வானவில் நினைவுகள்!

வானவில் நினைவுகள்!

1 mins read
9599a6cf-ba31-4ff6-ba51-bcd0833186e9
குவைத்தில் கடும் மழை பெய்த பின்னர் காணப்பட்ட வானவில். படம்:ஏஎஃப்பி -

சாளரத்தின் திரை நீக்க;

காட்சி தரும் வானம்,

வண்ணம் சேர்க்கும் மேகம்,

எங்கும் நிறைந்திருக்கும் காற்று,

ஈரம் சுமக்கும் நடைபாதையில்

மழையின் சுவடுகள் - என

சுழலும் பூமியில் மலரும்

நினைவுகளாய்

வானவில்!

- பிரேமா மகாலிங்கம்