வயல்வெளியில் விதைத்ததெல்லாம்
வகை வகையாய்ப் பல ரகங்கள்!
புஞ்சை, நஞ்சை என்றே
புரிந்தே செயல்பட்ட விதங்கள்!
உரமான எண்ணத்தில் உருவானதோ
ஊடுபயிர் உன்னதங்கள்!
சமுதாயச் சிந்தனையோடு
சதிராடி வரும் உழவன்!
உதிராமல் இருப்பதற்கு
உயிர்களுக்கான இறைவன்.
- சித. அருணாசலம்

