நம்ம நாட்டுக்கொரு பாட்டப் போடு

நம்ம நாட்டுக்கொரு பாட்டப் போடு

1 mins read
00c2354d-e565-4800-8907-c0fe6ee3de08
" உலக வரைபடத்தில் சின்னப்புள்ளி இந்த ஊரு, உலகே வியக்குதம்மா வளந்து நிக்கும் பெருமை கேளு" படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

- நெப்போலியன்

பல்லவி

நம்ம நாட்டுக்கொரு பாட்டப் போடு

சிங்கை தேசம் போல ஊரு ஏது...

ஒழுக்கமான ஊரு பாரு

இங்கே ஒத்துமதான் ஆணி வேரு...

நம்ம நாட்டுக்கொரு பாட்டப் போடு

சிங்கப்பூர போல ஊரு ஏது...

உசரமான ஊரு பாரு

இங்கே உழைப்புதான வெற்றி கேளு...

சரணம் 1

பச்ச பசபசக்க பளிங்கு போல ரோட்டப் பாரு

சிரிச்ச முகமா எங்கும் சுதந்திரமா சனத்தப் பாரு

தப்பு தண்டா பண்ணா வந்து நிக்கும் போலீஸ் காரு

தகப்பன்சாமி போல தேசத்தந்தை லீயின் பேரு

குட்டி இந்தியாவில் லிஷாவோட சேவ ஜோரு

எட்டுத் திக்கும் இங்கே இறைவனோட ஆசி நூறு

தந்தனத் தந்தன தந்தனத் தந்தானா...

தந்தனத் தந்தன தந்தனத் தந்தானா...

தந்தனத் தந்தன தந்தனத் தந்தானா...

தந்தனத் தந்தன தந்தனத் தந்தானா...

சிங்கப்பூரா சொர்க்கத் தீவா!

சொக்கவைக்கும் தங்க ஊரா!

சரணம் 2

உலக வரைபடத்தில் சின்னப்புள்ளி இந்த ஊரு

உலகே வியக்குதம்மா வளந்து நிக்கும் பெருமை கேளு

மக்க மனசெல்லாம் அன்பாலே செஞ்ச வீடு

ஒருத்தருக்கொருத்தர் இங்கே உதவுகின்ற பண்பைப் பாரு

நாளைக்கு என்ன வரும் இன்னைக்கே நினைச்ச ஊரு

மக்களை பாத்துக்கிடும் காவல் தெய்வம் சிங்கப்பூரு

தந்தனத் தந்தன தந்தனத் தந்தானா...

தந்தனத் தந்தன தந்தனத் தந்தானா...

தந்தனத் தந்தன தந்தனத் தந்தானா...

தந்தனத் தந்தன தந்தனத் தந்தானா...

சிங்கப்பூரா சொர்க்கத் தீவா!

சொக்கவைக்கும் தங்க ஊரா!