்­தா­லும் அவர்­க­ளுக்கு இது­வரை இருந்து வந்த நிம்­மதி எங்கோ சென்று விட்­ட­து­போல தோன்­றி­யது.

மீண்­டும் வேலைக்­குச் சென்­றால் என்ன என்று வீட்­டில் வாட­கைக்கு வந்­த­வர் அவ­ருக்கு ஆலோ­சனை கூறி­னர். அவர் மனை­வி­யும் அது சரி­தானே என்­றார்.

உங்­கள் அனு­ப­வத்­துக்கு ஏன் வேலைக்­குச் செல்­லக்கூடாது என்று அவ­ரும் கேட்­டார். அந்த நேரம் பார்த்து புதிய நிறு­வ­ன­மொன்று அனு­ப­வம் உள்­ள­வர்­க­ளைத் தேடு­வ­தாக வேலைக்­கு­ரிய விளம்­ப­ரம் செய்­தி­ருந்­தது.

சுந்­த­ரம் மனை­வி­யின் வற்­பு­றுத்­த­லின்­பே­ரில் விண்­ணப்­பம் செய்­தார்.

அந்த நிறு­வ­னம், அவரை உடனே நேர்காண­லுக்கு வரு­மாறு அவரை அழைத்­தி­ருந்­தது.

நேர்­கா­ணல் அறைக்­குச் சென்­றார். வணக்­கம் கூறி­விட்டு அங்கு அமர்ந்­தி­ருந்­த­வர்­க­ளைப் பார்த்த அவ­ருக்கு ஒரே அதிர்ச்சி, அங்கே தான் வேலை கொடுக்­கா­மல் ஏமாற்­றிய மரு­தன் அந்த அதி­கா­ரி­களில் ஒரு­வ­ராக அமர்ந்­தி­ருந்­தது, சுந்­த­ரத்­துக்கு வியப்­பாக இருந்­தது.

நிச்­ச­ய­மாக அவர்­கள், அவ­ருக்கு வேலை தர மாட்­டார்­கள் என்று அவர் நம்­பி­னார்.

மிஸ்­டர் சுந்­த­ரம், இது ஒரு புதிய நிறு­வ­னம், இருந்­தா­லும் இங்கு நல்ல அனு­ப­வம் உள்­ள­வர்­களை வேலைக்கு எடுத்து இளை­யர்­க­ளுக்கு வழி­காட்­டும் வகை­யில் நிறு­வ­னத்தை நடத்த உள்­ளோம். உங்­கள் அனு­ப­வம் எங்­க­ளுக்­குப் பிடித்­தி­ருந்­தது. அது­தான் அழைத்­தோம்," என்­றான், மரு­தன்.

சரி உங்­க­ளுக்கு எவ்­வ­ளவு சம்­ப­ளம் வேண்­டும் என்று கேட்­டார், மற்றோர் அதி­காரி. எங்­கள் விதி­மு­றை­க­ளுக்­கேற்ப உங்­க­ளால் பணி­யாற்ற முடி­யுமா? என்று கேட்­டார், மற்­றொ­ரு­வர்.

எதற்­கும் பதில் கூறா­மல் அமைதி காத்­தார் சுந்­த­ரம். எத்­தனை வேகத்­தோடு நேர்­கா­ண­லுக்கு வந்­தாரோ, அத்­தனை வேகத்­தில் மரு­த­னைப் பார்த்­த­தும் அடங்­கிப் போனார்.

நிச்­ச­யம் தமக்கு வேலை கிடைக்­காது என்று அவர் மனம் சொல்­லிற்று.

வர மறுத்த புன்­மு­று­வலை ஒப்­புக்கு வர­வ­ழைத்­துக்­கொண்டு அங்­கி­ருந்து விரைந்து புறப்­பட்­டார், பெரிய கிராணி சுந்­த­ரம்.

முத்­து­வின் மகன் மரு­தன் இன்று இவ்­வ­ளவு பெரிய ஆளாகி விட்­டானா?

சுந்­த­ரத்­தால் நம்­பவே முடி­ய­வில்லை. பத்­தாண்­டுக்கு முன், அவனை வேலைக்கு எடுக்­கா­மல், தமக்கு மரு­ம­க­ளாக வர­வேண்­டும் என்று நினைத்­த­வளை வேலைக்கு எடுத்­தது, அவ­ரின் நினை­வு­களில் அலை மோதி­யது.

