உண்ணும்போதெல்லாம் நினைக்கப்படும்
உழவர் பெருமக்களுக்கு
உளமார நன்றிசொல்வோம் இந்த
இனிய தைப்பொங்கல் நாளில்!
மஞ்சள்கொத்தும் இஞ்சிக்கொத்தும்
மண்பானையை அலங்கரிக்க
பச்சரிசி, வெல்லத்துடன் பாலும் நெய்யும் சேர்த்து
பக்குவமாய்ப் பொங்குவோம்
பொங்கலோ பொங்கலென்று!
- கலைவாணி இளங்கோ

