புத்தாண்டுப்பேரழகு 2023

புத்தாண்டுப்பேரழகு 2023

1 mins read
1a90d0bf-76ed-493e-b47b-0fcb3d7b9da9
-

- இரா சத்திக்கண்ணன்

யாவும் அழகு!

ஆனந்தமாய்

முதல் ஆகாயம்

நம்பிக்கையாய்

முதல் விடியல்

குளிர்ச்சியாய்

முதல் பனி

புன்னகையாய்

முதல் மலர்

மகிழ்ச்சியாய்

முதல் மழை

இனிமையாய்

முதல் குயில்பாட்டு

வளப்புடன்

முதல் வளர்பிறை

கனிவுடன்

முதல் கவிதை

யாவும் அழகு!

இருந்தும்

பகிர்தலும்

ஈதலும்

கொணரும்

இன்பமே பேரழகு!