உள்­ம­னத்­தில் பல வேத­னை­கள் சுற்­றிச் சுற்­றிச் சுழன்­றன.

சொந்த மக­னும் மரு­ம­களும் தம்­மை­யும் தம் மனை­வி­யை­யும்­விட்­டு­விட்டு வெளி­யூர் சென்­று­விட்ட வேதனை அவரை வாட்­டத் தொடங்­கி­யது.

நிச்­ச­யம் அந்த மரு­தன் வேலை தர­மாட்­டான் என்று அவர் பிதற்ற ஆரம்­பித்­தார். அந்த சம­யத்­தில் பதி­வுத் தபாலை எடுத்­துக்­கொண்டு அஞ்­சல்காரர் வந்­தார்.

கத­வைத் தட்­டும் ஒலி கேட்­ட­தும் சுந்­த­ரம் அதைத் திறந்­தார். கடி­தத்­தைப் பெற்­றுக்­கொண்டு கையெ­ழுத்து இட்­டார். மனை­வி­யி­டம் கொடுத்து அதைப் பிரிக்­கச் சொன்­னார்.

பிரித்த கடி­தத்தை கண­வ­ரி­டமே கொடுத்­தார், மனைவி மாதவி.

*

அன்­புள்ள திரு சுந்­த­ரம்,

நானும் எங்­கள் குழு­வி­ன­ரும், உங்களை எங்­கள் நிறு­வ­னத்­தில் வேலைக்கு எடுத்­துள்­ளோம். உங்­க­ளுக்­குச் சம்­ம­த­மா­யின் உடனே வந்து வேலை­யில் சேர­வும். உங்­கள் வரு­கைக்­கா­கக் காத்­தி­ருக்­கின்­றோம்.

இப்­ப­டிக்கு

வட்­டார நிர்­வாகி

மரு­தன்

*

அனைத்­து­ல­கத் தொழில் நிபு­ணத்­துவ ஆலோ­சனை நிறு­வ­னம் அனுப்­பிய கடி­தம் கண்டு அதிர்ந்து போனார், சுந்­த­ரம்.

தான் மரு­த­னுக்கு இவ்­வ­ளவு இடை­யூறு செய்­தி­ருந்­தும் தம்மை வேலைக்கு எடுத்­தி­ருப்­பது வியப்பை அளித்­தது. ஒரு வேளை வேலைக்கு எடுத்­த­பின் தொல்லை தந்­தால், அவ­ருக்­குப் பலவித­மான குழப்­பங்­கள் வந்து வந்து போயின. இருந்­தா­லும், துணிச்­ச­லோடு வேலைக்­குப் புறப்­பட்­டார்.

வேலை இடத்­தில் அவ­ருக்­குத் தனி அறை­யும் வச­தி­களும் செய்து தரப்­பட்­டி­ருந்­தன.

ஒரு வாரம் ஓடி­யது. எந்தவிதத்­தி­லும் மரு­தன் அவ­ரி­டம் பழைய நினை­வு­க­ளைக் கொண்­டு­வ­ரவே இல்லை.

வேலை தொடர்­பான விவ­ரங்­க­ளைத் தவிர, வேறு எதை­யும் அவ­ரி­டம் அவன் கேட்­கவே இல்லை.

அவன் இவ்­வ­ளவு பெருந்­தன்­மை­யாக நடந்­து­கொண்­டதே அவ­ருக்கு மனத்­தில் தண்­டனை கொடுத்­த­து­போல இருந்­தது.

இந்த உல­கில் இப்­ப­டி­யும் மனி­தர்­கள் இருப்­பார்­களா, வாழ்க்­கைப் பாதை­யில் பழை­ய­ன­வற்றை நினைக்­கா­மலே காலத்தை ஓட்­டு­வோ­ரும் உள்­ள­னரா என்று சுந்­த­ரம் அதி­ச­யித்­துக்­கொண்­டி­ருந்­தார்.

மரு­தன் மேலும் பல இளை­யர்­களை முன்­னேற்­றப் பாதை­யில் பயிற்­று­வித்­துக் கொண்­டி­ருந்­தான். சுந்­த­ரம் நவீன இளை­யர்­களைப் படித்­துக்­கொண்­டி­ருந்­தார்.