பெலே

பெலே

1 mins read
808e36ab-b60f-461b-bc3a-1b9a67c9bddc
-

ஒவ்வொருமுறை

நீ களமிறங்கியபோதும்

இடிமின்னலுடன்

கோல்மழை

கொட்டித்தீர்த்தது

உன்னைப்

பார்த்து ரசித்த

கோல்போஸ்ட்கள்

மெய்மறந்து நின்றதால்

உன் கால்கள்

செய்த

மாயஜாலத்தை

பேசிக்கொண்டிருக்கும்

நீ

முத்தமிட்ட பந்துகள்

உன் தழுவலுக்காக

காத்திருந்தன

எத்தனையோ பந்துகள்

உன்

அசுரவேகத்தில்

காற்பந்தாட்டம்

புத்துயிர் பெற்றது

உன்

திறமையால் நீ

உலகை கட்டிப்போட்டாய்!

உனை அறியாதோர்

உளரோ?

உன் குரல்

இனவாதத்திற்கெதிராக

ஓங்கி ஒலித்தது!

உன் புன்னகை

அமைதிக்காக

ஆரவாரம் செய்தது!

உன்

பரந்து விரிந்த

மனிதாபிமானம்

எப்போதும்

போற்றப்படுகிறது!

உனைக்

காற்பந்தாட்டக்கடவுளென்று

என்றென்றும்

போற்றும் உலகம்!

- இரா சத்திக்கண்ணன்