சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்

சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்

fallback-0
" சீனமக்கள் கொண்டாடும் முயலாண்டை, சேர்ந்துநாம் வரவேற்போம் ஒன்றிணைந்தே!" படம்: ஏஎஃப்பி

22 Jan 2023 - 5:30 am

1 mins read

தெருவெல்லாம் வண்ணமிகு தோரணங்கள்

தெரிகிறதே தொன்மைமிகு பண்பாட்டில்!

தெருக்களிலே மனங்கவரும் ஆட்டங்கள்

தெவிட்டாத ஆசியத்தின் வெளிப்பாடு!

இருவாரப் பெருவிழா நாடெங்கும்

இணைத்திடுதே குடும்பங்கள் ஒன்றாக

இருக்கின்ற பந்தத்தை இறுக்கமாக

இதயங்கள் மலர்கின்ற புத்தாண்டு!

சீனமக்கள் கொண்டாடும் முயலாண்டை

சேர்ந்துநாம் வரவேற்போம் ஒன்றிணைந்தே!

- சீர்காழி உ செல்வராஜு